G. Sundarrajan Profile picture
Climate activist, environmentalist, Social activist, Entrepreneur, books, travel. views are personal #SayNo2ParanthurAirport #StopAdaniSavePulicat

Apr 24, 2021, 7 tweets

#கடல்_அட்டை (Sea cucumber):-
பார்ப்பதற்கு நீண்ட உருளையான உருவத்துடன் (உருண்டை வடிவ சிற்றினங்களும் உண்டு) காணப்படும் இக்கடலுயிரினம் ஆங்கிலத்தில் sea cucumber என அழைக்கப்படுகிறது. முட்த்தோலி வகையைச் சார்ந்த இவ்வுயிரினம் தமிழில் கடல் அட்டை, கடல் வெள்ளரி (தமிழ்ப்படுத்தப்பட்ட

வார்த்தை என்று நினைக்கிறேன்) என்ற பெயர்களால் சுட்டப்படுகிறது. (வேறு வட்டாரப் பெயர்கள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள்)
கடல் தரையில் மிதவை உயிரினங்களையும் மட்கியத் தாவரங்களையும் உண்டு வாழும் இவ்வுயிரினத்தின் உடலானது நெகிழும் தன்மையுள்ள சதைப்பற்றான தோலால் போர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக இவை ஆபத்தற்றவை என்றாலும் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது(சில உள்ளினங்களில்) ஒரு பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுடையத் திரவத்தை வெளியேற்றுகின்றன. இத்திரவம் கண்களில் பட்டால் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தக் கூடியது.
உடலின் ஒருமுனையில் அமைந்திருக்கும் வாயில் குட்டி மரங்களை ஒத்த

சிறிய நீட்சிகள் (Tentacles) காணப்படுகின்றன. இந்த நீட்சிகள்மூலம் உணவை வடிகட்டியோ இல்லைச் சிறைபிடித்தோ உண்கின்றன. இவைக் கடலின் ஆழத்தில் அதிகம் காணப்படுகின்றன. அலைகள் மோதும் பாறை இடுக்குகளில் நான் இவற்றைப் பார்த்திருக்கிறேன். (இணைக்கப்பட்டிருக்கும் காணொளியில் உங்களால் முடிந்தால்

அவற்றைக் கண்டுபிடியுங்கள் )
கடலில் 10கிமீட்டர் ஆழத்தில்கூட இவைக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன.கடலின் மிக ஆழமானப் பகுதியே சுமார் 11கிமீட்டர்கள்தான்(மரியான ட்ரெஞ்ச்)என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.கடலில் நுண்ணூட்டச் சத்துக்களின் சுழற்சியில் கடல் அட்டைகளின் பங்கு இன்றியமையாதது.

கடுமையான அழிவைச் சந்தித்துவரும் கடல் அட்டைகள் அட்டவணை ஒன்றில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனினும் ஆண்மைக்காகத் (!) தமிழகம் உட்பட இந்தியாவில் கடல் அட்டைகள் மிக அதிகமாகச் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டுக் கடத்தப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களில் கடல்

அட்டைகளின் கடத்தல் 13 மடங்கு அதிகரித்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

இணைக்கப்பட்டப் படங்களில் கடத்தலில் கைப்பற்றப்பட்டக் கடல் வெள்ளரிகள் உள்ளன. - @Geodamin

#நாமும்_வாழும்_பூவுலகு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling