கவி தா🇮🇳 Profile picture
Proud of my only son💪 யானார்க்கும் குடியில்லை கும்மிக்கு எனையழைக்காதீர் Beware of me I BITE if I'm provoked💃🏾 Politics💪🏾History💪🏾Rights 💪🏾Rationalist💪

Sep 15, 2021, 6 tweets

1934,35,36 ம் ஆண்டுகளில் இந்தியை அவர்கள் ஆட்சிமொழி என்று அல்ல; இணைப்புமொழி என்றல்ல; தேசிய மொழி என்றழைத்தார்கள். இந்தத் தேசத்திற்கென்று ஒரு மொழி உண்டு. அதுதான் இந்தி; இந்தத் தேசத்திற்கு இருக்கத்தக்க தேசிய மொழி இந்திதான் என்று 1935 ல் அவர்கள் சொன்னார்கள்.

#HBDAnna113

பெரியார் அவர்களின் போர் முறையின் தன்மை உங்களிலே பலருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். அவர்கள் எதிரில் உள்ள படையை மட்டுமல்ல; முதலிலே அப்படைக்கு எங்கே மூலபலம் இருக்கிறது என்று கண்டுபிடித்து அந்த மூல பலத்தைத் தாக்குவது தான் அவருடைய போர் முறையாகும்
#HBDAnna113

இந்தியைக் கொண்டு வந்தவர்கள் இந்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கருதி தேசியத்தையும், இந்தியாவையும் உடைத்துவிடக் கூடாது என்று தேசியம்’ என்று சொல்லியதை மாற்றிக்கொண்டு, ‘இந்தியாவில் தேசிய மொழிகள் பதினான்கு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தி...

ஆனால் இந்தி பெரும்பாலானவர்கள் பேசுவதால் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கவேண்டு’மென்று சொன்னார்கள். அப்போது பெரியார், ‘ஆட்சிமொழி என்பது’ பின்னால் இருக்கட்டும்; உங்களுடைய ஆட்சியின் லட்சணம் என்ன? யார் யாரை ஆளவேண்டும்? எதற்காக ஆளவேண்டும்?’ என்று ஆட்சி முறையைப்பற்றி அவர்களைத் தாக்க...

உடனே இந்தியை ஆதரிக்கிறவர்கள் ஆட்சிமொழி இந்தி என்பதை விட்டு விட்டு, ஒரு இணைப்பு மொழியாக இருக்கட்டும் என்று நேசம் கொண்டாடுகிறார்கள்; பாசம் காட்டுகிறார்கள்; சொந“தம் கொண்டாடுகிறார்கள்; ‘நாம் இணைந்திருக்க வேண்டாமா? அதற்கு இணைப்புமொழி தேவையில்லையா?’ என்று வலிய வலிய கேட்கிறார்கள்.

தேசியத்திலிருந்து நழுவி, இன்று இணைப்பு மொழி என்ற இடத்திற்கு இந்தி வந்ததற்கு மிகப்பெரிய காரணம் பெரியார் அவர்கள் நடத்திய அறப்போராட்டம் தான்.
மொழிப்பிரச்னை, அவர்களைப் பொறுத்தவரையில் மிகச்சாதாரணமான பிரச்னை
#HBDAnna113

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling