Dr.Strange Profile picture
Dharmo Rakshati Rakshitah - Protect the Dharma, Dharma will protect you!

Jun 29, 2021, 20 tweets

" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான்

பொறுப்பாளி.

பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான்.

தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக்

காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.
சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே

இவன் வாழ்க்கை நடத்தி, வேத சப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோக க்ஷேமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில், இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டிவந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக (example, guide , model) வைத்துக் கொண்டார்கள்.

இப்போது தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தைவிட்டு,பட்டணத்துக்கு இவன் வந்து, இங்கிலீஷ்காரன் தந்த படிப்பு, அவன் கொடுக்கிற உத்தியோகம், அவனுடைய வாழ்க்கை முறை இதை எல்லாம் எடுத்துக் கொண்டு, இதனால்தானே ஏதோ ரொம்பவும் நாகரிகத்தில் உயர்ந்து விட்டதுபோல் ‘தாட் பூட்’ என்று பண்ணியதை, மற்ற ஜாதியினர்

பார்த்தார்கள். இதுவரை நல்லதெற்கெல்லாம் இவனை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது ஒழுங்கு தப்பிப் போவதிலும் இவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் பாட்டுக்குத் திருப்தியோடு செய்துவந்த தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தையும்விட்டு, நகர வாசம் (town life) இங்கிலீஷ் படிப்பு

வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகம் இவற்றுக்கு மற்றவர்களும் ஆசைப்பட ஆரம்பித்தார்கள் !

பிராமணர்களின் புத்திக்கூர்மை மழுங்க காரணம் என்ன?!

முஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது?!

முஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது?!

பிராமண துவேசம் உருவாக உண்மையில் யார் காரணம் ?

" நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும் பிராமணர்களை கைவிடாத போதும், அக்ரஹாரத்தையும் வேதபாடசாலைகளை கைவிட்டது பிராமணர்கள் தான் !"

“இப்போது என்ன பரிகாரம் (remedy)? பிராமணர்கள் எல்லோரும் இப்போதிருக்கிற வாழ்க்கை முறைகளை விட்டு, அத்யயனத்துக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று என்னைக் கேட்டால், அப்படி நான் எதிர்பார்க்கிறேனோ இல்லையோ, அது காரிய சாத்தியமாக உங்களுக்குத் தோன்றுகிறதோ இல்லையோ,

அவர்கள் இப்படித்தான் செய்தாக வேண்டும் என்றுதான் நான் சொல்ல வேண்டும். நம் மூலதர்மமே பறிபோய்விட்டது என்று வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதற்கு குரு பீடம், ஆசாரிய ஸ்தானம் எதுவும் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. முடியாததாகத் தோன்றினாலும்கூட, அப்படிப்பட்ட நல்ல லக்ஷியங்களையும்

முடித்துக் காட்ட வேண்டும் என்று சொல்வதற்குத்தான் மதங்கள், மடங்கள் இருக்கின்றன. இந்த லக்ஷியத்துக்குத்தான் அவை தங்கள் பூரண சக்தியையும் செலவழித்துப் பாடுபட வேண்டும். “சத்தியாக்கிரஹத்தால் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணுவதாவது, இதெல்லாம் நடக்காத காரியம்” என்று சொன்னவர்கள் இருக்கத்தான்

செய்தார்கள். நடக்க முடியாது என்று நினைத்த எத்தனையோ இந்த உலகத்தில் நடந்துதான் இருக்கிறது. இது நடக்க முடியாத விஷயம் என்று நினைத்து, தர்மத்தையும் சத்தியத்தையும் விட்டுக் கொடுத்துப் பேசுவது எனக்கான காரியமில்லை. நடத்துவதும் நடத்தாததும் உங்கள் கையில் இருக்கிற விஷயம்.

நான் செய்யக்கூடியது எல்லாம் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறவைகளை அலுக்காமல் சலிக்காமல் உங்கள் காதில் போடுவதுதான்; சாஸ்திரங்கள் எவற்றை உங்கள் கடமை என்று விதித்திருக்கின்றனவோ

அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்கவேண்டும் என்று வலியுறுத்துவதுதான்.

பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
kamakoti.org/tamil/part1kur…

கோகர்ணம் :
பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் ! அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் ...

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling