Dr.Maharajan Profile picture
Dravidian Stock / Paediatrician

May 18, 2021, 8 tweets

நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவில் கடந்த வருடம் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் ஜெயமோகன் இறந்தது நம் அனைவருக்கும் தெரியும் …

அவருக்கான இறப்பு நிதி அரசிடமிருந்து இது வரை அவரது குடும்பத்திற்காக கிடைக்கவில்லை என்று அழுத்தமாக பதிவு செய்கிறேன் …

தொடர்ந்து படிக்கலாம் …

1/N

மரு.ஜெயமோகன் மரணத்தை தொடந்து அந்த ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு மருத்துவராக மரு. அருண் சென்று பணி செய்து வருகிறார் …

இவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் படித்து முடித்து நிலகிரி மலைப்பகுதியில் பணியில் உள்ளார் …

2/N

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெங்குமரஹடாவில் நடைபெற்ற சிறிய விழாவின் மூலம் 25 பேர் கொரோனா நோய் தொற்று ஏற்பட அவர்கள் அனைவரையும் ஒற்றை ஆளாக நின்று வீடு வீடாக சென்று பேசி பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்

ஈரோடு சத்தியமங்கலம் -விலிருந்து தென்குமரஹடா-வர 5மணி நேரம்

3/N

காட்டிற்குள் பயணிக்க வேண்டும் …

ஆனால் அப்படி பயணித்தாலும் 108 வாகனம் ஆற்றை கடந்து தெங்குமரஹடா ஊருக்குள் வர முடியாது ..

இந்த சூழ்நலையில் நோயாளிகளை வீட்டிலிருந்து அரசு வாகனத்தில் ஏற்றி ஆற்றுப்படுகைக்கு வந்து பின்பு அவர்களின் கைகளை பிடித்து மருத்துவரே அழைத்து வருகிறார்.

4/N

நோயாளிகளை வீட்டிலிருந்து ஆற்றுபடுகைக்கு அழைத்து வர வாகன ஓட்டியும் அவர்தான் ..

இறுதியாக ஆற்றிலும் நோயாளிகளின் கைகளை பிடித்து அடுத்த பக்கம் 108 வாகனம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து ( வீடியோ இணைப்பு )

பின்பு இறுதியாக அனைவரையும் மருத்துவமனைக்கு கோத்தகிரிக்கு /

5/N

ஊட்டிக்கு அழைத்து சென்று அவர்களை அட்மிசன் போட்டு சிகிச்சை பெற வைத்து விட்டார் ..

“Only One Medical Officer
But he s All in One ..

He is the Mass with a mission..

Yes He is Dr Arun Prasath” … ( Colleague”s words )

6/N

மருத்துவர் அருணுக்கு வாழ்த்துக்கள் ….

Words are not enough to talk about the work you do for the tribals ..

Great Job தம்பி Dr. Arun Prasad 💐💐💐

இது போன்ற மருத்துவர்களால் தான் தமிழக சுகாதரம் உலகத்தரம் மிகுந்ததாய் இருக்கிறது ..

7/N

குறிப்பு : தென்குமரஹடா-விலுருந்து நீலகிரி மருத்துவமனை விஷயத்திற்க்கு வர வேண்டுமானால் ஈரோடு , கோவை ( மேட்டுப்பாளையம்) என இரண்டு மாவட்டங்களை கடந்து தான் வர வேண்டும்..

கிராம மக்கள் தவிர மற்றவர்கள் அங்கு செல்ல அனுமதி கிடையாது .. வனத்துறை சிறப்பு அனுமதி இருந்தால் செல்லலாம்.

The End

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling