1) படத்தில இருப்பது யாரு ? 2) இது என்ன ? 3) படத்தில என்ன நடக்குதுனு அண்ணா என கேட்டான்,
சரி திரேட் போட்டா எல்லாரும் தெரிஞ்சிப்பாங்கனு பகிர்ந்துக்கிறேன்,
வாங்க திரேட்க்கு போலாம்,
படத்தில இருப்பது பதஞ்சலி முனிவர்,
#நோக்கம்சிவமயம்
#SSRThreads
1/9
கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள், பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர்.
நந்திதேவரிடம் இருந்து நேரடியாக யோக கலையைக் கற்ற ஏழு பேர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர்,
நமக்கு யோகக் கலையை முறையாக வகுத்துக் கொடுத்தவர் இவரே.
2/9
Feb 15, 2024 • 25 tweets • 7 min read
சைவத்தை மீட்ட நெல்லை - (Thread)
நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததாலும்,
மூங்கில் நெல்லால் பசியைப் போக்கிய ஊர் என்பதாலும் நெல்வேலி என்கிற பெயர் பெற்றது.
பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலியாக பெயர் மாற்றம் பெற்றது என்பது வரலாறு.
#சைவஉணவு
#SSRThreads
1/25
திருநெல்வேலி என்றாலும் உள்ளூர்க்காரர்களுக்கு என்றும் நெல்லை தான்.
தாமிரசபையின் தலைவன் திருநெல்வேலி உடைய நயினார் வீற்றிருக்கும் திருநெல்வேலியை
பாண்டிய அரசர்கள், இராஜேந்திரசோழன், விசயநகர மன்னர்கள், பாளையக்காரர்கள்,
சந்தா சாகிப்,
ஆற்காடு நவாப், மருதநாயகம், போர்த்துக்கீசியர்,
2/25
Dec 15, 2023 • 25 tweets • 4 min read
சைவத்தை இழந்த மதுரை - (Thread)
கொஞ்சம் நாட்களாய் மதுரைக்கு அடிக்கடி பயணபடுகிறேன்.
தனியாகவும், நண்பர்களுடன் சேர்ந்து எப்பொழுது சென்றாலும் அசைவ உணவுக்கடைகளே கண்களில் அதிகம் தென்படும்,
உணவுகளைப் பற்றி நான் நிறைய திரேட் போட்டு இருந்தும் இது கொஞ்சம் Special,
1/25
சாப்பாடுன்னா மதுரை தான்யா,
மதுரையை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னு பல பேர் சொல்லுவாங்க,
அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல,
விதவிதமான அசைவ உணவுகளும் புரோட்டா கடைகளும், தள்ளுவண்டிகளும், நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்று புகழ் பெற்றுள்ளது.
2/25
Jul 12, 2023 • 13 tweets • 5 min read
#அரிக்கொம்பன்🐘 கன்னியாகுமரி மாவட்டத்தில் அப்பர்கோதையார் முதல் முத்துகுழிவயல் வரையுள்ள இடத்திலே சுற்றி கொண்டு இருக்கிறான்.
அரசி,கரும்பு,சர்க்கரையை உண்டவன் கன்னியாகுமரி அப்பர்கோதையார் வந்த பிறகு இயற்கை உணவுக்கு தன்னை பக்குவப்படுத்தி கொண்டான் என நம்புவோம்,
#யானைக்காதலன்_SSR
1/13
அப்பர்கோதையார் முதல் முத்துகுழிவயல் வரை (கன்னியாகுமரி மாவட்டம்) இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த மழை காடுகள் நிறைந்த பகுதி அதே நேரத்தில் சோலை காடுகள் என்னும் கரும் பச்சை பசுமையான புல்வெளிகளும் உண்டு,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் கோதையாறு ஒரு வற்றாத ஆறு,
2/13
Jun 26, 2023 • 26 tweets • 4 min read
#அரிக்கொம்பன் Part - 3
கேரளா மாநிலம், இடுக்கி மலையில் வசித்தவனை அவன் அட்டகாசம் தாங்காமல், கேரள வனத்துறை அரிசிக்கொம்பனை பிடித்து அவன் உடலில் ஜி.பி.எஸ் கருவியைப் பொறுத்தி, பெரியாறு அணையை ஒட்டிய மேதகானம் பகுதியில் விட்டுவிட்டு தீவீரமாக கண்காணித்தனர்.
#யானைக்காதலன்_SSR
1/26
அவனே கண்ணகி கோயில் வழியாய் தேனிக்குள் புகுந்து குறிப்பாக கம்பம் ஊருக்குள் இருந்தவனை,
தமிழக வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு 2 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு மலையில் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள முத்துக்குளி வயல் என்கிற இடத்தில் விட்டனர்
1/22
இத்திருச்சுற்றில் தெற்கில்
அகோர சிவன்,மேற்கில் தத்புருஷர்,வடக்கில் வாமதேவர் என்று தெய்வ வடிவங்கள் அமைக்க பெற்று சிவபெருமான் சதாசிவ மூர்த்தியாகக் காட்சி தருகிறார்
கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது
மேற்தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
2/22
May 13, 2023 • 25 tweets • 5 min read
தஞ்சை பெரிய கோவில் (Thread)
Part-1
பெரிய கோவில் பற்றியும் இராஜராஜ சோழரின் பெருமை பற்றியும் பேச இந்த ஆயுள் போதாது,
எனக்கு தோன்றும் போதும், நேரம் கிடைக்கும் போதும் இராஜராஜ சோழனையும் இராஜேந்திர சோழனையும் பற்றி பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.
1/25
பெருமகனார் இராஜராஜ சோழரை பற்றி பேச மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்கு காரணம் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஒரு காரணம்.
திரைப்படத்தில் சொல்ல மறந்து செய்தி தஞ்சை பெரிய கோவில்,
இதற்கு முன் ஆறு திரேட் எழுதி உள்ளேன் இது ஏழாவது,
2/25
May 12, 2023 • 24 tweets • 5 min read
நேற்று பக்கத்தில் கோவில் சென்றேன் அந்த கோயில் அடியார்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்,
அவர்களின் பக்கத்தில் அமைதியாக எதும் பேசாமல் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தேன்
(கோவில் சென்றால் மட்டும் இல்லை வர வர அதிகமா யாருடனும் பேச தோன்றுவதில்லை)
1/24
கைலாய வாத்தியம் வாசித்துவிட்டு அசதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்,
இவன் தான் தாளம் சரியா வாசிக்கல, பயிற்சி எடுக்கனும், Sunday எல்லாரும் வாங்க practice பண்ணலாம் நிறைய இடத்துல சரியாக Sync ஆகல என அவர் தான் மூத்த அடியார் போல பேசினார்,
எல்லாருக்கும் சிறு வயசு தான்.
2/24
Apr 20, 2023 • 23 tweets • 7 min read
சிறுத்தொண்டர் ஆற்றிய பெருந்தொண்டு:
''பிள்ளைக்கறி சீராளன் அமுது படையல் விழா":20-4-2023 இன்று இரவு 11-55க்கு துவங்கி மறுநாள் விடிய விடிய திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் நடைபெருகிறது,
1/23
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,
இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,
2/23
Apr 18, 2023 • 5 tweets • 2 min read
மகாபாரதம்;
சூதாடி வெல்ல முடியாமல் முடிதுறந்ததால்,
தன் முடிவிழுத்தி முடிவிரித்து
முடியை முடியேன் என
முடிவெடுத்தாள் ஒருத்தி,
குருதியில் ஓடியது குருசேத்திரம்,
முடியாத முடியால் அழிந்தது குருகுலம்,
நடந்து முடிந்தது மகாபாரதம்,
-திரௌபதி
1/4
சிலப்பதிகாரம்;
தன் சிலம்பு ஒன்று சிக்கியதால்
சினம்கொண்டு சீறி முடிகலைத்து
மூர்க்கமாய் எழுந்தாள் இன்னொருத்தி,
முடிவாய் முடிதுறந்தான் பாண்டியன்,
முடியாத அவள் கூந்தலால் தன் கற்பின் வலிமையால் எரிந்து கரியாய் முடிந்தது மதுரை.
- கண்ணகி
2/4
Apr 3, 2023 • 8 tweets • 3 min read
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,
புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள் எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
சில நாட்களுக்கு முன் மாற்று மதத்தினர் நமது கோவில் வாசலில் கறிசோறு சாப்பிட்ட வீடியோக்கு முட்டு குடுத்த நாயி ஒன்னு கண்ணப்ப நாயனார் பத்தி பேசிட்டு இருந்துச்சு அதுக்கு மட்டும் இல்ல அரைவேக்காடு எல்லாருக்கும் இந்த தரேட்
#SSRthreads #நோக்கம்சிவமயம்
1/16
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?
எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் புரிந்திருக்கும் ?
அதனால் அனைவருக்கும் புரியும்படி விளக்க விரும்புகிறேன்.
2/16
Aug 7, 2022 • 21 tweets • 8 min read
தஞ்சாவூர் என்றால் உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வரும்?
தஞ்சை பெரியகோயில்,
திருமுறைகளை மீட்ட இராஜராஜன்,
தலையாட்டிப் பொம்மைகள்,
தஞ்சாவூர் ஓவியம்.
இதானே ?
ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தஞ்சாவூர் நாவில் நீர் ஊறவைக்கும் உணவுகளுக்கும் பெயர் போனது என்பது தெரியுமா?
1/20 #SSRThreads
உணவுப் பாரம்பரியமே ஒருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது.
ஒருமுறை தஞ்சை மாவட்ட உணவுகளைச் சுவைப்பவர்கள் அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்னை போல,
காவேரி பாய்ந்து வளம் சோ்த்த விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம்னு சும்மாவா சொன்னாங்க
2/20
Aug 5, 2022 • 7 tweets • 3 min read
என்னப்பா மகள் பிறந்திருக்காளா ?
ஆமான்னே, அதான் புது Fan வாங்கிட்டு போறேன், வீட்ல பழைய Fan சத்தம் கேட்கும் பிள்ளை தூங்க கஷ்டபடுவா,
என்னப்பா கோவிலுக்கு போறேம்னு பணம் கேட்டியே எதுக்கு ?
மகளை கான்வென்டுல சேர்த்தேன் அதான் புது ஷூ வாங்க வந்தேன்,
என்னடா பத்திரிக்கை ?
மகள் ஆளாயிட்டான்னே,
வீட்டுக்காரியும் மச்சானும் சடங்கு நடத்த சொல்லிட்டாங்க உள்ளூர் மண்டபத்துல வாடகை கம்மி நீ அவசியம் வந்திருங்கண்ணே.
1/5
Jan 30, 2022 • 13 tweets • 3 min read
ருத்ராட்சம்:- (Thread)
ருத்ராட்சம் பற்றிய Spaceல் பேசும்போது நிறைய பேர் ருத்ராட்சமுகங்கள் அடிப்படையில் என்ன பலன்கள் கிடைக்கும் என கேட்டிருந்தனர்
ருத்ராட்சத்தை பற்றிய தெளிவு இன்னும் மக்களிடம் இல்லை என்பதே உண்மை அதன் காரணமாக எனது 6ஆவது ருத்ராட்சத்தை பற்றிய திரேட்.
#SSRThreads 1/1
பொதுவாக ருத்ராட்சத்துக்கு மனதை அடக்கி, மனக் கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது.
இதை அணிபவர்கள், இதனை உணர்வுப்பூர்வமாக அறியலாம்.
ருத்ராட்சத்துக்கு நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத சக்தியும் சுய ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் திறனும் உண்டு.
1/2
Nov 18, 2021 • 10 tweets • 5 min read
கொக்கரை:- (Thread)
நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை.
பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை.
கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி என்பது நம் எல்லாரும் அறிந்த ஒன்று இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள்.
1/1
கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.
திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.
திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை கருவி இடம்பெறுகிறது.
கைலையாக் காட்சிகளை பெருவுடையார் கோவில் ஸ்ரீவிமானத்தில் சிற்பமாக எம்பெருமான் இராஜராஜசோழன் மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார்.
இதை தட்சிணமேரு என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.
Nov 12, 2021 • 19 tweets • 7 min read
தஞ்சை பெரிய கோவில் (Thread)
பெரியகோவிலை கட்ட இராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது.
மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார்.
இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு.
#ஐப்பசி_சதயம் #இராஜராஜசோழன் 1/1
அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.
அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார்.