" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
முஸ்லீம்கள் ஆட்சிக் காலத்தில்கூட கெடாத வேதரக்ஷணம் வெள்ளைக்காரர்கள் வந்தவுடன் ஏன் கெட்டது?!
இதற்குக் காரணம், வெள்ளைக்காரர்களோடு புது ஸயன்ஸ்களும், இயந்திர (மெஷின்) சகாப்தமும் கூடவே வந்ததுதான்—இதுவரைக்கும் தெரிந்திராத பல புது விஷயங்கள் இப்போது தெரிந்தன. ‘விஷயம்’ என்று மட்டும் எடுத்துக் கொண்டால் இந்த ஸயன்ஸினால் பல உண்மைகள் தெரிய வந்தன. இது நல்லதுதான். ஆனால், இந்த
விஷய ஞானத்தினால் ‘காரியம்’ என்று செய்கிறபோது, ஒழுங்கு தப்பிப் போகிறதற்கான சபலங்கள் ஏகப்பட்டதாக உண்டாகிவிட்டன. ஸயன்ஸினால் காரியம் செய்ய மெஷின்கள் உண்டாயின. எலெக்ட்ரிசிட்டி, ஸ்டீம் பவர் எல்லாம் வந்தபின் வெகு விரைவில் பல காரியங்களைச் செய்து கொள்ள முடிந்தது. இவற்றால் பல சௌகரியங்களைச்
செய்து கொள்ளலாம் என்றாயிற்று. ஆனால் இந்த செளகரியங்கள் எல்லாம் இந்திரியங்களுக்குத்தான். இந்திரியங்களுக்கு சுகத்தைக் காட்டிவிட்டால் போதும். அது மேலே மேலே கொழுந்துவிட்டுக் கொண்டு, ஆசைகளை விஸ்தரித்துக்கொண்டே போகும். இப்படியாக அவசியமில்லாத—ஆத்மாவையே கெடுக்கிற சுக சாதனங்கள் பெருகின.
முன்பின் கண்டிராத இந்த சுகங்களின் ஆசை எல்லா தேச ஜனங்களையும் இழுத்த மாதிரி பிராமணனையும் இழுத்தது. வெள்ளைக்காரனோடு வந்த ஸயன்ஸினால் ஏற்பட்ட இன்னொரு பெரிய அனர்த்தம் அது. ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு, நம்பிக்கையின் மீதும் அநுபவத்தினாலும் ஏற்பட வேண்டிய சமய
விஷயங்களைப் பொய், புரளி என்று நினைக்க வைத்தது. முஸ்லீம் ஆட்சியில்கூட தன் ஸ்வதர்மத்தை விடாதவன், இப்போது அதைவிட்டு சௌக்கியங்களைத்தேடி வந்து விட்டான். இங்கிலீஷ்காரனைவிட ‘டிப்டாப்பாக’ டிரஸ் செய்துகொண்டு, சிகரெட் குடிக்கவும், டான்ஸ் ஆடவும் சாமர்த்தியம் பெற்றுவிட்டான். தங்கள்
தங்கள் வித்தைகளில் இப்படிக் கைதேர்ந்து விட்டவனுக்கு அவர்களும் நிறைய உத்தியோகம் கொடுத்தனர் !
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.