அனைவருக்கும் #கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்🙏
எல்லோரும் மகிழ்ச்சியாக இந்த பண்டிகையை கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன்.
எந்த வருடத்தையும் விட இந்த வருட கோகுலாஷ்டமி மிக சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடியதையும், அதற்கு வாழ்த்து சொன்னதையும் பார்த்து மனம் மகிழ்ந்தேன்.
சமூகவலைத்தளத்தில் பகவான் கிருஷ்ணன் பெருமளவு ஆக்கிரமித்தது அதற்கு சான்று. இந்த விழாவானது இந்தியாவில் மட்டுமல்லாமல் சனாதனம் எங்கெல்லாம் பரவியுள்ளதோ அங்கு எல்லாம் நம் மனம் கவர் நண்பன், நம்மை வழிநடத்துபவனான பகவான் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.
இந்த பண்டிகையில் தன் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்து கிருஷ்ணரே தன் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதாக ஆனந்தம் அடைகின்றனர். இந்த கொடுப்பினை எல்லாம் பகவான் கிருஷ்ணர் ஒருவருக்கே என்றால் மிகையில்லை. அவன் போதித்த கீதாச்சாரத்தில் சொல்லாத விஷயங்களே இல்லை.
அவைகளை நம்மை விட வெளிநாட்டினரால் அதிகம் ஈர்க்கப்படுகிறது.
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப⁴வந்தி யா: |
தாஸாம் ப்³ரஹ்ம மஹத்³யோநிரஹம் பீ³ஜப்ரத³
(எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா)
இதை நாம் நம்புகிறோமே இல்லையோ வெளிநாட்டினர்கள் நம்புகின்றனர். அதனால் தான் உலகம் முழுவதும் வியாபித்து உள்ளான்.
#சர்வம்_கிருஷ்ணார்ப்பனம் என எண்ணுபவர்களுக்கு வாழ்வில் எந்த இடையூறும் வராது.
#ஹரே_கிருஷ்ணா🙏என்றும் அன்புடன்
கண்ணன் தேவன்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.