" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
பிராமணர்களின் புத்திக்கூர்மை மழுங்க காரணம் என்ன?!
முஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது?!
பிராமணனே புத்தியால் ஆகிற காரியங்களை ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகச் செய்து வந்திருக்கிறான் அல்லவா? ஆதியிலெல்லாம் இவனுடைய புத்தி கொஞ்சம்கூடத் தன்னலனுக்குப் பிரயோஜனமாகாமல் சமூக க்ஷேமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டு வந்தது. இந்தத் தியாக விசேஷத்தாலேயே அது பிரகாசமான சாணை தீட்டிய கத்தி
மாதிரிக் கூர்மையாக இருந்தது. இப்போது, இவனுக்கு சமூக க்ஷேம நோக்கம் போய், தன்னலமான லௌகிக ஆசைகள் எல்லாம் வந்தபின் அந்த புத்திப் பிரகாசம் மழுங்கவேண்டியதுதான். இவனுக்கென்று ஏற்பட்ட கடமைகளைச் செய்யவே முன்பு இவனுக்கு புத்தி வன்மையும் பகவத் பிரசாதமாகக் கிடைத்திருந்தது. கடமையை விட்டபின்
ந்த புத்திக்கூர்மை மழுங்க வேண்டியதுதான்.
ஆனாலும் — சைக்கிளில் காலால் பெடல் பண்ணுவதை நிறுத்திய பிற்பாடுகூட, ஏற்கெனவே உந்தின வேகத்தின் விசேஷத்தால், கொஞ்சம் தூரம் அது பெடல் பண்ணாமலே ஓடுகிறது அல்லவா? அந்த மாதிரி, பிராமணன் ஆத்மீக வித்தைகளை விட்டு லௌகிக வித்தைகளில் போய் விழுந்த
பின்னும், ஏற்கெனவே தலைமுறை தலைமுறையாக இவனுடைய பூர்விகர்கள் பெடல் பண்ணியிருந்த பலம் இவனுக்கும் கொஞ்சம் மிஞ்சியிருந்தது. இவனாகப் பெடல் பண்ணாவிட்டாலும் அவர்கள் சேமித்து வைத்த புத்திப் பிரகாசம் இவனுக்கும் இன்னமும் பாரம்பரியமாகக் கொஞ்சம் வந்தது. இந்த மூளை பலத்தினால்தான்
இங்கிலீஷ்காரனின் படிப்புமுறையில் ஆச்சரியப்படும்படியாகத் தேர்ச்சி பெற்றான். அவர்களுடைய உத்தியோகம், சட்டம், தொழில் முறைகள் ஆகியவற்றை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டு, இவற்றில் அவர்களுக்கே தெரியாத தந்திரங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற அளவுக்குச் சதுரனாகி விட்டான்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.