மேகோன் 🇮🇳 Profile picture
பெருமானே 🙏🏼 நாயேனையும் ஆட்கொண்டு அருள்புரியுங்கள் 🙏🏼 தமிழ் மொழியாக, பாரதம் நாடாக, சனாதன தர்மம் எம் நெறியானது! 🇮🇳🚩 🙏🏼நற்றுணையாவது நமச்சிவாயவே🙏🏼
Aathithyaa Profile picture Kanagarajan Profile picture 2 subscribed
Oct 7, 2022 12 tweets 2 min read
“கோயில் விளங்கக் குடி விளங்கும்”

எங்கள் நெறி சொன்னது.
இதை உணர்ந்து எங்கள் முன்னோர்கள் கட்டிய கோயில்களை, அவர்களது பெருமைகளை அழிக்கத் துடிக்கும் ஈனர்கள்.

நமக்கு கிடைக்கப் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள், மற்றும் உள்ள ஏனைய கோயில்களில் உள்ளவர்கள் இந்து தெய்வங்கள் தானே.!
👇🏼 சனாதனமே வாழ்வியல் நெறி.!

நம் சனாதன தர்மத்தைப் பற்றியும் அதிலும் குறிப்பாக சைவநெறி பற்றியும் அடிப்படை அறிவு கூட இல்லாத திரு.தெரு, திராவிட விசங்கள், பகுத்தறிவு வியாதிகள் எல்லாம் உருட்டும் பிரட்டுகளை சகிக்காமல், எழும் கேள்விகள் சில.

கேள்விகளுக்கு முன் திருமுறைகள் பாடல்கள் சில.
👇🏼
Aug 20, 2022 9 tweets 2 min read
"காதில் பூ வைக்காதீங்க"

இதை கிண்டலாக சொல்லும் போது, நம் நெறியை இழிவுபடுத்துகிறோம் என்று தெரியாமலே சொல்கிறோம்.

அப்படி என்ன தவறு இந்த சொற்களில்.?

"பூ நாளும் தலை சுமப்ப"

-என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.

1/ நீ நாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே, நல்வினையே.!

என திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருச்சாய்க்காட்டு திருப்பதிகத்தில் பாடியுள்ளார்.

2/
Aug 12, 2022 43 tweets 19 min read
அட்டவீரட்டான திருத்தலங்கள்
பகுதி-1

எல்லாம் வல்ல சிவபெருமான், படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து தொழில்களைப் புரிகிறார்.

தமது திருவிளையாடல்கள் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காத்து அருள்கிறார். Image பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே "அட்டவீரட்டான தலங்கள்".

திருத்தலம்-1

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்:

பிரம்மனின் சிரம் கொய்து, செருக்கை அழித்த திருத்தலம். Image
Jun 23, 2022 4 tweets 2 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்:
(தரப்பாக்கம், சென்னை)

பெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில்களின் நடை அடைக்கப்படும். இத்திருத்தலத்தில் நடைதிறந்து, கிரகண துவக்கத்திலும், முடிவிலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். Image முற்காலத்தில் இங்கு தங்கியிருந்த சித்தர்கள், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

காலப்போக்கில் வழிபாடு நின்று, லிங்கத் திருமேனி மண்ணில் புதைந்து போனது.

பிற்காலத்தில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமான், இங்கு லிங்கத் திருமேனி இருப்பதை உணர்த்தி அருளினார். Image
Oct 15, 2021 5 tweets 3 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவார கோயில்கள் - 127
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்:

திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது ஒரு நாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்ற தலம். ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.

திருஞானசம்பந்தர், அப்பர் பெருமானோரின் மடங்களை வடக்கு வீதியில் தரிசிக்கலாம்.
Jun 5, 2021 12 tweets 4 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(71)
பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்:

மூலவர்: பஞ்சவர்ணேஸ்வரர் (ஐவண்ணப்பெருமான்), திருமூக்கிச்சுரத்தடிகள்
அம்மன்: காந்திமதியம்மை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: சிவதீர்த்தம், நாக தீர்த்தம்
புராண பெயர்: முக்கீச்சுரம் ஊர்: உறையூர், திருச்சி
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.

புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி.

இறைவன் சுயம்புவாக, 5 நிறங்களை பிரம்மனுக்கு காட்டினார்.
May 23, 2021 9 tweets 4 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(58)
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்:

மூலவர்: வைத்தியநாதசுவாமி
அம்மன்: சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம்: பனை மரம்
தீர்த்தம்: கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
புராண பெயர்: மழுவாடி ஊர்: திருமழபாடி, அரியலூர்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர்.

திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின்
May 22, 2021 5 tweets 2 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(57)
வியாக்ரபுரீஸ்வரர் கோயில்:

மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்
அம்மன்: சவுந்தரநாயகி, அழகம்மை
தல விருட்சம்: சரக்கொன்றை
தீர்த்தம்: காவிரி, கோயில் தீர்த்தம்
ஊர்: திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர் தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார்.
May 21, 2021 6 tweets 2 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(56)
நெய்யாடியப்பர் கோயில்:

மூலவர்: நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
அம்மன்: பாலாம்பிகை, இளமங்கையம்மை
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்: காவிரி
புராண பெயர்: திருநெய்த்தானம்
ஊர்: தில்லைஸ்தானம், தஞ்சாவூர் ImageImageImageImage தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம், சுந்தரர் வைப்புத்தலமாக பாடியுள்ளார்.

ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார்.
Apr 26, 2021 12 tweets 3 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(31)
குற்றம் பொறுத்தநாதர் கோயில்:

மூலவர்: குற்றம் பொறுத்தநாதர், அபராதசமேஸ்வரர்
அம்மன்: கோல்வளை நாயகி, விஜித்ர வலையாம்பிகை
தல விருட்சம்: கொடி முல்லை
தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம் புராண பெயர்: கருப்பறியலூர், காமநாசபுரம், மேலைக்காழி
ஊர்: தலைஞாயிறு, நாகப்பட்டினம்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், சுந்தரர்

சீர்காழி சட்டை நாதர் கோயில் அமைப்பை போலவே இக்கோயிலும் மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. எனவே இத்தலத்தை 'மேலைக்காழி' என்பர்.
Apr 25, 2021 5 tweets 2 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(30)
வீரட்டேஸ்வரர் கோயில்:

மூலவர்: வீரட்டேஸ்வரர்
அம்மன்: ஞானம்பிகை
தல விருட்சம்: கடுக்காய் மரம், அரிதகிவனம்
தீர்த்தம்: திரிசூல் கங்கை, பசுபதி தீர்த்தம்
புராண பெயர்: திருக்குறுக்கை
ஊர்: கொருக்கை, நாகப்பட்டினம் தேவாரம் பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த அட்ட வீரட்டத்தலங்களில் இது காமனை எரித்த தலம். எனவே இறைவன் காமதகன மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். காமதகன மூர்த்தி இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால்
Apr 24, 2021 6 tweets 2 min read
🙏 திருச்சிற்றம்பலம் 🙏

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்:
(29)
திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்:

மூலவர்: உத்வாகநாதர், கல்யாண சுந்தரேஸ்வரர்
அம்மன்: கோகிலா
தல விருட்சம்: கருஊமத்தை
தீர்த்தம்: சப்தசாகரம்
புராண பெயர்: மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி ImageImageImage ஊர்: திருமணஞ்சேரி, நாகப்பட்டினம்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். திருமணம் வேண்டுவோர்க்கு அருள் புரியும் தலம். மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில்
Feb 24, 2021 8 tweets 2 min read
“தமிழன்” என்பவன் இந்து-கடவுள் உணர்வாளன். அவன் அழிக்கப்படும் போது இறை நம்பிக்கை மட்டும் அழிக்கப்படுவதில்லை, தமிழனின் தொன்மையும் அழிக்கப் படுகிறது.

பிறர் அழிக்க தலைப்படும் நம் சைவப் பாரம்பரியங்களில் ஒன்று “திருக்கயிலாய வாத்தியம்”.

எல்லையற்ற பரம்பொருளாகிய சிவபெருமானுக்காக, சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது “திருக்கயிலாய வாத்தியம்”. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வந்தது.

திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு
Sep 15, 2020 5 tweets 2 min read
அறிவோம் சைவநெறி:
பகுதி-4

யார் சிவன்?

சிவபெருமான் அந்தம், ஆதி இல்லா அனாதியானவன்.
ஆனந்த கூத்தாடி, எல்லையில்லா அருள் ஞானமாக திகழ்பவன்.
அனைத்து உயிர்கட்டும் தாயானவன், தந்தையானவன், தலைவனாவன்.
பேரண்டத்துக்கும் எல்லா தெய்வங்களுக்கும் தலைவன். அருட்பெரும் சோதிப்பிளம்பாக நிற்பவர்.
உயிர்களின் உள்ளிருந்து உணர்த்துபவர்.

பிறவி அறுத்து, ஞான முக்தி தர வல்லவன் சிவன் ஒருவனே.

அடியவர்கள் உள்ளத்தில் உறைந்து, அன்பைப் பெற்று அருளைக் கொடுப்பவன், கேட்ட வரத்தைக் கொடுக்கும் பித்தன்.