கவி தா🇮🇳 Profile picture
Proud of my only son💪 யானார்க்கும் குடியில்லை கும்மிக்கு எனையழைக்காதீர் Beware of me I BITE if I'm provoked💃🏾 Politics💪🏾History💪🏾Rights 💪🏾Rationalist💪

Sep 15, 2021, 27 tweets

தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டாக ஹிந்தி திணிப்பிற்கு நடந்துவரும் மொழிப்போரில் 30 ஆண்டுகாலம் தலைமை வகித்து வழி நடத்தியவர் அண்ணா
#HBDAnna113

ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போர் 1947ல் முடிவுற்றது
ஆனால் திணிக்கப்படும் ஹிந்திக்கு எதிராக நடத்தப்படும் போர் 1937ல் தொடங்கியது...இன்றும் தீ எரிந்து கொண்டிருக்கிறது
#HBDAnna113

இந்த மொழிப்போர் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல

ஹிந்தி பேசும் வட மாநில மக்களுக்கு எதிரானதும் அல்ல

தமிழர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க பல காலகட்டங்களில் ஒன்றிய அரசு அமுல்படுத்திய சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் எதிர்வினை மட்டுமே
#HBDAnna113

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது

இத்தனை மொழிகள் உள்ளபோதும் ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஹிந்தி பேசாத மற்ற மக்களிடம் அதைத் திணிக்கும் போக்கு ஆங்கிலேய ஆட்சி காலத்திலிருந்து தற்போது வரை தொடர்கிறது
#HBDAnna113

எதிரிகள் தாக்கித் தாக்கி
வலுவை இழக்கட்டும்
நீங்கள் தாங்கித் தாங்கி
வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் ~ அண்ணாதுரை
#HBDAnna113

ஆங்கிலேயர் காலத்தில் வெவ்வேறு மொழி கலாச்சாரங்கள் வெவ்வேறு உணர்வுகள் என வேறுபட்டிருந்த மக்களை ஒன்றிணைக்க காந்தி உட்பட காங்கிரஸ் கட்சி எடுத்த ஆயுதம்தாம் நாடு முழுவதும் ஹிந்தி மொழி கற்பிப்பு

இதுதான் ஹிந்தி திணிப்பின் தொடக்கம்

1893ம் ஆண்டு பிரச்சாரனி என்ற அமைப்பும்
1910ப் ஆண்டு ஹிந்தி சாகித்ய சம்மேளன் என்ற அமைப்பும் ஹிந்தி கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டன

பின்னாளில் இந்த அமைப்பை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஹிந்தி பிரசாரத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினர்

நாடு முழுவதும் ஹிந்தி பிரசாரத்தை தொடங்கிய காந்திக்கு வட இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது

ஆனால் 1915ல் தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சாரத்துக்கு வந்த காந்திக்கு அழைப்பிதழ் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது
அதன் அதிருப்தியை அந்த மேடையிலேயே பதிவு செய்தார் காந்தி

1924ல் சென்னையில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் பங்குபெற்ற சத்தியமூர்த்தி (ஐயர்) ஹிந்தி மொழியை அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் 2வது கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பிற்கு விதை போட்டார்

அதே ஆண்டு சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் இந்திய அரசுப்பணி தேர்வாணையத்தின் தலைவராக இருந்த சர்.டி. விஜயராகவாச்சாரி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும், ஹிந்தியில் தோல்வியடைபவர்கள் படித்தவராகவே கருதமுடியாது என்றார்

ராஜாஜியும் சத்யமூர்த்தியும் தொடர்ந்து ஹிந்தி பிரசாரத்தில் ஈடுபட...

"பழையன கழிந்து புதியன புகுவதாக இருந்தால் நமக்கு கவலை இல்லை
ஆனால் புதியவனவைகள் வந்து பலாத்காரமாய் புகுந்து கொண்டு பழையனவை வலுக்கட்டாயமாக கழுத்தைப் பிடித்து தள்ளுவதை சகித்துக் கொண்டு...

...அதற்கு வக்காலத்து பேசுவது பாஷைத் துரோகம்
சமூகத் துரோகம் " என்று எழுதினார் பெரியார் தன் குடி அரசு இதழில்

1937ல் சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாய மொழியாக்கினார்

இதற்கு மறியல் கருப்புக்கொடி காட்டல் உண்ணாவிரதம் எனப் பல போராட்டங்கள் நடைபெற்றன

ஜூன் 1938ல் சென்னையில் நடைபெற்ற ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் பங்குபெற்று அண்ணா பேசினார்
அந்த பேச்சுக்கு 3 மாதங்கள் கழித்து வழக்கு பதிவு செய்து அவரை 4மாதங்கள் சிறையில் அடைத்தது ராஜாஜியின் அரசு

1938ல் ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நடைப்பயணமாக வந்தனர்
போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டர்
பெரியாருக்கு 18மாதமும் அண்ணாவிற்கு 9மாதமும் சிறை விதிக்கப்பட்டது

1948ல் ஓமந்தூர் ராமசாமி பிராந்திய மொழி முதல்மொழியாகவும் ஹிந்தி அரபு தெலுங்கு ஆகிய பிற மொழிகளில் ஏதேனும் ஒன்றை 2ம் மொழியாகவும் கட்டாயம் படிக்க வேண்டுமென உத்தரவு வெளியிட்டார்

இதை எதிர்த்து நடத்தப்பட்ட மாநாட்டில் அண்ணாவை சர்வதிகாரியாக நியமித்து பல கட்ட போராட்டங்கள் தொடங்கப்பட்டன

14 /09/ 1949ல் ஹிந்தி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது அப்போதைய ஒன்றிய அரசால்(காங்கிரஸ்))

தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி பரப்பும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 1952ல் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் பெயர் பலகையில் ஹிந்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது

இதற்கு எதிராக 01/08/1952ல் 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பெயர் பலகையில் ஹிந்தியை தார் பூசி அழித்தனர்

(இதற்கு எதிர்வினையாக காங்கிரஸ் தார் பூசிய பெயர் பலகையில் மண்ணெண்ணெய் ஊற்றினர்)

1960ல் ராஜேந்திர பிரசாத் 1965முதல் ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற ஆணையை வெளியிட்டார்
இதை எதிர்த்து அண்ணா தலைமையிலான திமுக போராட்டத்திற்கு தயாரானது
30/08/60க்குள் ஆணையைத் திரும்பப் பெறவில்லை என்றால் தென்னகத்தை விடுவிக்கக் கோரி சுதந்திரப் போராட்டம் தொடரும் என்றார் அண்ணா

அண்ணாவின் அந்தப் போராட்டத்தை எதிர்க்கத் தயாரானார் முதல்வர் காமராஜர்

01/08/1960ல் கோடம்பாக்கத்தில் பேசிய அண்ணா - போராட்டத்தில் கருப்புக் கொடி மட்டுமே காட்டவேண்டும்
ஹிந்தி ஒழிக, கட்டளையைத் திரும்பப் பெறுக மட்டுமே முழக்கமிட வேண்டும் என்றார்

கருப்புக் கொடி காட்டினால் தமக்கு அவமதிப்பு ஏற்படுமென ஜவஹர்லால் கடிதம் அனுப்பினார்

ஹைதராபாத்தில் பேசிய குடியரசுத் தலைவர் இனிவரும் காலங்களில் பிற மாநில சகோதரர்களின் உணர்விற்கு மதிப்பளித்து ஹிந்தி திணிக்கப்பட மாட்டாது என்றார்

1963ல் லால் பகதூர் ஆட்சிமொழி ஆணையம் கொடுத்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்
அதில் 26/01/65 முதல் ஹிந்தி ஆட்சி மொழியாகவும் அதற்கு ஆங்கிலம் துணை மொழியாக இருப்பது ஆட்சியாளர்களின் விருப்பம் என்றவிதத்தில் சொற்கள் இருந்தன

அந்த மசோதாவை ஆதரித்த உறுப்பினர் இந்தியாவில் அதிகமானோர் ஹிந்தி பேசுவதால் அதுதான் ஆட்சிமொழியாக அமைய வேண்டும் என்க அதற்கு அண்ணா அளித்த பதில் பிரசித்தி பெற்றது

1964ல் திருச்சி ரயில் நிலையத்தில் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார் சின்னசாமி
ஹிந்தி திணிப்பின் எதிர்ப்பிற்கான முதல் தற்கொலை
அண்ணா யாரும் தற்கொலை செய்து கொள்ளவேண்டாம் என அறிக்கை வெளியிட்டார்

போராட்ட கள மாணவர்களைத் தேவைப்பட்டால் துப்பாக்கியால் சுடச்சொல்லி இருக்கும் (காங்கிரஸ்) உத்தரவு அண்ணாவை வந்தடைய...
பின்விளைவுகளை மாணவர்கள் சுமக்கக்கூடாது என்பதற்காக போராட்டத்தை பெரியவர்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்

67ல் திமுக ஆட்சிக்கு வர... அண்ணா முதல்வரானார்
மத்தியில் இந்திரா பிரதமரானார்
27 /11/67ல் ஆட்சி மொழி சட்டத்தில் ஆங்கிலத்தையும் ஆட்சி மொழியாக திருத்தி மசோதா தாக்கல் செய்யப்பட்டது
இது சரியான முடிவல்ல
அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக அமுல்படுத்த வேண்டும் என திமுக கூறியது

ஹிந்திக்கு அளிக்கப்படும் இடத்தை தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் சமமாக அளிக்கவேண்டும் என கூறப்பட்டது

08/01/1968ல் ஒன்றிய அரசுப் பணிகளுக்கு ஆரம்பத்தில் ஹிந்தியறிவு தேவையில்லை என்று சொன்னதோடு மும்மொழித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

ஹிந்தி மறைமுகமாக திணிக்கப்படுவதை உணர்ந்து...

போராட்டம் தொடங்கப்பட்டது

திமுக அரசில் (போராட்டக்கள மாணவர்களின்) கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர்கள் கூறினர்

அண்ணா மறைந்தும் வழி நடத்துகிறார்
ஆதிக்கம் ஒலிக்கும் இடத்தில் அண்ணாவின் குரல் ஒலிக்கும்
#HBDAnna113

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling