Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Sep 11, 2021, 16 tweets

#QRCodescam #CyberAwarness
நாம கடைசி Threadla Phishing Attack பற்றி பார்த்தோம்,இந்த Threadla QR CODE Scam பற்றி பார்ப்போம் இந்த வகையான சம்பவங்கள் அதிகமா நடைபெற்று வருது அதுவும் சொல்லபோனால் OLX போன்ற தளங்கள் தான் அதிகமா நடைபெறுகிறது.

ஒரு பொருளை விற்பதற்கு நாம அந்த இணையதளங்களை

அணுகுவோம்,அந்த பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து மற்றொருவர் Phone அல்லது வாட்சப் பண்ணுவாங்க.அங்குதான் இந்த Scam நடக்கும் எப்படினு பாருங்க பொருளை வாங்குவதா சொல்ற நபர் உங்களுக்கு Message பண்ணுவார் அந்த பொருளோடு விலை ஒரு 4000 அப்டினு வச்சுக்கோங்க அவர் சொல்லுவார் உங்களுக்கு

நான் இப்ப ஒரு 3000 அனுப்பிவிடறேன் அப்பறமா மீதி பணம் உங்களுக்கு பொருள் வாங்கும் பொது வந்துதரேன் அப்டினு சொல்லுவார்.

நாம எதுவுமே யோசிக்காம நமக்கு சாதகமா இருக்கறதுனால நாம சந்தோசமா இருப்போம்,அப்ப ஒரு QRCODE Image ஒன்னு உங்களோட Whatsapp Numberku வரும் அதை உங்களை Scan பண்ண சொல்லி

Account விபரம் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டு நீங்க அதுல PAY கொடுங்க அப்டினு சொல்லுவார்.நம்மளும் அவன் பணம் அனுப்புறத்துக்கு நாம ஏன் Payலாம் கொடுக்கணும் அப்டினு யோசிக்காம கொடுத்துருவோம் அதன் பிறகு தான் தெரியவரும் பணம் நமக்கு வரல நம்மகிட்ட இருந்துதான் அவனுக்கு போயிருக்கு

அப்டினு.அப்பறமா நாம போலீஸ்ல Complaint கொடுத்து தான் அந்த பணத்தை மீட்க முடியும்,நாம அதுவும் செய்யலைன்னா பணம் போனது போனது தான்.இது ஒரு வகையான Scam.

அடுத்து உள்ளதுதான் ரொம்ப முக்கியமானது இப்ப பார்க்க போற Scam அதிகமா Roadside கடைகள தான் அதிகமா நடக்குது ஏன்னா அங்குதான் மக்கள் அதிகமா

கூடுவாங்க அதன் பிறகு அவளோ சீக்கிரம் Scam நடந்தது Notice பண்ணவும் மாட்டாங்க உதாரணமா சொல்லபோனால் டீக்கடை,வண்டிலபோட்டு உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்.

அங்கு எப்படி நடக்குது அப்படினு பார்த்தீங்கன்னா இரண்டு வகையில அங்க Scam நடக்குது ஒன்னு Normala அந்த கடைகளெல்லாம் Phonepe

அல்லது GPAY Qr Code வெளிலதான் வச்சு இருப்பாங்க அப்ப அந்த கடைக்காரருக்கு தெரியாம அந்த ஸ்டிக்கர் மேல அவங்களோட Account number இருக்குற ஒரு ஸ்டிக்கர ஓட்டிட்டு போயிருவாங்க அப்பறமா அந்த கடைக்கு வர Customer எல்லாம் அனுப்புற பணம் கடைக்கு போகாம sticker ஓட்டுனவனோட Accountகு போயிரும் விரைவா

நாம கண்டுபிடிச்ச உண்டு இல்லைனா அவ்ளோதான்,இப்படியெல்லாம் நடக்குமா என்று கேக்காதீங்க சென்னைல சமீபத்துல நடந்துச்சு.

அடுத்து இரண்டாவது வகை Scam என்ன அப்டினு பார்த்தோம்னா FakeQRCode Generator அப்பறம் APPS இது மூலமா நடக்குது ஒரே ஒரு முறை அந்த கடைல payment பண்ணுவாங்க அப்ப அவரை அந்த

கடைக்காரர Note பண்ணுவாங்க அவர் Amount varatha Check பன்றாரா இல்லையா அப்டினு அவர் Note பண்ணலன்னு வைங்க அவ்ளோதான் அந்த கடைதான் அவர்களுக்கு ஏற்ற இடம் நிறைய பொருள்களை வாங்கிட்டு அல்லது சாப்டுட்டு முன்னர் ஒரு முறை PAY பண்ணாங்க பார்த்திங்களா அதேபோல ஒன்னு அந்த Application மூலமா Ready

பண்ணி Bill காமிச்சிட்டு போயிருவாங்க அவ்ளோதான் இந்த வகை திருட்டு அவ்ளோ எளிதா யாரும் கண்டுபுடிக்க முடியாது என்னே Daily 100 மேற்பட்ட Customer வருவாங்க அதுல யாரைனு நீங்க தேடுவீங்க,திருடர்களுக்கு இந்த கடைவிட்டா வேறு கடை அவ்ளோதான்.

இந்தமாறி Scamல இருந்து நாம பாதுகாப்பா இருக்கிறது இதையெல்லாம் தொடர்ந்து Follow பண்ணுங்க,

📌முதல்ல சொன்னது OLX அல்லது வேறு ஏதாவது ஒரு ஆன்லைன்ல பொருட்கள்விற்கும் தளத்துல உங்களோட பொருள்களை நீங்க விற்க முற்படும்பொழுது அவங்க Sidela இருந்து எந்த QR CODE கொடுத்தாலும் Scan செய்யாதீங்க

உங்களை Scan செய்ய வைக்க அவங்க எவ்வளவு நாசுக்காவும் பேசுவாங்க.இது பெரும்பாலும் வயதானவர்களை குறிவைத்து தான் நடக்குது.உங்க வீட்ல உள்ளவங்களடையும் சொல்லி ஜாக்ரிதையா இருக்க சொல்லுங்க.

📌இரண்டாவது சொன்னது போல நீங்க எதாவது கடை வச்சு இருந்திங்கன்னா எவ்ளோ வேலைய இருந்தாலும் தெரிஞ்சவங்கள

தெரிஞ்சவங்கள இருந்தாலும் அவங்க பணம் அனுப்பும் பொழுது நீங்க உங்க Accountku பணம் வந்துருக்கா அப்டினு Check பண்றது ரொம்ப நல்லது.

📌அதேபோல வாடிக்கையாளரான நாம பணம் அவங்களுக்கு அனுப்பும் பொழுது ஒரு தடவை உங்க பெயர்தான சரியா அப்டினு கேட்டு அனுப்புங்க இது மூலம் நாம அனுப்புற பணம்

உரியவங்ககிட்ட போய் சேரும்.

📌இதையெல்லாம் தாண்டி உங்க பணம் திருடு போயிருச்சுனா தயங்காம Police-கிட்ட போய் சொல்லுங்க அவங்க CyberCrime மூலமா உங்க பணத்தை மீது தருவாங்க.

Video Link:

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling