Fervid Indian 🇮🇳 Profile picture
Indian, Hindu, Tamilan in given order | #ஜெய்ஹிந்த் | #JaiHind

Jun 23, 2021, 11 tweets

Thread | இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும் - Article 1 Constitution of India இதைத்தான் சொல்லுது

கவனிக்க: மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியம், (மாநிலங்களால் ஆன ஒன்றியம் அல்ல)

அமெரிக்கா ஒரு FEDERATION
இந்தியா ஒரு UNION
வித்தியாசம் என்ன?

அமெரிக்கா பல மாநிலங்கள் சேர்த்து உருவாக்கியது.

ஆனால் இந்தியா மாநிலங்களை கொண்டது. அதாவது இந்தியா என்னும் நம் தாய்நாடு நிர்வாக வசதிக்காக உருவாக்கியது தான் மாநிலம்.

இந்தியா மாநிலங்களை கொண்ட ஒரு ஒன்றியம். மாநிலங்களால் ஆன ஒன்றியம் அல்ல. மாநிலங்களின் கூட்டமைப்பும் அல்ல.

இதை நமது மாநில உயர்கல்வி துறை அமைச்சருக்கு தெரியாமல் இருப்பது நம் சாபக்கேடு.

மொழிவாரி மாநில உருவாக்கத்துக்கு முன் ஒரே மாநிலத்தில் தானே தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா..!

புதுவையும், தமிழக மக்களும், கேரளாவில் சில பகுதியும் பேசுவது தமிழ், ஆனால் வேறு வேறு மாநிலங்கள்

தெலுங்கானாவும் அந்திராவும் பேசுவது தெலுங்குதான், ஆனால் இரண்டும் வேறு வேறு மாநிலங்கள்.

நாளையே கொங்கு மண்டலமோ அல்லது வட தமிழகமோ தேவைப்பட்டால் தனி மாநிலங்களாக பிரிக்கலாம். இதைத்தான் அம்பேத்கார் தலைமையில் நமக்கு கிடைத்த அரசியலமைப்பு சொல்கிறது.

இதன் மூலம் நமது நாடுதான் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை உருவாக்கியது என்பது தெளிவு.

அடுத்த சர்ச்சை, மத்திய அரசை ஒன்றிய அரசு என்பது. அரசியலமைப்பு என்ன சொல்கிறது ? 👇

அரசியலமைப்பில் நமது அரசு தெளிவாக Government of India (இந்திய அரசு) அல்லது Central Government(மத்திய அரசு) என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இதை தவிர வேறு எப்படி நம் அரசை அழைத்தாலும் அது அம்பேத்கார் மற்றும் அரசியலமைப்பை அவமதிப்பதே ஆகும்.
#DMKInsultsDrAmbedkar

அரசியலமைப்பில் ஒன்றியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சரிதான். ஆனால் அது எதை குறிக்கும் என்று Article 5 சொல்கிறது.
அது "பாராளுமன்றம் + உச்சநீதிமன்றம் + ஜனாதிபதி + துணை ஜனாதிபதி மற்றும், CAG உள்பட அனைத்து அரசியலமைப்பு சார் இயக்கங்களை" சேர்த்து குறிப்பிடுவது. அரசை அல்ல

அரசியலமைப்பில் ஒன்றியம் என்ற வார்த்தை உள்ளது, அரசு என்ற வார்த்தையும் வேறு இடத்தில் உள்ளது, அதனால் அதை சேர்த்து 'ஒன்றிய அரசு' என்று அழைப்பது முட்டாள்தனமானது. இதுபோல 👇

தெளிவுக்கு: அரசியலமைப்பில் 'Union Government' என்ற பதம் பயன்படுத்தப்படவே இல்லை. அதனால் மத்திய அரசு அல்லது இந்திய அரசு என்பது மட்டுமே சரி. 👇

கடைசியாக, கருணாநிதிக்கு தெரியாத மொழிபெயர்ப்பா ஸ்டாலின் தெரிந்துகொண்டார்?

யார் சொல்லி இதெல்லாம் செய்கிறார் ஸ்டாலின் ?

பொய் சொல்வதை தவிர்த்து அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நலம்

பதிலுக்கு 'Union Minister' என்ற வாக்கியத்தை தூக்கி வருவார்கள் திமுகவினர்.

Union Minister என்பதை 'ஒன்றிய அமைச்சர்' என்று literal translation செய்தால் 'son in law' என்பதை 'சட்டத்தில் இருக்கும் மகன்' என்று மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய நிலை வரும்.

அது தான் உங்கள் பகுத்தறிவா?

Eg.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling