Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️26

Oct 1, 2021, 10 tweets

#ChinaEnergyCrunch
நேற்று நண்பரின் புதுவீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்க திருச்சிக்கு நானும் என் நண்பரும் சென்று இருந்தோம் அவருக்கு தெரிந்த ஒரு கடையில் வீட்டின் கதவிற்கு தேவையான சில Lock மற்றும் பூட்டுக்கள் வாங்கி கொண்டு இருந்தோம்.அப்பொழுது அவர் வாங்கிய Door Lock-யின்

சற்று கூடுதலாக அந்த கடையில் இருந்தது அதே Door Lock என்னது இன்னொரு நண்பர் காரைக்காலில் இந்த விலைக்கும் சற்று குறைவான விலையில் வாங்கி இருந்தது எனக்கு யாபகம் வந்தது ஒரு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் அவர் வாங்கியதை கூறி என் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று

கேட்டேன்.

அவர் சில காரணங்களை சொன்னார் பெட்ரோல் விலை அது இதுனு ஏதோதோ காரணம் சொன்னார்,அப்பறம் ஒன்னு சொன்னார் சீனாவிலே மின்சாரம் பற்றாக்குறை அதனால அவங்களுக்கு சில Raw Material கிடைக்கிறதுல சில Problem இருக்குனு சொன்னார்.நமக்கு அதையெல்லாம் விட்டுட்டு சீனால உண்மையிலே மின்சார

பற்றாக்குறையை அல்லது இவரா ஏதும் சொல்றார அப்டினு வந்து இன்டர்நெட்ல தேடுனா உண்மையில மின்சார பற்றாக்குறைதான் மனுஷன் கரெக்டாதான் சொல்லிருக்காரு.

சரி ஏன் இப்டி திடிர்னு மின்சார பற்றாக்குறை அப்டினு இணையத்துல தேடினப்பா சில தகவல்கள் கிடைச்சசு,என்ன அது அப்டினா உலகிலேயே அதிகமான பொருட்கள்

உற்பத்தி ஆகுறது சீனாவுலதான் கடந்த ஆண்டு உலகையே உலுக்கிய கொரானாவுல எல்லா நாடுகளுமே Lockdownல தான் இருந்துச்சு அப்ப பொருட்களோடு தேவை ரொம்ப கம்மியா இருந்துச்சு இப்ப கொஞ்சம் கொஞ்சம் எல்லா நாடுகளும் மீண்டு வராங்க அதனால பொருட்களோடு தேவையும் அதிகமா இருக்குது சரி இதுக்கும் மின்சார

பற்றாக்குறைக்கும் என்ன சம்மந்தம் அப்டினா சீனாவுல அறிவிக்கப்பட்ட சில சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் தான் அதாவது சீனாவுல உற்பது ஆகுற 80% சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரம் அனல் மின்நிலையங்களில் உற்பத்தி ஆகுறது நிலக்கரியை கொண்டுதான்.

சீனா அரசாங்கம் 2060-க்குள்ள carbon neutral அதாவது

சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கணும் அப்டினு ஒரு திட்டம் அறிவிச்சு இருக்காங்க அதனால தான் அங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கு அதுவும் இல்லாம ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இறக்குமதி ஆகும் நிலக்கரிக்கும் தடை விதிச்சு இருக்காங்க,இதனால முக்கிய உற்பத்தி

நகரங்களில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது அதுவுமில்லாமல் சில நகரங்களில் வீடுகளுக்கு சுழற்சி முறையில் மின்தடை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலக்கரி தட்டுப்பாட்டால் சீனாவின் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்வதை நிறுத்தியிருக்கின்றன,சீனாவின் பெரிய

தொழிற்சாலைகளுக்கு வரும் அதிகமா ஆர்டர்கள் இதனால பூர்த்தி செய்ய முடியவில்லை இந்த பாதிப்பு திருச்சில உள்ள கடை வரையும் வந்துருக்கு.

@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @1thugone @Smiley_vasu__ @smithpraveen55 @iam_vikram1686 @fahadviews @Sureshtwitz

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling