ganesh Profile picture
வாழ்க தமிழ்! பொலிக பாரதம்!

Aug 29, 2021, 15 tweets

சங்க இலக்கியம் அக நானூறு பாடலில் #கண்ணன்

#அகநானூறு - 59 பாடல் 59. பாலைத் திணை பாடியவர் - மதுரை மருதனிளநாகனார்

வடாஅது,
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை
ஆண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல

என்கிறார் புலவர். தொழுநை என்பது யமுனை ஆறு.

#கண்ணன் (மாஅல்=மால்)

வடக்கே யமுனை ஆற்றில் பெண்கள் குளிக்கும்போது அவரின் ஆடைகளை எடுத்து ஒளித்துவைத்த கண்ணனாகிய மால், பின்னர் அங்கு பலதேவர் வந்தபோது, நீரில் இருந்த மங்கையர் தம்மை மறைத்துக்கொள்ள, தான் ஒளிந்திருந்த குருந்தை மரத்தின் கிளையைத் தன் காலால் மிதித்து வளைத்து அவரின் மானம் காத்தான்

என்ற நிகழ்ச்சியைச் சொல்லி அதைப்போல இந்தப் பாலைநிலத்துக் களிறு தன் மடப்பிடிக்கு யா மரத்தை வளைத்துக்கொடுத்தது என்கிறார் புலவர்.

வடாஅது வண் புனல் தொழுநை – northern Yamuna river where water never goes down,
வார் மணல் அகன் துறை – wide shores with long stretches of sand,
அண்டர் மகளிர் – daughters of cattle herders,
தண் தழை உடீஇயர் – cool leaf garments to wear,

மரம் செல மிதித்த மாஅல் போல – like Thirumal who stepped on trees,

ஐந்தாவது நெய்தற்கலி
பாடியவர் : ஆசிரியர் நல்லந்துவனார்
கண்டோரும் தலைவியும் சொன்னது

(கண்ணன் மல்லர்களை , குவாலய பீடம் என்னும் யானையை வீழ்த்துதல்,

#134
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழிபோல் கல்

சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்
இருங் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப்
பெருங் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேரப்
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப்
பாயல் கொள்பவை போலக் கய மலர் வாய் கூம்ப
ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம்

கூர் மருள் மாலை

மல்லர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய கண்ணன்
தன்னொடு உடன்படாதார் சிதறியோடும்படியாகச் சினம்கொண்டு வேகமாக எறிய,
கொல்லுகின்ற யானையின் அழகிய நெற்றியில் ஆழப்பதிந்த சக்கரப்படையைப் போல,
மலையினை அடைந்த ஞாயிறு தன் கதிர்களையெல்லாம் திரும்பவும்

உள்வாங்கிக்கொண்டு மறைவதால்,
கரிய கடல் பேரொலி எழுப்பி, அங்கே இரவைக் காண விரும்புவது போல (கண்ணன் மல்லர்களை , குவாலய பீடம் என்னும் யானையை வீழ்த்துதல்)

சிலப்பதிகாரத்தில் கண்ணன் (ஆய்ச்சியர் குரவை )
மதுரைக் காண்டம் ஆய்ச்சியர் குரவை பகுதியில் உள்ள 1) "ஆயர் பாடியில், எரு மன்றத்து, மாயவனுடன் தம்முன் ஆடிய வால சரிதை நாடகங்களில் "
என்ற வரிகள், கண்ணன் ஆயர் பாடியில் எரு மன்றத்தில் அண்ணன் பலராமனுடம் ஆடிய பால சரிதை நாடகங்கள்

என்ற பொருளைத் தருகின்றன . 2) இதே பகுதியில் கண்ணன் இளம் பருவத்தில் உரலால் கட்டுண்டக் கிடந்த போது குருத்த மரத்தினை முறித்த நிகழ்ச்சி

"கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்" என்ற சொற்களில் கூறப்படுகிறது

3) இதே பகுதியில்

"தொழுனைத் துறைவனோடு ஆடிய பின்னைஅணிநிறம் பாடுகேம் யாம்! "

என்ற வரி யமுனைத் துறைவனாகிய கண்ணனுடன் நப்பின்னைப் பிராட்டியார் ஆடிய செய்தியைத் தெரிவிக்கிறது.

4) இதே பகுதியில்

"இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை யொளித்தான் வடிவென் கோ "

என்ற வரிகளில் ,
மெல்லிய இடையை உடைய பெண்ணின் ஆடைகளைகே கண்ணன் எடுத்து ஒளித்து விளையாடிய செயல் கூறப்படுகிறது.

5) இதே பகுதியில்

"நடந்த அடி பஞ்சவர்குத் தூதாக நடந்த அடி " என பஞ்சபாண்டவர்களுக்காக கண்ணன் கௌரவர்களிடம் தூது சென்ற செயல் விவரிக்க படுகிறது.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling