மதுசூதனன் பி சா Profile picture
தல ரசிகன்|தலைவி நயன்தாரா|தலைவன் யுவன்|அரசியல் பழகு| என்றும் எப்பொழுதும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று - சினிமா #PCMreview

Jun 20, 2021, 9 tweets

#Luca #PCMreview "குழந்தைகளுடன் அமர்ந்து நாமும் குழந்தையாய் மாறி ஜாலியாக கண்டுகளிக்க ஒரு சிறந்த படம்" தமிழ் டப்பிங் இல்லை.OTT - டிஸ்னி (பிரீமியம்) டெலிகிராம் - பயோ/DM
கதை சுருக்கம்:ஹீரோ லூகா ஒரு மீன்.அவரது பெற்றோர் ஹீரோவை கடலுக்கு மேலே அனுப்புவதில்லை.மேலே சென்றால் உன்னை

கொன்றுவிடுவார்கள் என்று கூறி ஹீரோவை கடலுக்கு மேலே செல்ல அனுமதிப்பதில்லை.ஒரு நாள் கடலுக்குள் வரும் ஒருவர் ஹீரோவை மேலே கொண்டு செல்கிறார்.அப்பொழுது தான் தன் பெற்றோர் கூறியது உண்மையில்லை என்று தெரிகிறது.இருவரும் நண்பர்களாகிறார்கள்.ஹீரோவின் நண்பர் பெயர் ஆல்பர்டோ. ஆல்பர்டோவின் வீட்டில்

இருக்கும் வெஸ்பா ஸ்கூட்டியின் படத்தை பார்க்கும் ஹீரோ நாமும் அதே போல் வண்டி வாங்கி ஊர் சுற்றவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.அதே போல் மரத்தில் வண்டி செய்து விளையாடுகிறார்கள்.அது அடிக்கடி உடைந்து போகிறது.எனவே நகரத்திற்கு சென்று அங்கு உண்மையான வெஸ்பா வண்டி வாங்க வேண்டும் என முடிவு

செய்கிறார்கள்.வண்டி வாங்கினார்களா?நகரத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை என்ன?நகரத்திற்கு சென்ற பிறகு கதை எப்படி செல்கிறது?என அனைத்தையும் ஜாலியாக படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.படத்தில் கடலின் அழகை ரசிக்கும் விதத்தில் அருமையாக காட்சி அமைந்துள்ளது.கடலுக்கு அடியில் நாமே

செல்வது போல் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது.கடல்,அதை ஒட்டி நகரம்,அங்கு இருக்கும் மனிதர்கள் என அனைத்தையும் பலவித ரசனையோடு காட்டியிருக்கிறார்கள்.அனைவருக்கும் புரியும் எளிதான ஆங்கிலத்தில் தான் வசனம் இருக்கிறது. காமெடியான வில்லன் மற்றும் அவனின் அல்லக்கைகள்,ஹீரோ மற்றும் அவரின் நண்பரின்

நடப்பு,ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் வரும் காதல் என அனைத்தும் ஒருங்கே ரசிக்கும்படி உள்ளது திரைக்கதை.நண்பர்களுக்குள் வரும் சண்டை,அதனால் ஏற்படும் மனகஷ்டம் என சில காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கின்றன.அதிலும் இறுதி காட்சியில் படம் பார்க்கும் அனைவரும் கண்டிப்பாக கங்கலங்கும் விதமாக

காட்சியமைப்பு இருக்கிறது.வெறும் ஒன்றரை மணி நேர படத்தில் நம்மையும் குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்கிறது இந்த படம்.கண்டிப்பாக நீங்கள் பார்க்க வேண்டிய படம்.குழந்தைகளுடன் பார்த்தால் இன்னும் சிறப்பு.தவறாமல் பாருங்கள்.நன்றி.வணக்கம்! @Mr_Bai007 @peru_vaikkala @_Girisuriya7_

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling