#Ethicalhacking
நாம இன்னைக்கு வாழ்ந்துட்டு இருக்குற நவீன உலகத்தில நம்முடைய தகவல்கள் எல்லாமே எதோ ஒரு வகையில ஆன்லைன் Data-வாக சேமித்து வைக்கப்பட்டு இருக்கு அது நம்முடைய கைபேசியோ அல்லது அரசின் Databaseலயோ எதோ ஒரு இடத்தில இருக்கிறது.அந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க நாம் பல்வேற
முயற்சிகளை செய்கிறோம்,அதைவிட பல மடங்கு முயற்சிகளை செய்து பாதுகாக்கிறது நம்முடைய அரசாங்கம்.எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்து இருந்தாலும் அதில் எதாவது ஒரு Loophole கண்டுபிடிச்சு அந்த தகவல்களை எல்லாம் திருட முயற்சி செய்றாங்க.
இதையெல்லாம் செய்றாங்க பாத்திங்களா அவங்க பேர் தான் Hackers
இப்படி நடக்குறதை தடுக்கறாங்க பார்த்திங்களா அவங்க பேர் Ethical Hackers .
இந்த இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றித்தான் பார்க்கபோறோம் இந்த Threadla முதலில் ஹேக்கிங் அப்டின்னா என்ன அப்டினு தெரிஞ்சுப்போம் நமக்கு அல்லது ஒரு பெரிய நிறுவனத்திற்கு தெரியாம அவங்களோட தகவல்களை
எல்லாம் ஆன்லைன் வழியாக திருடுறாங்க பார்த்திங்களா அவங்கதான் ஹேக்கர்ஸ்,ஒரு பெரிய நிறுவனத்தின் தகவல்களை எல்லாம் எடுத்து அவங்களை பணம் கேட்டு மிரட்டுவாங்க உதாரணம் சொல்லப்போனால் சமீபத்தில் உலகம் முழுக்க நடந்த Ransamware Attack சொல்லலாம் உங்கள் கம்ப்யூட்டர் Hack பண்ணி அதில் உள்ள தகவல்கள
எல்லாம் எடுத்துவச்சுட்டு சில ஆயிரக்கணக்கான டாலர்கள் கேப்பாங்க Hackergala பலவிதமான Hackers இருக்காங்க Black Hat,White Hat,Grey Hat.
Black Hat Hackers
முதலில Black Hat Hackers அப்டினு யாருன்னு தெரிஞ்சுப்போம் இவங்கதான் பெரிய பெரிய கம்பெனிகளோட தகவல்கள் எல்லாம் எடுத்து ஆன்லைன் அதாவது
Dark Webல Upload பண்ணிருவாங்க அல்லது அந்த கம்பெனியிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குவாங்க,அந்த தகவல்களையெல்லாம் வெளியிடாமல் இருக்க.
White Hat Hackers
இவங்கள The Good Guyz அப்டினு சொல்வாங்க,இவங்க பெரிய பெரிய நிறுவனங்களோடு இணையத்தளங்கள் அப்பறம் Application எல்லாம் Test
பண்ணுவாங்க அதில் எதாவது Loophole இருந்த அந்த தகவல்களை Black Hat மாறி இல்லாம இவங்க அந்த நிறுவனத்திடம் சொல்லுவாங்க அந்த நிறுவனம் இவங்களுக்கு சில Rewards கொடுப்பாங்க அலல்து அவங்க நிறுவனத்தில் வேலைக்கூட சேர்த்துக்கொள்ளுவாங்க.இதுகாக்காக ஆப்பிள்,Google,Facebook போன்ற நிறுவனங்கள்
BugBounty Programs நடத்துவாங்க இதன் மூலம் அவங்க நிறுவனத்தோடு Servicesla ஏதாவது vulnerablity இருந்த அதை தெரிஞ்சு Fix பண்ணிருவாங்க.இதை பண்றவங்க எல்லாருமே Ethical Hackers.
Grey Hat Hackers
இவங்களும் மேல சொன்ன இரண்டு பேருக்கும் நடுவுல உள்ளவங்க இவங்களும் ஒரு நிறுவனத்தோட தகவல்களை
அவங்களோட எந்த ஒரு அனுமதியும் பெறாமல் எடுத்து தவறான வழியில் பயன்படுத்தாம அந்த நிறுவனத்திடமே ரிப்போர்ட் செய்வாங்க இவங்களும் ஒரு விதத்தில Black Hat ஹேக்கர் போலத்தான்.
இந்த மூன்று வகையிலும் சொன்னதுல White Hat Hackerலேயே Ethical Hacking அடங்கிரும்,இன்னும் தெளிவா சொல்லணும் அப்டினா
பெரிய நிறுவனங்களோடு தகவல்களை பாதுகாப்பது தான் இவங்களோட வேலை அதுமட்டுமில்லாமல் இவங்களோட சம்பளமும் அதிகம்.
அதே போல நீங்க ஒரு Ethical Hacker ஆகணும் அப்டினு உங்களக்கு நல்ல Computer Knowledge எப்படி work ஆகுது அதோட Hardware Run ஆகுது அப்டினு உங்களுக்கு நல்ல தெரிஞ்சு இருக்கணும்
அடுத்து உங்களுக்கு கொஞ்சம் Coding Knowledge இருக்கனும்.அப்பறம் ஒரு System எப்படியெல்லாம் Attack பண்ணுவாங்க அதிலிருந்து அவங்கள தடுக்க நாம என்னென்னெ வழியெல்லாம் அவங்க யோசிக்கிறத விட நாம அதிகமா தெரிஞ்சுவச்சுருக்கணும்.
ஒருத்தவங்களோட தகவல்களை எப்படி அவங்க எப்படி எடுக்குறாங்க ஒரு
இணையத்தளம் இருக்கு அப்டினா அதிலிருந்து எந்த வகையில தகவல்களை சுலபமான வழியில் தகவல்களை எடுக்க முடியும் அது எல்லாம் நாம Logic-கா
தெரிந்துகொள்ளணும் சுலபமா சொல்லணும் அப்டினா அவங்க வழியில நமக்கு யோசிக்க தெரிஞ்சு இருக்கணும்.
நீங்க ஆன்லைன்ல Ethical Hacking கத்துக்கணும் அப்டினு
விரும்புனீங்க அப்டினா ஒரு சிறந்த இணையதளம் Cybrary.இந்த இணையதளம் மூலமா நீங்க இலவசமா Cyber Security courses படிச்சுக்கலாம் அல்லது இதை பற்றி தெரிஞ்சுக்கணும் அப்டினாலும் இந்த இணையதளத்தை நீங்க அணுகலாம் அதே போல வேற Learning Platform ஆன Udemy,Coursera அதுல ஏதும் Courses இருந்தாலும்
நீங்க கத்துக்கலாம்
நாம அடுத்த Threadல Darkweb அப்டினா என்ன அது பற்றி தெரிஞ்சுப்போம்
Note:Link In Bio
@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @laxmanudt @1thugone @smithpraveen55 @Smiley_vasu__ @iam_vikram1686 @fahadviews @Sureshtwitz @KalaiyarasanS16
@ValluvanVazhi @hari979182 @hawra_dv @KingKuinsan @IamNaSen @ManiTwitss @YAZIR_ar @ssuba_18 @Madhusoodananpc @Tonystark_in @thisaffi @saravanan7511 @Karthi_Genelia
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.