வணக்கம்.
மொழி என்பது நமது வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்போது தான் அது அர்த்தமுள்ளதாக ஆகிறது!மலரோ மலரும்(பெண்மை) போதுதான் வாழ்க்கை அழகாகிறது!
தமிழுக்கே உரிய தனிச் சொல்வளங்கள் பல உண்டு.
அவற்றுள் ஒன்று மலரின் பருவ நிலைகளை உணர்த்தும் பல சொற்கள்.
m.facebook.com/story.php?stor…
மொழி என்பது-2
ஊழ் - தோன்றால் கொம்பின் கொழுந்தில் இருக்கும் பருவம் -- இதனை "இணர் ஊழ்த்தும் நாறா மலர்" என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. (650)
நனை - நனைந்த ஈரம் போல இணரில் தோன்றும் பருவம்.
முகை - மொக்கு விடுவதற்கு முந்தைய பருவம்.
m.facebook.com/story.php?stor…
மொழி என்பது-3
மொக்குள் -- மொக்கு விட்ட பருவம் - "முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் மாதர் நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு" - திருக்குறள் 1274
அரும்பு - மொக்குள் அரும்பாகிய பருவம் - "காலை அரும்பிப் பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந் நோய்" - திருக்குறள் 1227
மொழி என்பது-4
மொட்டு - அரும்பியது மொட்டாகிய பருவம்
போது - மொட்டு விரியும் பருவம்
மலர் - விரிந்த மலரின் இளம் பருவம்
பூ - விரிந்த பூவின் நலப் பருவம்
பொம்மல் - விரிந்த பூ மலர்ந்து பொம்மி (முதிர்ந்து) நிற்கும் பருவம்
வீ - இணரிலிருந்து விழவிருக்கும் பருவம்
மொழி என்பது-5
செம்மல் - இணரிலிருந்து உதிர்ந்து நிலத்தில் கிடக்கும் பருவம் - "உதிர் பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்" - சிலப்பதிகாரம் - காடு காண் காதை
நன்றி.
m.facebook.com/story.php?stor…
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.