நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி
🙏🇮🇳1
புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர
🙏🇮🇳2
உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்.........................
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது?
எப்படி செல்ல வேண்டும்?
அங்கு சென்றால் கிடைக்கும்
பலன் என்ன! .🙏🇮🇳3
#அசுவினி:
கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். 🙏🇮🇳4
இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். 🙏🇮🇳5
அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.
இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8.
போன்: 94438 85316, 04369 222 392
🙏🇮🇳6
#பரணி:
கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
அம்மன்: சுந்தரநாயகி
தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற,
🙏🇮🇳7
சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது.
🙏🇮🇳8
சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம்.
🙏🇮🇳9
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை.
திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30.
போன்: 94866 31196, 04364 285 341
🙏🇮🇳10
#கார்த்திகை:
கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்
அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை
தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். 🙏🇮🇳11
தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது.
🙏🇮🇳12
சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.
🙏🇮🇳13
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5
போன்: 94874 43351, 04364 282 853.
🙏🇮🇳14
#ரோகிணி:
கோயில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்
தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 🙏🇮🇳15
ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.
🙏🇮🇳16
சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு.
🙏🇮🇳17
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை.
திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30.
போன்: 044- 2723 1899.
🙏🇮🇳18
#மிருகசீரிஷம்:
கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில்
தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார்.
🙏🇮🇳19
விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான்.
சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும்.
🙏🇮🇳20
இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.
திறக்கும்நேரம்: மாலை5- இரவு 7.
போன்: 94433 51528, 04366- 269 965.
🙏🇮🇳21
#திருவாதிரை:
கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில்
அம்மன்: சுந்தரநாயகி அம்மன்
தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். 🙏🇮🇳22
அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம்.
🙏🇮🇳23
சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது.
🙏🇮🇳24
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.
திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.
போன்: 99440 82313, 94435 86451.
🙏🇮🇳25
#புனர்பூசம்:
கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். 🙏🇮🇳26
அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.
🙏🇮🇳27
சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும்.
🙏🇮🇳28
இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7.
போன்: 99941 07395, 04174 226 652
🙏🇮🇳29
#பூசம்:
கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: அபிவிருத்தி நாயகி
தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. 🙏🇮🇳30
அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.
🙏🇮🇳31
சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும்.
🙏🇮🇳32
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: மாலை4- இரவு7.
போன்: 97507 84944, 96266 85051.
🙏🇮🇳33
#ஆயில்யம்:
கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். 🙏🇮🇳34
கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். 🙏🇮🇳35
இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோயில்' என்றால் தான் தெரியும்.
சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும்.
🙏🇮🇳36
இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை9- மதியம் 1.30, மாலை 4- இரவு7.
போன்: 99940 15871, 0435- 200 0240
🙏🇮🇳37
#மகம்:
கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில்
அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி
தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை.
🙏🇮🇳38
கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார்.
சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும்.
🙏🇮🇳39
இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு.
🙏🇮🇳40
இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை6- மாலை6.
போன்: 95782 11659, 93624 05382.
🙏🇮🇳41
#பூரம்:
கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். 🙏🇮🇳42
அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.
🙏🇮🇳43
சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.
🙏🇮🇳44
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30
போன்: 98651 56430, 99652 11768
🙏🇮🇳45
#உத்திரம்:
கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். 🙏🇮🇳46
யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம்.
🙏🇮🇳47
சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.
🙏🇮🇳48
இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8.
போன்: 98439 51363, 0431- 254 4070.
🙏🇮🇳49
#அஸ்தம்:
கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில்
அம்மன்: அன்னபூரணி
தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். 🙏🇮🇳50
அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
🙏🇮🇳51
சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு.
🙏🇮🇳52
இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.
திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30.
போன்: 95002 84866
🙏🇮🇳53
#சித்திரை:
கோயில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். 🙏🇮🇳54
மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம்.
🙏🇮🇳55
சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு.
🙏🇮🇳56
இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6.
போன்: 94439 61948, 97902 95795.
🙏🇮🇳57
#சுவாதி:
கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
அம்மன்: பூங்குழலி
தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது.
🙏🇮🇳58
நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் "நெல்லி.
🙏🇮🇳59
சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.
🙏🇮🇳60
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை8- 10, மாலை 5-7
போன்: 93643 48700, 9382684485.
🙏🇮🇳61
#விசாகம்:
கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்
தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார்.
🙏🇮🇳62
மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது.
🙏🇮🇳63
சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.
🙏🇮🇳64
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.
போன்: 04633- 237 131, 237 343.
🙏🇮🇳65
#அனுஷம்:
கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: உலகநாயகி
தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். 🙏🇮🇳66
பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர்.
🙏🇮🇳67
சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. 🙏🇮🇳68
அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.
போன்: 04364- 320 520
🙏🇮🇳69
#கேட்டை:
கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்
தாயார்: பெருந்தேவி
தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். 🙏🇮🇳70
அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார்.
🙏🇮🇳71
சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.
🙏🇮🇳72
இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30.
போன்: 97903 42581, 94436 50920
🙏🇮🇳73
#மூலம்:
கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பகுஜாம்பாள்
தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. 🙏🇮🇳74
அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.
🙏🇮🇳75
சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும்.
🙏🇮🇳76
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30.
போன்: 94447 70579, 94432 25093
🙏🇮🇳77
#பூராடம்:
கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மங்களாம்பிகை
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாசவெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். 🙏🇮🇳78
ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார்.
சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.
🙏🇮🇳79
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1.
போன்: 94434 47826, 96267 65472
🙏🇮🇳80
#உத்திராடம்:
கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: மீனாட்சியம்மன்
தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன்.
🙏🇮🇳81
தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது.
🙏🇮🇳82
சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும்.
🙏🇮🇳83
இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8
போன்: 99436 59071, 99466 59072
🙏🇮🇳84
#திருவோணம்:
கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்
தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்
தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். 🙏🇮🇳85
அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள்.
சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும்.
🙏🇮🇳86
இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில்.
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30
போன்: 94868 77896,04177 254 929
🙏🇮🇳87
#அவிட்டம்:
கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: புஷ்பவல்லி
தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார்.
🙏🇮🇳88
சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது.
🙏🇮🇳89
சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.
🙏🇮🇳90
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6
போன்: 98658 04862, 94436 78579
🙏🇮🇳91
#சதயம்:
கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: கருந்தார் குழலி
தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். 🙏🇮🇳92
அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர்.
🙏🇮🇳93
சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.
🙏🇮🇳94
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9
போன்: 04366 236 970
🙏🇮🇳95
#பூரட்டாதி:
கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில்
அம்மன்: காமாட்சி
தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார்.
🙏🇮🇳96
கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார்.
சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.
🙏🇮🇳97
இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7
போன்: 94439 70397, 97150 37810
🙏🇮🇳98
#உத்திரட்டாதி:
கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். 🙏🇮🇳99
அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் "சகஸ்ரலட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் "ஆயிரம்'.
🙏🇮🇳100
சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். 🙏🇮🇳101
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும்.
🙏🇮🇳102
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- மதியம் 12
போன்: 99652 11768, 04371-239 212
🙏🇮🇳103
#ரேவதி:
கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில்
அம்மன்: பெரியநாயகி
தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 🙏🇮🇳104
1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான்.
🙏🇮🇳105
சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.
🙏🇮🇳106
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,
திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை5- இரவு8
போன்: 97518 94339, 94423 58146
🙏🇮🇳107
படித்ததில் முக்கியமானது சேமித்து வைத்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்...
சக நிலை திரும்பியதும் தங்களது நக்ஷத்திர தளங்களுகு சென்று வாருங்கள்.நண்மைகள் உண்டாகும்.
வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
