Master🍥 Profile picture
Out of Stock🤷🏿‍♂️. Goofy🎠 FakeID 🎭 @photophactory_📷 https://t.co/a0AqPXP9g0

Jul 12, 2021, 14 tweets

#goofybooks
நா.முத்துக்குமார் புத்தகங்கள் : A Thread
#HappyBirthdayNaMuthukumar

பட்டாம்பூச்சி விற்பவன்

1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கான பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பரிசை பெற்றது.

சுவாசத்தை போல, தாய் மொழி போல, சைக்கிள் மிதிப்பது போல கவிதை இவருக்கு படு இயல்பாக இவருக்கு கைவருகிறது.

-பாலுமகேந்திரா

நியூட்டனின் மூன்றாம் விதி

கிராமம் நகரம் காடு வயல் ஜனங்கள் மத்தியில் ஒரே நேரத்தில் நின்றுவிட்டு வந்தது போலும்; நிறைய வாங்கி வந்து போலும் உள்ளது வாசித்து முடிக்கையில்.

-கந்தர்வன்

குழந்தைகள் நிறைந்த வீடு

கவிதைகளின் ஜூம் லென்ஸ் எனப்படும் ஹைக்கூக்களின் தொகுப்பு.

ஹைக்கூ என்னும் சின்னஞ்சிறு மீன்கள் குறுகுறுவென்று என் பாதங்களை உரச தொடங்கிய நேரத்தில் நான் வாழ்க்கை நதியில் இறங்கத் தொடங்கியிருந்தேன்.

-நா. முத்துக்குமார்.

அ'னா ஆ'வன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. இக் கவிதைகளில் அன்றாட வாழ்வின் உயித்துடிப்புள்ள சித்திரங்களை உருவாக்குகிறார்.

என்னை சந்திக்க கனவில் வராதே

காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம், மொழி, தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்து கவிஞர்களின் காதல் கவிதைகளின் தொகுப்பு.

பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்

நா. மு, பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது கலந்துகொண்ட கவியரங்கங்கள், கவிதைபோட்டிகள் போன்றவற்றிற்காக எழுதப்பட்டது.

கிராமம் நகரம் மாநகரம்

பால்யம் ஒரு கண்ணாடிக்குளம். அதை உடைத்து உள்ளே மூழ்கும்போது சில்லுச் சில்லாய் முப்பரிமாண பிம்பங்கள் அறியப்படாத ஓர் உலக்கிற்கு அழைத்துச்செல்கின்றன. கிராமத்தில் பிறந்து நகரத்தில் படித்து மாநகரத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவனின் பதிவுகள்.

அணிலாடும் முன்றில்

எத்தனை முறை சொன்னாலும், ஏதோ ஒரு கணத்தில், எங்கோ ஒரு திருப்பத்தில் நம் கண்கள் நம்மை அறியாமல் வந்த வழியை திரும்பி பார்ப்பதில்லையா? அந்தக் கணத்தின், அந்தத் திருப்பத்தின் அனுபவங்கள்தான் இந்த தொகுப்பு.

பால்யத்தின் கண்கள் வழியாக உறவுகளை அணுகி இருக்கிறார்.

வேடிக்கை பார்ப்பவன்

காற்றில் படபடக்கும் காகிதத்தின் வரிகளைப்போல, மடபள்ளியில் இருந்து அரை நிமிடம் பெருமாளுக்கு திறந்துகாட்டும் பிரசாதத்தை போல, கடந்து செல்லும் ரயிலுக்கு கையாட்டும் சிறுவனைப்போல இக் கட்டுரையில் என் வாழ்க்கையின் சிறு பகுதியை வரைந்திருக்கிறேன்.
-நா. மு

நினைவோ ஒரு பறவை - கட்டுரைகள்

பூக்களின் இதழ்களில் குழந்தைகளின் முகத்தையும், குழந்தைகளின் முகத்தில் பூக்களின் இதழ்களையும் பார்க்கத் தெரிந்தவன் ஆசீர்வதிக்கப்பட்டன். இரண்டையும் வாடாமல், உதிராமல் பார்த்துக் கொள்பவன் மிகப்பெரும் பாக்கியவான்!

பால காண்டம்

மனம், ஒரு மாய சிலேட்டுப்பலகை. குழந்தைப் பருவத்தில் அதில் எழுதப்பட்டவற்றை மறுபடியும் அழித்து எழுத எந்தக்கோவை  இலைகளும் கிடைப்பதில்லை. கனிகளுக்குள் முழு மரத்தின் சாரமும் அடங்கியிருப்பதைப் போல குழந்தைப்பருவத்தில்தான் நம் முழு வாழ்க்கையின் சாரமும் ஒளிந்திருக்கிறது.

காண்பேசும் வார்த்தைகள்

 'கண் பேசும் வார்த்தைகள்' பாடலில் “காட்டிலே காயும் நிலவைக் கண்டுகொள்ள யாருமில்லை. தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை” என ஒருதலைக்காதலுக் இரண்டு உருவகங்களை எனக்குக் கொடுத்தது.

"பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் மூன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, அ'னா ஆ'வன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே" கவிதை நூல்களின் முழுத்தொகுப்பு.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling