Dr.Strange Profile picture
Dharmo Rakshati Rakshitah - Protect the Dharma, Dharma will protect you!

Jun 29, 2021, 15 tweets

" ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் ! "

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

" நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும் பிராமணர்களை கைவிடாத போதும், அக்ரஹாரத்தையும் வேதபாடசாலைகளை கைவிட்டது பிராமணர்கள் தான் !"

ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம். சிலபேர் இதற்கு சமாதானம் சொல்கிறார்கள்.

இங்கிலீஷ்காரர் ராஜ்யம் வந்தபின், இவர்களுக்கு ராஜ மான்யங்கள் இல்லையே. இவர்கள் எப்படி எவ்விதமான வருவாயும் இல்லாமல் உயிர்வாழ முடியும்? அதனால்தான் இங்கிலீஷ்

படிப்பு, சர்க்கார் உத்தியோகம் என்று இவர்கள் இறங்கும்படி ஆயிற்று. சந்தர்ப்பச் சூழ்நிலை (force of circumstances) இவர்களை அப்படி நெரித்தது. அதற்காக இவர்களைக் கண்டிக்கக் கூடாது என்று ஒரு சமாதானம் சில பேர் சொல்கிறார்கள்.

இதில் கொஞ்சம் நியாயமும் இருக்கலாம். ஆனால் முழு நியாயமும் இல்லை

என்றுதான் என் மனசுக்குப் படுகிறது. இங்கிலீஷ்காரனுக்கு முன்னால் மொகலாய சாம்ராஜ்யம் (Moghul Empire), மற்ற பல சுல்தான் ஆட்சி எல்லாம் இருந்ததே. அப்போதெல்லாம் ஏதோ கொஞ்சம் பண்டிதர்கள் தர்பார் உத்தியோகத்துக்குப் போனார்கள் என்றாலும், மற்றவர்கள் ராஜ மானியம் இல்லாமலேதானே தங்கள் தர்மத்தைத்

தொடர்ந்து செய்து வந்தார்கள்? அக்ரஹாரம் காலியானது; கிராமம் பாழானது. வேதபாடசாலைகள் சூனியமானது, நிலங்கள் எல்லாம் ஸர்டிஃபிகேட்களாக மாறினது—இந்த அனர்த்தங்கள் எல்லாம் சுமார் நூறு வருஷத்துக்கு உட்பட்ட விஷயங்கள்தானே? அதற்கு முந்தின தலைமுறை வரை வைதிக தர்மம் உருக்குலையாமலேதானே

இருந்திருக்கிறது.

இதற்குக் காரணம் ஹிந்து ராஜாக்கள் மட்டும்தான் என்றில்லை; ஹிந்து சமூகத்தில் மற்ற எல்லா வர்ணத்தாருமே வேத தர்மம் நசித்துப் போகக்கூடாது; பிராமண ஜாதி அழிந்து போகக் கூடாது என்று மனசார நினைத்து அதற்காக அள்ளிக் கொடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இன்றைக்கும்

படிப்பதற்கு பிராமணப் பசங்கள் இல்லாததால் வெறிச்சோடியிருக்கிற நூற்றுக்கணக்காண பாடசாலைகள் இருக்கின்றனவே. இவற்றுக்கெல்லாம் முதல் போட்டு மூலதனம் வைத்திருப்பது யார்? பெரும்பாலும் நாட்டுக்கோட்டை நகரத்தார்களும், கோமுட்டிச் செட்டிமார்களும், பண்ணையார்களான வேளாளர்களும்தான்.நகரத்தார் செய்த

கோயில் திருப்பணிக்குக் கணக்கில்லை. அதே மாதிரி, ‘இந்தக் கோயிலுக்கும் வேர் வேதம். அது இருந்தால்தான் இந்தக் கோயிலில் பூஜையும் சாந்நித்தியமும்’ உண்டு என்ற நம்பிக்கையில், ஒரு ஆலயத் திருப்பணி செய்தால் ஒரு வேத பாட சாலையும் வைக்க வேண்டும் என்று அவர்கள் தமிழ்நாடு முழுவதிலும்

வைத்திருக்கிறார்கள். வேளாளர்களில் பெரிய நிலச்சுவான்தார்களாக இருந்தவர்களும் இப்படியே வேத பாடசாலைகளுக்காக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இங்கிலீஷ்காரன் ஆட்சி வந்த பிறகும் அவன் காட்டிய சுகபோக்ய ஜீவனத்தில் மயங்காமல், சாஸ்திரம் விதிக்கிற அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி

செய்துகொள்வதோடு மட்டும் பிராமணன் வாழ முற்பட்டிருந்தால், அவனுக்கு நிச்சயம் மற்ற சமூகத்தார் அதற்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள். அவர்கள் இவனைக் கைவிடாதபோதே, இவனாகத்தான் அக்ரஹாரத்தை, வேதபாடசாலைகளை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான். மேல் நாட்டு நாகரிகத்தில் புதிதாக வந்த ஸயன்ஸினால்

பெருகி விட்ட போக்கிய வாழ்வில் இவனுக்கு ருசி வந்துவிட்டது. ‘ஆத்மாபிவிருத்திக்கு எந்த அளவு அவசியமோ, அநுகூலமோ, அந்த அளவிற்கு மட்டுமே சரீர போஷணம் செய்து கொண்டால் போதும்’ என்ற உயர்ந்த லட்சியம் போய்விட்டது. ‘சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான்’

என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்வதற்கில்லை. அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

கிராமத்தில் சாப்பிட வசதியே இல்லை என்றால், மெட்ராஸ் மாதிரி டவுன்களுக்கு வந்து, ஏதோ வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்தவுடன் இவன்

இவன் திருப்திப்பட்டிருக்க வேண்டியதுதானே? அப்படி திருப்தி அடைந்திருந்தால் மேலே சொன்னது சரி. நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன? மெட்ராஸில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால்கூட, டில்லியில் இரண்டாயிரம் தருகிறான் என்றால் இவன் அங்கே ஓடுகிறான்! இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த

தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே! அதற்கப்புறம் நியூயார்க்கில் 4000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே! ‘மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா?அதிலும்

அதிலும் சேருகிறேன். அங்கே மதுபானம், மாம்ஸ போஜனம் எல்லாம் பழகவேண்டியிருந்தாலும் பரவாயில்லை’ என்று பணத்துக்காக எதையும் செய்வதைத்தானே பார்க்கிறோம். ஆகையால் பிராமணன் ஸ்வதர்மத்தை விட்டதற்குச் சொல்கிற சமாதானம் கொஞ்சங்கூட எடுபடவில்லை.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling