உண்மையான ஏழைப் பங்காளன்
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார் அங்கே அவர் கண்ட காட்சி விசித்திரமாக - 1/4
இருந்தது.
குளித்தும் குளிக்காமலும் இருந்த பொதுமக்கள் - அருவிக்கரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு - பாதையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஒதுங்கி நின்றவர்களைப் பார்த்ததும் விஷயம் விளங்கிற்று அவருக்கு.
அங்கிருந்த காவலரை பார்த்து -
இதுக்குத்தான் நீ எனக்கு முன்ன ஓடி - 2/4
வந்தியா!. இவங்களோட நா சேந்து குளிச்சா ஒனக்கு என்னான்னே?.. - என்று சத்தம் போட்டுவிட்டு,
ஒதுங்கி நின்ற மக்களை பார்த்து,
இப்படி ஒதுங்கி நின்னா எப்படி?.. வாங்க எல்லாரும் சேந்து குளிப்போம்!.. - என அன்புடன் அழைத்தார்.
உண்மையான ஏழைப் பங்காளனை நேரில் பார்த்த களிப்பில் - 3/4
மக்கள் ஆரவாரத்துடன் அருவியில் குளித்தனர்...
அன்று குற்றால அருவியே, ஓ!.. என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தனர்!..
அதற்கு முன்னும் பின்னும் எந்த முதல்வரும் மக்களுடன் சேர்ந்து குளித்ததாக வரலாறு இல்லை! - 4/4
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.