நீ தாண்ட்டா அயோக்கிய நாயின்னு அண்ணனை திட்டிருப்ப்பதால் -சாட்டை துரைமுருகன் வாக்குமூலம் 🔥🔥
வண்டாரி தமிழ்மணியிடன் அறிமுகம் ஆன துரை முருகன் தனது திருமணத்திற்காக 2012 – 2013-ம் ஆண்டு வாக்கில் எண்பதாயிரம் ரூபாய்க்கு நகைகள் வாங்கியுள்ளார்.
இந்த தொகையை திருமணத்திற்கு வரும் மொய் பணத்தில் இருந்து திரும்பக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார். எனினும், திருமணத்திற்கு பின் சொன்னபடி பணம் தரவில்லை.
தமிழ்மணி, சாட்டை துரைமுருகன் தனக்குத் தர வேண்டிய கடனில் பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் 33,000 ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார். வாங்கிய கடனை இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து வந்துள்ளார் துரை முருகன். இத்தனைக்கும் சமீபத்தில் தான் துரைமுருகன்
ஒரு ஹுண்டாய் க்ரேட்டா காரும் 1,60,000 ரூபாய் விலையில் புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்டும் வாங்கியுள்ளார் என்கின்றன தம்பிமார்கள் இடும் முகநூல் பதிவுகள். பணம் திரும்பக் கிடைக்காத நிலையில் விசயத்தை கட்சியின் பிற நிர்வாகிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் தமிழ்மணி.
தமிழ்மணி மற்றும் அவரது மனைவியின் கைபேசி எண்களை தனக்கு விசுவாசமான தம்பிமார்களிடம் கொடுத்துள்ளார். துரைமுருகனின் திட்டப்படி உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாம் தமிழர் ஆதரவு கும்பல் தமிழ்மணியையும் அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டித் தீர்த்துள்ளனர்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.