அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Sep 26, 2021, 8 tweets

திருமாலின் பத்து சயன தலங்கள்:
1. ஜல சயனம்- 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது. திருமாலின் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத இடம் ஜல சயனம்.
2. தல சயனம்- 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு

திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து தரையில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)- முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

4. உத்தியோக சயனம்- 12வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார்.
5. வீர சயனம்- 59வது திவ்ய

தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், நான் எங்கு உறங்குவது என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் தான் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் வீரராகவப் பெருமாள் வீர சயனத்தில் காட்சி தருகிறார்.
6. போக சயனம்- 40வது திவ்ய தேசமான திருசித்திரகூடம்

என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.
7. தர்ப்ப சயனம்- 105வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம். இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார்

8. பத்ர சயனம்- 99வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான பத்ர சயனம். இங்கு வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள் வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர என்பது ஆலமரத்து இலையை குறிக்கிறது.
9. மாணிக்க சயனம்- 61வது

திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான மாணிக்க சயனம். இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

10. உத்தான சயனம்- இதுவும் திருக்குடந்தை ஆராவமுதப் பெருமாளின் சயனக் கோலத்தை தான் குறிக்கிறது. திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.

ஓம் நமோ நாராயணாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling