SSR 🐘 Profile picture
நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்🙏🙏

Jul 14, 2021, 13 tweets

சிற்றரத்தை:-

நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில் ஒன்றுதான் சித்தரத்தை.

அக்காலத்தில் வீடுகளில் இருக்கும் மூலிகை மருந்துகளில் முக்கிய இடம் சித்தரத்தைக்கு உண்டு.

#மூலிகைஅறிவோம்
Continue>>>>>

குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும்.

கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால்

நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிக்கொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும்

சித்தரத்தை சிறந்த மணமூட்டியாக திகழ்வதால் வாயின் துர்நாற்றம் போக்க மவுத் ஃபிரஷ்னர் ஆகப் பயன்படுகிறது, மூலிகை மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

சிறிய இரண்டு துண்டு சித்தரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால் பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும்.

வறட்டு இருமல் சூட்டு இருமலுக்கு, இந்தத் துண்டுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

சித்தரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது.

இதன் மருத்துவச் செயல்பாட்டுக்கு, அதன் மாறாத குணம் முக்கியம்

இடுப்பு வலி போக்கும் சித்தரத்தை நீர் மருந்து :
இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில் சிலருக்கு கடும் வலி தோன்றி, இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவர்கள்.

அவர்கள் அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை

அதில் வைத்து தேய்க்க, சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும்.

அதை எடுத்துக் கொண்டு சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து அந்த கலவையை இளஞ்சூட்டில் இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவிவர விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.

முட்டி வீக்க வலி மருந்து:

கால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கங்களால் சிலர் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருபவர்கள் தேவதாரு பட்டை, சாரணை வேர், சீந்தில் கொடி, நெருஞ்சில் வேர் மற்றும் சித்தரத்தை, இவை அனைத்தையும் நன்கு உலர்த்தி, பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு,

அதில் சிறிது எடுத்து மூன்று தம்ளர் நீரில் கொதிக்க வைத்து முக்கால் தம்ளர் அளவில் நீர் வற்றியதும் அந்த நீரை நன்கு பிழிந்து தினமும் இருவேளை பருகிவர,

நடக்க முடியாமல் அவதிப்படுத்திய மூட்டு வீக்கங்கள் விரைவில் வடிந்து, வலிகளும் விலகிவிடும்.

அஜீரணத்திற்கு:

உலர்ந்த சித்தரத்தை ஒரு துண்டு எடுத்து வாயில் இட்டு சுவைக்க நாக்கில் காரம் கலந்த விறுவிறுப்பு தன்மை தோன்றும்,

அப்போது சுரக்கும் உமிழ்நீரை விழுங்கிவர குமட்டல், வாந்தி பாதிப்புகள் சரியாகி விடும்.
மேலும், இதுவே, வறண்ட இருமலையும் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.

உடல் சூட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக சித்தரத்தை மருந்து அமையும்.

எலும்புகள் பலம் பெற:-

இந்த பாதிப்புகள் யாவும் நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும்

இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில், நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வெகுநாட்களாக துன்பமளித்த வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும், உடலுக்கு சிறந்த சக்தியளிக்கும் மருந்தாகும்,

சித்தரத்தை சூப் :-

சித்தரத்தையின் முழுமையான நன்மைகளை அறிந்த கீழை ஆசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், கொரியா, சீனா போன்ற தேசங்களில், தினசரி உணவில் சூப், துவையல் போன்ற வகைகளில் சேர்த்து, பயன்படுத்தி வருகின்றனர்.

#மூலிகைஅறிவோம்
#SSR

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling