மேகோன் 🇮🇳 Profile picture
பெருமானே 🙏🏼 நாயேனையும் ஆட்கொண்டு அருள்புரியுங்கள் 🙏🏼 தமிழ் மொழியாக, பாரதம் நாடாக, சனாதன தர்மம் எம் நெறியானது! 🇮🇳🚩 🙏🏼நற்றுணையாவது நமச்சிவாயவே🙏🏼

May 23, 2021, 9 tweets

🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(58)
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்:

மூலவர்: வைத்தியநாதசுவாமி
அம்மன்: சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம்: பனை மரம்
தீர்த்தம்: கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
புராண பெயர்: மழுவாடி

ஊர்: திருமழபாடி, அரியலூர்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர்.

திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின்

தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார்.

‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான்.

சுந்தரர் சோழ நாட்டுசிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து

செல்லும்படி நேர்ந்தது. அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்றகுரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார்.

அருகில் எங்கேயாவது சிவன் கோவில்இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார்.

அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக்கூறினார்கள்.

திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து, இறைவனை தொழுது பதிகம் பாடியருளினார்.

விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருகிறார். முற்காலத்தில் உத்தரவாகினியாகப் பாய்ந்த ஆற்றை தெற்கு நோக்கி, தெற்குப் பக்கமாகத் திருப்பியதால் விநாயகர் தெற்குப் பார்த்துக் காட்சி தருவதாகவும் ஐதீகம்.

இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது.

காத்தியாயினி அம்மன் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார்.

இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர்.

சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர்.

மகாலட்சுமி, சந்திரன்‌ வழிபட்டு, தோசம் நீங்கப் பெற்ற திருத்தலம்.

தேவாரப் பாடல்:

பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

🙏 திருச்சிற்றம்பலம் 🙏
🙏 நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling