இந்த படம் எவ்வளவு நபர்கள் பார்த்திரூப்பீர்கள் என்று தெரியவில்லை.. ஆனால் சமீபத்தில் நான் பார்த்த ஒரு தரமான படம் என்றால் அதற்கும் மேல் என்றே சொல்லலாம்..
இவ்வளவு நாள் இந்த படம் பார்க்கலாம் தவறவிட்டோமே என்றும் தோன்றியது.. படத்தின் Cinematography, Background Music, Sound Recording,VFX அனைத்திலும் தரம் குறையாத தரம்🔥 முக்கியமாக இந்த படத்தில் ஓரிரு இடத்தை தவிர லைட்டிங் பயன் படுத்தாமல் எடுக்கப்பட்டுள்ளது.. லைட்டிங் பயன் படுத்தி உள்ள
இடத்திலும் பயன்படுத்தியவாறு தெரியாது.. படப்பிடிப்பு தளங்களும் கண்ணை குளிர வைக்கிறது.. அவ்வளவு அருமையான இடங்கள்.. அவ்வளவு அருமையாக இருந்தாலும் அதன் விளைவுகளும் மோசாமானவை என்ற நேர்த்தியாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் படத்தின் கதாநாயகன் @LeoDiCaprio என்ன மனுசன்யா என்ற
கேட்கும் அளவிற்கு நடிப்பு🔥 அவ்வளவு மெனக்கெட்டு நடிப்பு என்று தெரியாத அளவிற்கு நடித்திருப்பார்.. இரண்டு மணி நேரம் 36 நிமிடங்கள் எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் நிறைய இடங்களில் அடுத்து என்ன என்று சிந்திக்கும் வகையில் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும்.. ஆஸ்கார் விருது உட்பட நிறைய
விருதுகளை வாரி குவித்திருக்கிறது இந்த படம்..
கதை சுருக்கம்: மிருகங்களை வேட்டையாடி அதன் தோலை உரித்து பதப்படுத்தி வணிகம் செய்யும் ஒரு கும்பல்.. அந்த கும்பலை சார்ந்தவர்தான் நம்ம @LeoDiCaprio அந்த கும்பல் ஒரு இடத்திற்கு வேட்டைக்காக செல்கிறார்கள்.. வேட்டைக்காக ஒரு காட்டில் இருக்கும்
பொழுது திடீரென ஒரு தாக்குதல் வேறொரு இன மக்கள் அதாவது ஹரிகரா எனும் பழங்குடி மக்கள் கொடூர தாக்குதல் நடத்துகிறார்கள்.. அந்த சண்டையில் தன்னுடன் வந்த நிறைய பேரை இழந்து மீதமுள்ளவர்களுடன் அங்கிருந்து தப்பித்து நம்ம ஹீரோ வேறொரு இடத்திற்கு செல்கிறார்கள்.. மற்றொரு புறம் அந்த ஹரிகரா மக்கள்
நம் ஹீரோவின் கும்பலை தேடி வருகிறார்கள்.. நம் ஹீரோ அவரின் கும்பலோடு ஒரு காட்டில் இருக்காங்க.. அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார்கள்..அப்போ நம்ம ஹீரோ சும்மா அப்படியே அந்த காட்டினுள் தனியாக நடந்து செல்கிறார்..திடீரென ஒரு கரடி ஒன்று நம்ம ஹீரோவை உடம்பில் வெறும் உயிர் மட்டுமே வைத்து
கொடூரமாக தாக்கிவிடுகிறது.. பிறகு நம்ம ஹீரோவை அவர் கும்பல் மீட்டு முதலுதவி சிகிச்சையளித்து தூக்கி செல்கிறார்கள்.. ஒரு பெரிய பனிமலையை ஏற வேண்டிய சூழ்நிலை.. அதில் தனியாளாக ஏறுவதே கடினம் அதில் இன்னொருவரை எப்படி தூக்கி கொண்டு நடக்க முடியும் என்ற விவாதத்தில் ஒரு முடிவு எடுக்கிறார்கள்..
அப்போ அந்த கும்பலின் கேப்டன் இவன் உயிரோடு இருக்கும் வரை அல்லது மீண்டு வரும்வரை இவனுடன் இருப்பவர்களுக்கு அதிக பணம் 💸 தருவதாக கூற அதற்கு சம்மதித்து இருவரும் மற்றொருவர் இவர் மீதுள்ள பாசத்தால் இருக்கிறார்.. அதிலும் நம் ஹீரோவுக்கு துரோகம் இழைக்கப்பட்டு தனி ஒரு ஆளாக அங்கிருந்து எப்படி
மீண்டு வந்தார் என்பதை எமோஷனல் கலந்த சுவாரஸ்யமான படம்👌🏻 இதில் நான் கூறியிருப்பது மேலோட்டமானதுதான்.. இந்த படத்தை பற்றி இன்னும் நிறைய கூறலாம்.. ஆனால் என் விமர்சனம் படிப்பவர்களின் மனதை கருதி இதோடு முடித்துக் கொள்கிறேன்..
குறிப்பு : மூன்று நான்கு காட்சிகள் Adult content உள்ளது..
பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்கவும் என்பது என் அன்பான வேண்டுகோள்... இந்த நல்ல படத்தை தவறவிட வேண்டாம் 😊
முதலில் No Mercy என்ற படத்தை பார்க்க வேண்டும் நினைத்து பதிவிறக்கம் செய்தேன்..பின்புதான் தெரிந்தது நான் பார்க்க நினைத்த படம் 2010 இல் வந்தது.. ஆனால் பதிவிறக்கம் செய்தது 2019😔
சரி பதிவிறக்கம் செய்ததை பார்க்கலாம் என்று பார்த்தேன்..
கதை சுருக்கம்: படத்தின் நாயகியின் தங்கை கொஞ்சம் மூளை வளர்ச்சி குன்றியவள்.. தன் பள்ளியில் படிக்கும் சக மாணவிகள் சிலரின் தவறான செயலாள் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறாள்..அவளை மீட்டும் போராட்டத்தில் இறங்குகிறாள் நாயகி..
இறுதியில் மீட்டாளா என்பதே க்ளைமாக்ஸ்.. ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் கதாநாயகிக்கு.. ஆக்சன் சேசிங் என்று பூந்து விளையாடுவார்..சில லாஜிக் ஓட்டைகள் இருக்கும்..அதை தவிர்த்து பார்த்தால் 1 மணிநேரம் 30நிமிடங்களுக்கான ஒரு என்டர்டெயின்மென்ட்.. படம் ஆரம்பித்து இறுதிவரை அடுத்தடுத்து
A Murderer's Guide to Memorization
என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்..
மற்ற கில்லர் படங்கள் போல விறுவிறு இல்லாமல் ரொம்ப யதார்த்தமான திரைக்கதை கொண்ட
ஒரு seriel killer படம்.. தரமான படம்..
ஹீரோ ஒரு short time memory loss உள்ளவர்..தன்னோட பெண்ணோட வசித்து வருகிறார்..அவர்கள் இருக்கும் இடத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை நடக்கிறது.. அது ஒரு seriel killer பண்ணிட்டு இருக்கான்.. ஒருமுறை ஹீரோ காரில் சென்று கொண்டிருக்கும் போது
முன்னாள் சென்று கொண்டிருக்கும் காரில் இடித்து விடுகிறார்.. இடித்த இடியில் முன்னாள் சென்ற காரின் டிக்கியின் கதவு திறந்து விடுகிறது..ஹீரோ அருகே சென்று பார்க்கிறார்.. அதில் ஒரு BAG இருக்கு.. அதிலிருந்து இரத்தம் சொட்டுகிறது.. அதை தன் கைகுட்டையால் ஆகும்படி தொடுகிறார்.. பின்பு அந்த
#SarahButler அவர்கள் கதையின் நாயகி.. ஹீரோயின் ஒரு நாவல் எழுதுவதற்காக ஒரு இடத்திற்கு வராங்க..ஒரு காட்டில் இருந்து எழுத ஆசை படுறாங்க.. அவர் நினைத்தது
போல் ஒரு இடமும் கிடைக்கிறது.. காட்டில் ஒரு தனிவீடு... ஹீரோயின் அங்கு தனியாக தங்கியிருப்பதை அறிந்த மூன்று ஆண்கள் ஹீரோயின் இருக்கும் இடத்திற்கு வராங்க.. பாலியல் தொல்லை கொடுக்குறாங்க.. அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடுறாங்க ஹீரோயின்..அப்போது ஒரு sheriff ஒருத்தரை பார்க்குறாங்க..
அவர்கிட்ட உதவி கேட்குறாங்க.. அவரும் ஹீரோயினுடன் அந்த வீட்டிற்கு திரும்பி வராங்க.. வந்ததும் sheriff ஆல் அந்த ஹீரோயின் காப்பாற்றபட்டாரா..? இல்லை அதையும் மீறி வேறு எதாவது நடந்ததா..? என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லியிருக்காங்க.. படத்தில் ஆபாச காட்சிகள் உண்டு ஆதலால் குடும்பத்தோடு
ஹீரோ ஒரு கேங்ஸ்டர்..அவரோட பாஸ் என்ன சொன்னாலும் கச்சிதமாக முடிக்கிற ஆள்..இவரோட பாஸுக்கு எதிர் கேங் தலைவன் ஒருத்தன்.. அவன் பெயர் Doh.. அவன் நம்ம
ஹீரோவிடம் தன்னோடு வந்து சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றான்.. ஆனால் ஹீரோ அதற்கு மறுக்கின்றார்.. பிறகு அந்த Doh ஹீரோவின் சகோதரி மற்றும் சகோதரியின் குழந்தையை கொலை செய்கின்றான்..பின் ஹீரோவின் பாஸ் ஹீரோவிடம் உன் சகோதரி மற்றும் அவர் குழந்தையை கொன்ற அந்த Doh-வை சும்மா விடக்கூடாது..
அவனைக் கொலை செய்ய சொல்லி சொல்றான்.. நம்ம ஹீரோவும் கொலை செஞ்சிடுறாரு..பிறகு ஹீரோவின் பாஸ் ஹீரோவை கொஞ்சம் ஓய்வு எடுக்க சொல்லி ட்ரிப் ஒன்று ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கிறான்.. பிறகு இறந்துபோன Doh யின் கேங்கில் அவனுக்கு அடுத்த இடத்தில் உள்ள Ma sang-gil என்பவன் தன் பாஸை கொன்றவனை
IMDb 8/10
காலம் தாண்டி பேசுகிற படங்களில் இந்த படமும் ஒன்றே என்று சொல்லலாம்.. 1935 யிலிருந்து 1937 வரை the world heavyweight champion 🏆 ஆக இருந்த James Walter Braddock
அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான சம்பவங்களை பதிவு செய்துள்ளனர் இந்த படத்தில்.. மிக பெரிய இடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் ஒரு சில காரணங்களால் அவர் வாழ்க்கையில் மிக பெரிய ஒரு சரிவு ஏற்படுகிறது.. மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது.. அதிலிருந்து எப்படி வெற்றி பெற்றார்..
என்பது கதை.. இந்த படத்தின் கதை விரிவாக்கம் நான் சொல்வதைவிட நீங்கள் பார்ப்பது மிக முக்கியம்.. ஏனெனில் இந்த படம் நம் அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கை விடாமுயற்சி எண்ணங்கள் கொடுக்கும்.. படத்தில் Goosebump காட்சிகளும் உண்டு👍🏻.. ஆபாச காட்சிகள் இல்லை.. இந்த படம் ஒரு பாடமாகவும் எடுத்து
இந்த படத்தின் கதைக்குள் போவதற்கு முன்னாடி இந்த படத்தை பற்றி கொஞ்சம் சொல்லிடுறேன்.. erotic thriller நினைச்சு பார்த்தேன் ஆனால் அதிகமான ஆபாச காட்சிகள்
இருக்கிறது.. ஆதலால் குடும்பம் மற்றும் குழந்தைகளோடு பார்க்க வேண்டாம்.. ஆனால் நல்ல த்ரில்லர் படம்... ஆபாச காட்சிகள் அதிகம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் தரமான படமாக இருந்திருக்கும்..
படத்தின் கதை சுருக்கம்:
அமெரிக்காவைச் சேர்ந்த நான்கு பெண்கள் நெருங்கிய தோழிகள்..
அவர்கள் துருக்கிக்கு ஒரு ட்ரிப் போகலாம்னு ப்ளான் போட்டு கிளம்பி போறாங்க. துருக்கியின் எல்லைச் சோதனை சாவடியில் காவல்துறை இவர்களை சோதனை செய்கிறார்கள். பிறகு இவர்களுக்கு தெரியாமல் அவர்கள் வந்த காரில் போதை பொருள் மறைத்து வைத்து பொய் குற்றம் சுமத்தி நான்கு பேரையும் கைது செய்கிறார்கள்