அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Sep 5, 2021, 10 tweets

#ஶ்ரீகுருஷ்ணன்கதைகள்
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடையவேண்டும் என தவம் இருந்தாள். அவள் முந்தின ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூட இருந்தவள். அவள் போன பிறவியிலேயே கண்ணனை கணவனாக அடைய விரும்பியவள். இந்த ஜென்மத்தில் தவமிருக்க மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று

துளசியை ஏமாற்றினார். என்னை ஏமாற்றிய நீ கல்லாகப் போவாய் என்று சாபமிட்டாள். உடனே மஹாவிஷ்ணு அவளுக்குக் காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. ஆனால் மஹாவிஷ்ணு அஞ்சாதே துளசி எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது, கிருஷ்ணாவதராத்தின் போது கோபிகையாக இருந்ததவள் நீ என்னை மணம் புரிய வேன்டும்

என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.
என்னை கல்லாக மாறும்மாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான், என்னை தரிசனம் செய்ததால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி

செடியாகவும் மாறிவிடுவாய் என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால் நான் #சாளக்கிராம கற்களாக மாறபோகிறேன், நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட நான் உன்னில் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன். அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாக்கும்.
சாளக்கிராமகாக

நானே இருப்பதால் பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள் நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள், கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய் உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன், இங்கே

வரமுடியாதவர்கள் துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும் துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள்பாலிப்பேன் என்றார்.
யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறரர்களோ அந்த வீட்டில் வைக்கப்பட்டுஇருக்கும் சிறு இடத்தையே தன் கோயிலாகக் கொண்டு அங்கே

எழுந்தருள்கிறேன் அந்த சாளக்கிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது சாலகிரமம் இருக்கும் விடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோசம், சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன் என்று மஹாவிஷ்ணு கூறினார்.
மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர

கிரீடம் என்னும் பூச்சியின் வடிவம்கொண்டு சாளக்கிராம கல்லை குடைந்து அதன் மையதயை அடைந்து அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும் தனது அவதார ரூபங்களையும் பலவிதமகா விளையாட்டாக வரைகிறார். இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையபடாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும்

அதற்கு ஹிரண்ய கற்ப கற்கள் என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தது. இந்த சாளகிராமம் சங்கு, நத்தைகூடு, பளிங்குபோன்று பலவித வடிவங்களில், கிடைக்கிறன. சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமம்

இருக்குமிடத்தில் எம்பெருமானும், சகல இறைசக்திகளும் நித்யம் வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling