சிவபெருமானுக்கு ஈசானம்,சத்யோஜாதம்,
தத்புருஷம்,வாமதேவம்,அகோரம் என்ற ஐந்து முகங்கள் உள்ளன.இந்த முகங்களில் ஒன்றான அகோர முகம் தாங்கியிருப்பவர் அகோர மூர்த்தி.
1
இவர் மயிலாடுதுறை மாவட்டடம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
முன்னொரு காலத்தில் மருத்துவாசுரன் என்ற அசுரன்,சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் கடும் தவம் புரிந்தான்.
2
Jan 31 • 12 tweets • 2 min read
ஒரு காட்டில் சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர். ஒருநாள் அவர் தமது சீடர்களிடம், கடவுள் எல்லோரிடத்திலும் இருக்கிறார். எனவே எல்லோரையும் வணங்குங்கள் என்று உபதேசம் செய்தார்.
ஒரு நாள் அந்தச் சீடர்களில் ஒருவன் ஹோமத்திற்கு விறகு சேகரிக்கக் காட்டிற்குச் சென்றான். அப்போது திடீரென்று அங்கே ஒரு பேரிரைச்சல் கேட்டது. எல்லோரும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.
Jan 31 • 13 tweets • 2 min read
*ஆழ்வார்திருநகரியின் அற்புதங்கள்*
ஆலயம்: ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் , தூத்துக்குடி .
காலம்: பிற்காலப் பாண்டியர் (பொ.யு.12-ஆம் நூற்றாண்டு) மற்றும் நாயக்கர் (15-16-ஆம் நூற்றாண்டு)
1
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில், 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.
மூலவர்: ஆதிநாதன்(பொலிந்து நின்றபிரான் - நின்ற திருக்கோலம்)
தாயார்: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி.
2
Jan 30 • 36 tweets • 4 min read
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கிலேசம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடை பெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் பகவான் கிருஷ்ணர்!
தர்மன் வரவேற்க, மற்றவர் தலைவணங்க... உள்ளே
நுழைந்தார் கிருஷ்ணர்.
"யாகம் தொடங்கலாமே... சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா?" எனக் கேட்டார்.
"ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர், பிறகு துரோணர்... என வரிசையாக வைத்தாயிற்று.
உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம்" என்றான் அர்ஜுனன்.
Jan 30 • 14 tweets • 2 min read
*எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர்*
பெரிய ஆவுடையார் மற்றும் இரண்டரை அடி உயர லிங்கமுடன் பிரமாண்டமாக மூலவர் கம்பீரமாகக் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.
1
ஏறத்தாழ இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந் துள்ளது. இயற்கை எழிலும் மண் மணமும் கொஞ்சும் அழகான கிராமம் எழுச்சூர். மன்னர்களின் மான்யங்கள், மகான்களின் அருளாசி, விக்கிர கங்களின் வியப்பான கலைநுணுக்க வேலைப் பாடுகள் என்று எழுச்சூருக்கே உரித்தான ஏராளமான சிறப்புகளும் உண்டு.
2
Jan 29 • 14 tweets • 2 min read
ஒரு நாள் மடத்திற்கு விலைஉயந்த வெளிநாட்டு கார் ஒன்று வந்தது.
அதிலிருந்து ஒரு தனவான் இறங்கினார்.
பிரபு என்று எவரையாவது சொல்ல வேண்டுமென்றால் இவரைத்தான் சொல்ல வேண்டும்.
அத்தனை கஞ்ச மகா பிரபு!
காசுக்குப் பஞ்சமில்லை, செலவழிக்க, அனுபவிக்க மனம்தான் இல்லை.
பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருந்தார்.
Jan 29 • 29 tweets • 3 min read
இந்து மதத்தில் பெண்ணியம்!
இந்துமதத்தின் அடிநாதமும் ஆணிவேரும் பெண் பாதுகாப்பும் சுதந்திரமுமே!
மேற்காசிய மதங்களெல்லாம் , ஐரோப்பிய மதங்களெல்லாம் கடவுள் ஒரு ஆண் என்றபொழுது கடவுளில் பாதி பெண், பெண் இல்லாமல் கடவுளே இல்லை என சொன்னமதம் இந்துமதம்.
மேற்காசியாவின் ஆபிரகாம் மனைவிக்கு தெரியாமல் மகனை பலியிட, அதாவது மனைவியினை ஒரு பொருட்டாக மதியாதபொழுது சிறுதொண்டரின் மனைவி சிவனுக்காய் தன் மகனை கணவனோடு சேர்ந்து பலியிட்டாள் என சொன்ன மதம் இந்துமதம்.
Jan 29 • 8 tweets • 2 min read
*நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு :*
*இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும்,
மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம்.*
*அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.*
Jan 28 • 27 tweets • 3 min read
அதிசய பிராமணன்
பிராமண அதிசயம்.
உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.
அது என்ன பழைய சடங்கு?.
சந்தியாவந்தனம் !.
அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான்.
Jan 28 • 39 tweets • 4 min read
*பரமாத்மாவை அறியும் வழி இது இதுதான்*
நன்றி குங்குமம் ஆன்மிகம்
இராமாயணத்தில் ஒரு அற்புதமான காட்சிதசரதன் அவை கூடியிருக்கிறது. விஸ்வாமித்திர முனிவர் வருகிறார்.
வந்தவர், தசரதனைப் புகழ்கிறார். ‘‘இன்று இந்திரன் பதவியில் இருப்பது உன்னால்தான்” என்கிறார். தசரதனுக்கு மகிழ்ச்சி. விஸ்வாமித்திரரைப் பார்த்து, ‘‘உமக்கு அடியேன் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்கிறார்.
Jan 28 • 13 tweets • 2 min read
சிவசூரியன் நாராயணர் திருக்கோவில் வரலாறு..!!*
*சிவசூரியநாராயண கோவில், சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இக்கோவில் கி.பி 1100-ல், குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டது.*
1
*இதன் கோபுரம் மொத்தம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டுள்ளது. சூரிய தீர்த்தம் என்னும் புனித நீர் நிலை இங்கு அமைந்துள்ளது.*
*இக்கோவிலின் தனி சிறப்பாக குரு பகவான் சூரிய பகவானை தரிசிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.*
2
Jan 27 • 15 tweets • 2 min read
நல்லது நடக்க வேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!!!
கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள்
காரணம் சொல்லாதே பக்தி செய் ; பக்தி செய்யாமலிருக்க காரணம் சொல்லாதே !
உலகில் காரணம் சொன்னவர்கள் ஜெயித்ததில்லை !!!
நீ சொல்கின்ற காரணங்களில் பல பக்தர்கள் வாழ்விலும் இருந்தது !
அவர்கள் அதையும் தாண்டித்தான் பக்தி செய்தார்கள்! நீயும்
அவர்களைப் போல் முயற்சித்துப் பார் !
Jan 27 • 13 tweets • 2 min read
*பாவங்கள் நீங்கும் பீஷ்மாஷ்டமி*
மகாபாரத்தில் கங்கை மைந்தன் பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இல்லை.
அவர் தன் தந்தைக்காக செய்த தியாகத்தின் பலனாக பெறுதற்கரிய பேறு
பெற்றார். அதாவது அவரே விரும்பாமல் அவரது உடலில் இருந்து உயிர் பிரியாது.
யாரும் பெறாவரத்தை பெற்ற பீஷ்மர் இறுதியில் விதியின்
சூழ்ச்சியால் கௌரவர்கள் பக்கம் போரிட நேர்ந்தது. அவரின் கர்ம
வினைப்படி அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை அனுபவிக்க வைத்தது
விதி.
Jan 27 • 10 tweets • 1 min read
இராணுவத்தில் பிராமினர்கள் இருக்கானா?? என்று சில தற்க்குறிகள்...கேட்க்கிறார்கள்
பிராமணர்கள் ராணுவத்தில் இருக்கிறார்களா? எதுபோன்ற பதவிகள் வகிக்கிறார்கள்?
Army General (ARMY )
கிருஷ்ணசாமி சுந்தர்ராஜன்
இவர் ஒரு தமிழ் ஐயங்கார் -செங்கல்பட்டு சொந்த ஊர் .
வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் தமிழ் பார்ப்பனர் .
ராணுவத்தில் பணி புரிந்த வருடங்கள் 1945-1988
ஜெனரல் ஆக பணி புரிந்த வருடங்கள் 1986-1988
Jan 27 • 13 tweets • 2 min read
பழனி ஆண்டவரை பற்றிய ஆச்சரிய தகவல்கள்.!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடும், ஆண்டி கோலத்திலும் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் ஆச்சரியங்கள்......!
🌹 தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் (நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி) மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் பன்னீர் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
Jan 27 • 10 tweets • 2 min read
அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில், பழநி.
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காமல் விநாயகருக்கு கிடைத்து விடுகிறது. இதனால் கோபம் கொண்ட முருகன் பழநி மலைக்கு வந்து விடுகிறார்.
1
முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழநி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார்.
2
Jan 26 • 21 tweets • 3 min read
பழனி முருகன் இரகசியம் தெரிந்து அலைமோதும் கூட்டம்...
ஒரு சொட்டு வியர்வை துளியை குடிக்க விழுந்து கிடக்கும் பக்தர்கள்:
உலகில் வேறெங்கும் காண இயலாத அதிசயம் பழனியில்..!!
இரவில் வியர்க்கும் பழனி
முருகன் சிலை
அறிமுகம் ஏதும் தேவையில்லாத உலகப் பிரசித்தி பெற்ற ஊர் பழநி. திரு-ஆவினன்-குடி என்ற பழமையான பெயர் சிறப்பு கொண்ட இந்தப் பழநி மலை மேலே வீற்றிருக்கும் தண்டாயுதபாணி சிலை நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப் பட்டது.
Jan 26 • 59 tweets • 6 min read
நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன்.கோவில்களுக்கு செல்வது பிடிக்கவில்லை.
நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன்.ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.
நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில், ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு திலகம் & 10 ரூபாய்.
" ஹைதர் அலிக்கு தண்ணி காட்டிய உலக்கை தாய் ஒனகே ஓபாவ்வா ".
சித்ரதுர்கா கோட்டை பெங்களூருவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நம் சங்ககிரி துர்க்கத்தைப் போன்றே மலையில் அமைந்த கோட்டையாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்டு வந்த இந்து மன்னர் தன் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக சித்ர என்ற மலையின்மீது மாபெரும் கோட்டை ஒன்றை கட்டி அதில் நூற்றுக்கணக்கான வீரர்களையும் தங்க வைத்திருந்தார்.
Jan 26 • 14 tweets • 2 min read
*''நிகழ்காலம் மட்டுமே...!"*
இழந்த காலத்தை மறுபடியும் அடைய முடியாது.. எதிர்காலம் என்னவென்று நம்மால் அனுமானிக்கவும் முடியாது...
கையில் இருப்பது நிகழ்காலம் மட்டுமே.அதை நம் வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...
கவுதம புத்தர் தன்னுடைய சீடர்களைப் பார்த்து ஒரு வினாவினை எழுப்பினார். ‘ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்...?’.
அனைவருக்குமே விடை தெரியும் என்பதால், கூட்டத்தின் நடுவில் இருந்து வேகமாக எழுந்த ஒரு சீடர் ‘நூறு ஆண்டுகள்’ என்றார்...
Jan 26 • 13 tweets • 2 min read
*சுதந்திரப் போராட்டத்தில் அந்தணர்கள்*
*வை மு கோதைநாயகி*
வை மு கோதைநாயகி *மடிசார் கட்டிக் கொண்டு சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி*
தமிழின் முதல் நாவலாசிரியர்.
116 நாவலகளை எழுதியவர்.
துப்பறியும் கதைகள் எழுதிய முதல் பெண்.
நாடக ஆசிரியர், நாடக டைரக்டர், மேடை பேச்சாளர், சமூக சேவகர், பாடகர்.
தமிழில் எழுத படிக்கத் தெரியாது, பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பு இல்லை.