பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் !
பல புராணங்களுக்கு கருப்பொருளாகவும் , ராமாயணத்தின் அஸ்திவாரமான பலகாண்டதில் முக்கிய பங்களிப்பாகவும், மகாபாரதத்திற்கு மூல காரணமாகவும் இருப்பவர், காயத்திரியை உலகுக்கு அருளியவர், பாரதம் என இன் நாட்டிற்கு பெயர் பெற மூலகாரணமாக இருப்பவர், வேதங்களில் முக்கிய
பங்களிப்பை செய்தவர் என சிறப்பு பெற்றவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்!
பிரம்மரிஷி என்பது பிரபஞ்சத்தின் உயரிய சக்தி நிலையாகும். பிரம்மரிஷிகள் பிரம்மனுக்கு சமமான படைப்பு சக்திகொண்டவர்கள்.
பிரம்மாவின் மனதிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். எனவே தந்தையின் தேஜஸை மரபு வழியாக வசிஷ்டர்
பெற்றுவிடுகிறார். அதனால் இயல்பாகவே பிரம்மஞானமும் பிரம்மரிஷிக்கான சக்தியும் அவரிடம் இருந்தது. ஒரு அரசனாக இருந்து கொண்டு பிரம்மரிஷியோடு மோதும் தைரியமும், நெஞ்சுரமும் விஸ்வாமித்திரருக்கு மட்டுமே இருந்தது!
ஒரு மாபெரும் அரசன் என்ற நிலையில் இருந்து வசிஷ்டரின் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள விஸ்வாமித்திரர் எடுத்த முயற்சிகளே பல புராணங்களுக்கு கரு பொருளாக விளங்கியது !
பிரபஞ்ச விஸ்தரிப்பிலிருந்து மனித குல வரலாறு வரை சரித்திரத்தில், முக்கிய மாற்றத்தை இது உண்டாக்கியது!
உலகிற்கு காயத்ரி மந்திரத்தை அருளியவர் இவரே . தன்னை அங்கீகாரிக்காத பிராமணர்களுக்கும் அவர்கள் ஓதுதற்கு முதன்மை மந்திரமாக காயத்ரியை கொடுத்தார்!
If the Gayatri has not been chanted for three generations in the family of a Brahmin, its members lose caste! (they cease to be Brahmins!)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.