தீ பரவட்டும் Profile picture
நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது - அய்யா பெரியார்.

Oct 3, 2021, 20 tweets

தமிழர்கள் இப்படி சோம்பேறிகளானதின் விளைவாக தமிழகத்தில் இன்று பீகார், அசாம், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது.

பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ.148 ஆகும். அதாவது 1.20 கனமீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ.148 கிடைக்கும். (ஒரு கனமீட்டர் என்பது 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்டதாகும்.)

தற்போதைய கூலிரூ.229…..

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – (NREGS) ஆகஸ்ட் 25, 2005 ல், சட்டமானது அதை தொடர்ந்து பிப்ரவரி 6,2006ல், 100நாள் வரை நடைமுறைக்கு வந்தது…

இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

அவர்களுக்கு எந்த விதமான வேலைகள் என்பதை பார்க்கலாமா..?

நீண்டநாள் தாங்கும் நீடித்த சொத்துக்கள் ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊரக ஏழை மக்களுக்காக நீடித்த நிலையான சொத்துக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதாகும்.

தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கு அனுமதி இல்லை இத்திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய வேலைகள்

நீர்வள பாதுகாப்பு மற்று நீர் சேமிப்பு வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல் நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம் போன்ற வேலைகள்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்கும், இந்திய அரசின் இந்திரா-அவாஸ் யோஜனா திட்டத்தின் சலுகை பெறுவோருக்கும், நீர்ப்பாசன வசதி அளித்தல் ஏரிகளை தூர்எடுத்தல் போன்ற ஏனைய பழங்கால நீர் நிலைகளை புதுப்பிக்கும் வேலைகள்..

நில மேம்பாடு நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதி அமைத்து வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல்..

அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் கிராமங்களை இணைத்தல்.

சாலைகள் அமைத்து, தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும், கிராமங்களின் உள்பகுதிகளிலும் தேவையான

இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல்மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த மற்ற பணிகளும் இதனுள் அடங்கும்….

18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தின் பயனாளியாக தகுதி உடையவராவார்.

ஒரு குடும்பத்தில் எத்தனை நபர் வேண்டுமானாலும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆனால் குடும்பத்திற்கு 100 நாட்கள் மட்டுமே வேலைக்கு உத்திரவாதம்.

பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ.148 ஆகும். அதாவது 1.20 கனமீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ.148 கிடைக்கும். (ஒரு கனமீட்டர் என்பது 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்டதாகும்.)

தற்போதைய கூலிரூ.229…..

இந்தத் திட்டத்தின் கீழ் வேலைகள் சரியான ஒழுங்காக நடக்கிறதா..? என்றால், வேலைகள் நடக்கும் ஆனால் நடக்காது….. என்ற பாணியில் தான் பதில் சொல்லியாக வேண்டும்…

தமிழகத்தில் உள்ள குளம் கண்மாய் மற்றும் நீர்நிலை பகுதிகளில் வேலை பார்க்கும் உண்மை நிலையை நாம் நேரில் கண்டறிந்துள்ளோம்….

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் உண்மையான கிராம விவசாய உழைப்பாளிகளின் உழைப்பை ஊனமாக்கி விட்டது என்பது தான் உண்மை…!

உழைத்து உரமேறிப்போன, சமூகம் உழைக்காமலேயே ஊதியம் பெறுவதை பெருமையாகக் கருதும் நிலைக்கு 100 வேலை திட்டம்.கிராம உழைப்பாளிகளை மாற்றி விட்டது….

பருவநிலைக் கோளாறு, பருவமழையில் வீழ்ச்சி, நிலத்தடி நீரின்மை, இடுபொருட்களின் விலைஉயர்வு, விளைபொருட்களுக்கு உரிய விலையின்மை போன்ற பல்வேறு சவால்களை எதிர்நோக்கி தட்டுத் தடுமாறி முட்டிமோதி நடைபெற்றுவரும் சிறு, குறு விவசாயத்திற்கு இன்று கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

கிடைத்தாலும் உண்மையான உழைப்பை செலுத்தத் தயாராக மக்கள் இல்லை.

தமிழர்கள் இப்படி சோம்பேறிகளானதின் விளைவாக தமிழகத்தில் இன்று பீகார், அசாம், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது.

திட்டத்தின் நோக்கம் சரியான முறையில் அமைந்திருந்தால் தமிழ்நாட்டிலுள்ள 39202 ஏரிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நீர்வழித் தடங்கள் புதுப்பிக்கப்பட்டு, செப்பணிப்பட்டு, மேம்படுத்தப்பட்டிருக்கும்.

கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் மாற்றி யோசித்தால் போது.
விவசாய உற்பத்திக்கும் அதன் வாழ்வாதாரத்தில் ஓரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி விடலாம்…!

இந்த மாதிரி ஏழை எளியவர்களின் பசிப்பிணியை போக்கவும் நீர்வள பாதுகாப்பு மற்று நீர் சேமிப்பு வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல் நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம் போன்ற வேலைகள் செயல்பட்டு அதன் மூலம் நீர்வளம் சீராக்கப்படும் உண்ணத திட்டத்தை

தமிழக அரசு நடவடிக்கை!

தமிழகத்தில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு திமுக தலைமையிலான அரசு ஊதியத்தை 250ல் இருந்து 275 ஆக உயர்த்தியது. தற்போது இந்த ஊதியத்தை 300 ஆக உயர்த்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பட்ஜெட்டடில் அறிவிப்பு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling