மகான் Profile picture
சாதி மதம் கடந்து மனிதம் போற்று ❤️ | #தந்தைபெரியார் | #சேகுவாரா | @msdhoni | @vetrimaaran | உலகம் 🌍 🌎 சுற்ற ஆசை...

Jul 16, 2021, 15 tweets

#TheRevenant Western / Adventure

Language : English (தமிழ் ஆடியோ பதிப்பு இல்லை)

Duration : 2H 36M

Year : 2015

IMDb : 8/10

இந்த படம் எவ்வளவு நபர்கள் பார்த்திரூப்பீர்கள் என்று தெரியவில்லை.. ஆனால் சமீபத்தில் நான் பார்த்த ஒரு தரமான படம் என்றால் அதற்கும் மேல் என்றே சொல்லலாம்..

இவ்வளவு நாள் இந்த படம் பார்க்கலாம் தவறவிட்டோமே என்றும் தோன்றியது.. படத்தின் Cinematography, Background Music, Sound Recording,VFX அனைத்திலும் தரம் குறையாத தரம்🔥 முக்கியமாக இந்த படத்தில் ஓரிரு இடத்தை தவிர லைட்டிங் பயன் படுத்தாமல் எடுக்கப்பட்டுள்ளது.. லைட்டிங் பயன் படுத்தி உள்ள

இடத்திலும் பயன்படுத்தியவாறு தெரியாது.. படப்பிடிப்பு தளங்களும் கண்ணை குளிர வைக்கிறது.. அவ்வளவு அருமையான இடங்கள்.. அவ்வளவு அருமையாக இருந்தாலும் அதன் விளைவுகளும் மோசாமானவை என்ற நேர்த்தியாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் படத்தின் கதாநாயகன் @LeoDiCaprio என்ன மனுசன்யா என்ற

கேட்கும் அளவிற்கு நடிப்பு🔥 அவ்வளவு மெனக்கெட்டு நடிப்பு என்று தெரியாத அளவிற்கு நடித்திருப்பார்.. இரண்டு மணி நேரம் 36 நிமிடங்கள் எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் நிறைய இடங்களில் அடுத்து என்ன என்று சிந்திக்கும் வகையில் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும்.. ஆஸ்கார் விருது உட்பட நிறைய

விருதுகளை வாரி குவித்திருக்கிறது இந்த படம்..

கதை சுருக்கம்: மிருகங்களை வேட்டையாடி அதன் தோலை உரித்து பதப்படுத்தி வணிகம் செய்யும் ஒரு கும்பல்.. அந்த கும்பலை சார்ந்தவர்தான் நம்ம @LeoDiCaprio அந்த கும்பல் ஒரு இடத்திற்கு வேட்டைக்காக செல்கிறார்கள்.. வேட்டைக்காக ஒரு காட்டில் இருக்கும்

பொழுது திடீரென ஒரு தாக்குதல் வேறொரு இன மக்கள் அதாவது ஹரிகரா எனும் பழங்குடி மக்கள் கொடூர தாக்குதல் நடத்துகிறார்கள்.. அந்த சண்டையில் தன்னுடன் வந்த நிறைய பேரை இழந்து மீதமுள்ளவர்களுடன் அங்கிருந்து தப்பித்து நம்ம ஹீரோ வேறொரு இடத்திற்கு செல்கிறார்கள்.. மற்றொரு புறம் அந்த ஹரிகரா மக்கள்

நம் ஹீரோவின் கும்பலை தேடி வருகிறார்கள்.. நம் ஹீரோ அவரின் கும்பலோடு ஒரு காட்டில் இருக்காங்க.. அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள்..அப்போ நம்ம ஹீரோ சும்மா அப்படியே அந்த காட்டினுள் தனியாக நடந்து செல்கிறார்..திடீரென ஒரு கரடி ஒன்று நம்ம ஹீரோவை உடம்பில் வெறும் உயிர் மட்டுமே வைத்து

கொடூரமாக தாக்கிவிடுகிறது.. பிறகு நம்ம ஹீரோவை அவர் கும்பல் மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து தூக்கி செல்கிறார்கள்.. ஒரு பெரிய பனிமலையை ஏற வேண்டிய சூழ்நிலை.. அதில் தனியாளாக ஏறுவதே கடினம் அதில் இன்னொருவரை எப்படி தூக்கி கொண்டு நடக்க முடியும் என்ற விவாதத்தில் ஒரு முடிவு எடுக்கிறார்கள்..

அப்போ அந்த கும்பலின் கேப்டன் இவன் உயிரோடு இருக்கும் வரை அல்லது மீண்டு வரும்வரை இவனுடன் இருப்பவர்களுக்கு அதிக பணம் 💸 தருவதாக கூற அதற்கு சம்மதித்து இருவரும் மற்றொருவர் இவர் மீதுள்ள பாசத்தால் இருக்கிறார்.. அதிலும் நம் ஹீரோவுக்கு துரோகம் இழைக்கப்பட்டு தனி ஒரு ஆளாக அங்கிருந்து எப்படி

மீண்டு வந்தார் என்பதை எமோஷனல் கலந்த சுவாரஸ்யமான படம்👌🏻 இதில் நான் கூறியிருப்பது மேலோட்டமானதுதான்.. இந்த படத்தை பற்றி இன்னும் நிறைய கூறலாம்.. ஆனால் என் விமர்சனம் படிப்பவர்களின் மனதை கருதி இதோடு முடித்துக் கொள்கிறேன்..

குறிப்பு : மூன்று நான்கு காட்சிகள் Adult content உள்ளது..

பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்கவும் என்பது என் அன்பான வேண்டுகோள்... இந்த நல்ல படத்தை தவறவிட வேண்டாம் 😊

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling