அங்கே ராமன் என்றால் இங்கே முருகன். அங்கே சர்வாதிகாரம் என்றால் இங்கே “அன்பான” சர்வாதிகாரம். அவர்களுக்கு ராம ராஜ்ஜியம் என்றால் இங்கே பார்ப்பன நேசன் ராஜராஜனின் ராஜ்ஜியம். சீமான் தனது அரசியலைக் கொண்டு அதிகாரத்தை வென்றெடுப்பது குறித்துப் பேசுவதில்லை
“அதிகாரத்தைக் என்னிடம் கொடுத்து விடுங்கள்” என மக்களை எச்சரிக்கிறார்.
வலதுசாரி அரசியலின் இலக்கு சமூகத்தின் லும்பன் பிரிவினர். பாரதிய ஜனதா யாரை நோக்கி, யாருக்காக பேசுகிறதோ அதே லும்பன் பிரிவினரை நோக்கித்தான் சீமானும் பேசுகிறார். இந்துத்துவத்தின்
பார்ப்பன சாதிவெறி தன்னை மதவெறியாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்றால், தமிழ் ஆண்ட சாதிகளின் வெறி இனவெறியாக நாம் தமிழர் அரசியலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
சரியாகச் சொல்லப்போனால் எதிர்காலத்தில் இந்துத்துவ அரசியலின் தமிழக நுழைவுக்கு பாதை போட்டுக் கொடுக்கிறது நாம் தமிழர் கட்சி. முந்தைய காலங்களில் பார்ப்பனர்கள் பல்லக்குகளில் வருவர்; பல்லக்குத் தூக்கிகள் இருப்பார்கள். அவர்களுக்கு முன் “முள் பொறுக்கிகள்”
என சிலரை வைத்திருப்பார்கள். இந்த முள் பொறுக்கிகளின் வேலை பல்லக்கு வருவதற்கு முன் பாதையில் உள்ள முட்களை அப்புறப்படுத்துவது. இந்துத்துவத்தை பல்லக்கில் சுமந்து வருகிறது பாஜக – அதற்காக பெரியாரியம் என்கிற ‘முட்களை’ அகற்றும் முள்பொறுக்கி வேலையைச் செய்து கொண்டிருக்கிறார் சீமான்.
இதற்கு ஏற்ப மொத்த கட்சியும் ஜனநாயகமற்ற நாஜிக் கட்சியின் பாணியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த பலிபீடத்தில் தான் தமிழ்மணிகள் பலியிடப்படுகின்றனர். தலைமையின் மேல் கேள்விக்கிடமற்ற பக்தியும், உட்கட்சி ஜனநாயகமின்மையும்
ஏற்கனவே கிறுக்குப் பிடித்த குரங்கிற்கு சாராயம் ஊற்றிக் கொடுத்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மணியையும் அவரது மனைவியையும் தொலைபேசியில் அழைத்து ஆபாசமாக ஏசியவர்கள் இவர்கள்தான். இவர்கள் கட்சியின் உத்தரவைப் பெற்றுத்தான் இப்படிச் செயல்பட வேண்டும் என்பதில்லை –
குறிப்பான சந்தர்ப்பங்களில் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதை சாராயம் அருந்திய பைத்தியக்கார குரங்குகள் தாமே தீர்மானித்துக் கொள்ளும். ஆதாரம் வேண்டுமா? இந்தப் பதிவுக்கான எதிர்வினைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் தமிழர் என்கிற இந்துத்துவ கும்பலின் முள்பொறுக்கிகளை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்வதோடு தனிமைப்படுத்த வேண்டிய தருணம் இது.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.