Dr.Strange Profile picture
Dharmo Rakshati Rakshitah - Protect the Dharma, Dharma will protect you!

Jun 29, 2021, 13 tweets

" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பிராமண துவேசம் உருவாக உண்மையில் யார் காரணம் ?

இப்போதுதான் பெரிய அனர்த்தம் உண்டாயிற்று. ‘இதுவரை தலைமுறை தத்வமாக அவரவருக்கும் ஒரு தொழில் என்று ஏற்பட்டு, ஜீவனோபாயத்துக்கு என்னடா செய்வோம்?’ என்கிற கவலையில்லாமல் நிம்மதியிருந்து வந்தது. இப்போது பிராமணனைப் பார்த்து, மற்றவர்களும் இப்படிப் பரம்பரையாக வந்த தொழிலை விட்டுவிட்டு,

பிரிட்டிஷ்காரன் தருகிற உத்தியோகம், அவனோடு வந்த தொழில்கள், பாங்கு, ரயில்வே இவற்றிலேயே போய் விழுந்தார்கள்! அதோடு மெஷின்கள் ஜாஸ்தியாக ஆக, கைவேலையும் குறைந்ததால், சில தொழில்காரர்கள் கஷ்டத்துக்கு ஆளாகி, வேறு உத்தியோகத்துக்கு வர வேண்டியதாயிற்று. இன்னாருக்கு இன்ன தொழில் என்ற வரையறை

இல்லாமல், புதிதாக நம் தேசத்தில் “தொழிலுக்காகப் போட்டி” என்கிற பெரிய விபரீதம் உண்டாயிற்று. போட்டி என்று வந்துவிட்டால் சாதாரணமாகவே அப்புறம் பொறாமை, வயிற்றெரிச்சல், அசூயை, துவேஷம், சண்டை அத்தனை பட்டாளமும் அதன்கூட வந்துதானே ஆக வேண்டும்? அதோடுகூட, இங்கே, விசேஷமாக, முன்னே நான் சொன்னபடி

பூர்வீகர்கள் பெடல் செய்து தந்திருந்த புத்தி பலம் பிராமணனுக்கு அதிகமாக இருந்து படிப்பு, உத்தியோகம் இவற்றிலே இவன் முதன்மைக்கு வந்ததால்—சமூகத்தில் ரொம்பக் குறைச்சல் சதவீதமே இவனுடைய ஜனத்தொகையாக இருந்தும்கூட சர்க்கார் பதவி, காலேஜ், வைத்தியம், சட்டம் (law) எல்லாவற்றிலும் இவனே ரொம்ப

ஸ்தானங்களைக் கைப்பற்றியிருந்ததால், மற்றவர்களுக்கு இவனிடம் துவேஷம் வரத்தானே செய்யும்? துவேஷத்தைக் கூடுதலாக்கினால் தன் ஆட்சியைத் ஸ்திரப்படுத்திக்கொள்ளலாம் என்று வெள்ளைக்காரன் கண்டு கொண்டான். ஆரியன்-திராவிடன் Race-theory ஐக் கட்டிவிட்டான். ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக

இருந்தவர்களிடையில் பேதத்தின் விதைகளை நன்றாக போட்டு விட்டான். போட்டிச் சூழ்நிலையில் ஏற்பட்டிருந்த கசப்பில் இந்த யுக்தி நன்றாகப் பலித்துவிட்டது.

துவேஷம் இரட்டிப்பாகிற மாதிரி பிராமணனே இன்னொன்றும் செய்தான். ஒரு பக்கத்தில் ஜாதி தர்மத்தை விட்டுவிட்டு, இவனும் வெள்ளைக்காரனோடு சேர்ந்து

‘பழைய ஏற்பாடு காட்டுமிராண்டித்தனமானது; ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது (எக்ஸ்பிளாயிட் பண்ணுவது) கூடாது’ என்றெல்லாம் சமத்துவம் பேசினாலும், இன்னொரு பக்கம் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல், தான் ஏதோ உசத்தி என்று பெருமை கொண்டாடிக் கொண்டான்.

இது போதாது என்று நியமங்களில் அவர்களைவிடத் துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூற அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே செய்யும்?

‘தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம்’ என்கிற கதையாகப் பிராமணன்

தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களுக்கும் அவரவர் தர்மங்களைவிடுகிற மாதிரி செய்துவிட்டான். தன் தர்மத்தை விட்டபின் இவனுக்கு உயர்வு எதுவுமே இல்லை. தன் தர்மத்தைச் செய்தபோதும்கூட, இவனாக உயர்வு பாராட்ட நியாயமில்லை. ‘ஒவ்வொருவரும் ஒன்றைச் செய்கிறார்கள்; நான் இதைச் செய்கிறேன்’ என்றுதான்

என்றுதான் அடக்கமாக இருக்கவேண்டும். ஆனாலும் தன்னலமில்லாமல், கடும் விரத நியதிகளோடு இவன் தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்களே இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்து கௌரவித்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எல்லாரும் தன்னைத் தூற்றும்படி, கரித்துக் கொட்டும்படி இவனே

இவனே ஆக்கிக் கொண்டு விட்டான்.

ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம் !

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling