அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jul 20, 2021, 21 tweets

சிவபெருமானின் 19அவதாரங்களை பற்றி நாம் அறியாத விஷயங்கள்
1. #பிப்லாட் அவதாரம்:
தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார். சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான், தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை

வளரும் போதுதான் புரிந்து கொண்டார். தன் விண்ணக இருப்பிடத்தில் இருந்து சனி கிரகத்தை விழச் செய்தார். பின்னர் 16 வயது ஆவதற்கு முன்பு யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நிபந்தனையோடு சனியை மன்னித்தார். அதனால் பிப்லாட் வடிவிலான சிவபெருமானை தரிசித்தால் நம்மை பிடித்த சனி தோஷம் நீங்கும்.

2. #நந்தி அவதாரம்:
நந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். மந்தைகளின் பாதுகாவலனாக-பசுபதியாக நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது. நான்கு கைகளை கொண்ட காளையாக அவர் தீட்டப்பட்டுள்ளார். கோடரி மற்றும் மானை இரண்டு கைகள் கொண்டிருக்கும். மற்ற இரண்டு கைகள் ஒன்றாக சேர்த்திருக்கும்

3. #வீரபத்ர அவதாரம்:
தட்சிண யாகத்தில் சதிதேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையிலிருந்து சிறிது முடியை எடுத்து அதை தரையில் போட்டார். அதிலிருந்து பிறந்தவர் வீரபத்திரர். சிவபெருமானின் கடுமையான அவதாரம் இதுவே. மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு

கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கருமையான கடவுளாக அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தக்ஷ்ணனின் வெட்டுண்ட தலையை கொண்டிருக்கும்.

4. #பைரவ அவதாரம்:
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்று சண்டை வரும்போது சிவபெருமான்

இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார். அப்போது பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்தார். ஒரு பிராமணனை கொன்ற குற்றவுணர்வு சிவபெருமானுக்கு இருந்தது. அதனால் 12 வருடத்திற்கு ஒரு பிக்ஷாடனனாக, பிரம்மனின் மண்டை ஓட்டை சுமந்து அவர் அவர் சுற்றி திரிய வேண்டி இருந்தது. இந்த வடிவத்தில்

அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வந்தார் என்று நம்பப்படுகிறது.

5. #அஸ்வத்தாமா அவதாரம்:
பாற்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நெஞ்சை உட்கொண்ட நேரத்தில் அவர் தொண்டை எரிய துவங்கியது. அப்போது சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்தது. அதற்கு கடவுள் ஒரு

வரத்தையும் அளித்தார். அதன்படி பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்களைக் கொள்வான் விஷ்ணுபுருஷ். அதனால் அஸ்வத்தாமனாக பிறந்தான் விஷ்ணு புருஷ்.
6. #ஷரபா அவதாரம்:
ஷரபா வடிவத்தில் உள்ள சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ

புராணத்தின் படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே இந்த அவதாரம் எடுத்தார். சரபேஸ்வரர் பற்றி படிக்க இங்கே பார்க்கவும்.
7. #கிரஹபதி அவதாரம்:
விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக பிறந்தார். சிவபெருமான் அவருக்கு கிரஹபதி என பெயரிட்டார் விஸ்வணார். கிரஹபதிக்கு

ஒன்பது வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் பெற்றோரிடம் கூறினார். அதனால் மரணத்தை ஜெயித்திட காசிக்கு சென்றான் க்ரஹபதி. அங்கே சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் மரணத்தை ஜெயித்தான் க்ரஹபதி.

8. #துருவாச அவதாரம்:
அண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக இந்த அவதாரத்தை

எடுத்தார் சிவபெருமான். துர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவி ஆவார்.
9. #அனுமான் அவதாரம்:
குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் அவதாரம்தான் ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு பணிபுரிய இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்துள்ளார்.
10. #ரிஷப அவதாரம்:
பாற்கடல்

கடைதலுக்கு பிறகு கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான் அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கு தங்கி இருந்த பொழுது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுர குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான

தொல்லைகளை அளித்து வந்தனர் அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார்.

11. #யாதிநாத் அவதாரம்:
ஒரு முறை ஆஹுக் என்று பழங்குடியை சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள். ஒரு முறை யாதிநாத் வடிவில் சிவபெருமான்

அவர்களை சந்தித்தார். இரண்டு பேர் மட்டுமே இருக்க கூடிய சின்ன குடிசையில் அவர்கள் இருந்ததால், விருந்தாளியை உள்ளே தங்க வைத்து தான் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆஹுக். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று இரவு ஒரு வனவிலங்கால் கொல்லப் பட்டான் ஆஹுக். மறுநாள் காலை, ஆஹுக் இறந்திருப்பதை கண்டு அவன்

மனைவியும் சாக நினைத்தாள். அப்போது தன் உண்மையான ரூபத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார். அதன்படி, அவளும் அவள் கணவனும் நளன் மற்றும் தமயந்தியாக மீண்டும் பிறப்பர். அவர்களை சிவபெருமானே சேர்த்து வைப்பார்.
12. #கிருஷ்ணதர்ஷன் அவதாரம்:
ஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும்

சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

13. #விசுவரியா அவதாரம்:
அனைத்து விதமான ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

14. #சுரேஷ்வர் அவதாரம்:
தனது பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவில் உருவெடுத்தார் சிவபெருமான்

அதனால் தான் அவரை சுரேஷ்வரர் என்று அழைக்கிறோம்.

15. #கீரத் அவதாரம்:
அர்ஜுனன் தவத்தில் இருந்த பொழுது கீரத் அல்லது வேட்டைக்காரன் உருவம் எடுத்தார். சிவபெருமான் அர்ஜுனனை கொல்ல மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தான் துரியோதனன். காட்டு பன்றி போல தன்னை மாற்றிக்கொண்டான். ஆழ்ந்த தியானத்தில்

இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது அவன் கண்ணைத் திறந்து மூக்காவை பார்த்தான். அந்தக் காட்டுப் பன்றியை அர்ஜுனனும் கீரத்தும் தங்கள் அம்புகளால் வீழ்த்தினார்கள். யார் அந்த காட்டுப் பன்றியை முதலில் வீழ்த்தியது என்ற சந்தேகம் அர்ஜுனனுக்கும் கீரத்துக்கும் வந்தது. கீரத்

வடிவில் இருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விடுத்தான் அர்ஜுனன். அர்ஜுனின் வீரத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு தன்னுடைய பஷுபதா ஆயுதத்தை பரிசளித்தார்.

16. #சுண்டன்தர்கா அவதாரம்:
திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமவானிடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர்

இந்த அவதாரத்தை எடுத்தார்.

17. #பிரமச்சாரி அவதாரம்:
சிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.
18. #எக்ஷெக்வர் அவதாரம்:
கடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரம்.

19. #அவதுட் அவதாரம்:
இந்திரனின் திமிரை ஒழிக்கவே இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்தார்.

ஓம் நமசிவாயம்🙏🏾

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling