Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Oct 20, 2021, 17 tweets

நேற்றைய தினம் சமூக வலைதளபக்கங்கள் முழுக்க ஒரே பரபரப்பாக இருந்தது ஸ்மோடோ நிறுவனத்தில் CustomerService வேலை செய்யும் ஒருவர் ஹிந்தி நமது தேசிய மொழி அதை கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னதுதான் நேற்றைய #RejectZomato என்ற விவாதங்களுக்கு காரணம்,அப்படி

என்னதான் நடந்தது என்று விபரமாக பார்ப்போம்.

நாம் விரும்பிய உணவை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து அதை நேரடியா நம்மிடம் டெலிவரி செய்வதுதான் ஸ்மோடோ நிறுவனத்தின் வேலை,சென்னை போன்ற நகரங்களில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறையாவது பயன்படுத்தியிருப்போம் குறிப்பாக சொல்லபோனால் Lockdown

சமயங்களில் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்பட்டது ஸ்மோடோ.அதேபோல தான் நேற்றைய சம்பவமும் வாடிக்கையாளர் ஒருவர் அதில் உணவு ஆர்டர் செய்து இருக்கிறார்,
உணவும் வந்து இருக்கிறது ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவில் ஒன்று மட்டும் குறைந்து இருக்கிறது இது குறித்து ஸ்மோடோ நிறுவனத்தின் Customer care

அழைத்து விபரத்தை சொல்லி அந்த குறைந்த உணவிற்கு Refund செய்யுப்படும்படி கேட்டு இருக்கிறார்.அதற்கு அவர்கள் பக்கத்தில் இருந்து இதை ஹோட்டல் பக்கத்திலிருந்து உறுதி செய்த பிறகு Refund தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்,அந்த ஹோட்டலுக்கும் அந்த Customer Care Executive பேசியிருக்குறாங்க

ஆனால் இவங்களுக்கு ஹிந்தி தான் தெரிந்து இருக்கிறது அந்த ஹோட்டல்காரருக்கு அது புரியவில்லை மீண்டும் அந்த Customer care Executive விவரத்தை சொல்லி ஆர்டர் செய்த நபரையே அவங்ககிட்ட பேசச் சொல்லியிருக்கார் அதாவது அந்த ஹோட்டலிடம் இவரும் பேசி ஆர்டர் செய்த உணவில் ஒன்னு குறைந்து இருக்கிறது

என்று விபரத்தை சொல்லிருக்கார் அதற்கு அவங்களும் எங்கள் தரப்பில் தான் தப்பு இருக்கிறது அவங்கள்ட சொல்லுங்க நாங்க மெயில் பண்ணி Refund வாங்கிக்கலாம் அப்டினு சொல்லிருக்கார்.இதை அப்டியே மீண்டும் அந்த Customer Care Executiveகிட்ட சொல்லியிருக்கார். அதற்கு இவர் அதை நம்பாம நீங்க பொய்

சொல்லிரிங்க அப்டினு சொல்லிருக்கார் அப்பறமா இவர் திரும்ப Chat பண்ணிருக்கார் Customer careகிட்ட திரும்பவும் விபரத்தை சொல்லி Refundகேட்டு இருக்கார் அதற்கு அவங்க Hotel sidela இருந்து எங்களுக்கு Confirmation வரல அப்டினு சொல்லிருக்காங்க பிறகு Language barrier இருக்குனு சொல்லிருக்காங்க

அதற்கு Customer அது என்னோட பிரச்சனை இல்ல தமிழ்நாட்டுல பிசினஸ் பண்ணும்போது நீங்க தமிழ் பேசுற People வேலைக்கு வச்சு இருக்கனும் தான அப்டினு சொல்லிட்டு வேற யாராவது இருந்த பேச சொல்லுங்க அப்டினு இவர் ஒரு Request வச்சு இருக்கார் அதற்கு அவங்க sidela இருந்து பதில் சொல்லாம இவருக்கு பாடம்

நடத்தி இருக்காங்க ஹிந்தி நமது தேசிய மொழி அதை கொஞ்சமாவது தெரிந்து வைத்துகொள்ளுங்கள் அப்டினு சொல்லிருக்கார் இதுல தான் பிரச்சனை ஆரம்பிச்சு இருக்கு நடந்த சம்பவங்களை அப்டியே Screenshot எடுத்து ட்விட்டர்ல ஸ்மோட்டோவா Tag பண்ணி போட்ருக்கார்.
அவங்க Clarify பண்ணனும் அப்டினு போட்டு

இருக்கார் அப்பறம் இந்த சம்பவம் பெருசாகி எல்லாரும் Retweet பண்ண ரொம்ப பிரச்சனையாகி #RejectZomato அப்படிங்கற Hashtag தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக ஆரம்பிச்சுருச்சு அப்பறம் ஸ்மோடோ நிறுவனத்தின் பங்குகளும் சரிந்ததாக செய்திகள் வந்தன.அதன் பிறகு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஸ்மோடோ நிறுவனம்

நடந்த சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது அந்த ஊழியரை வேலையிலிருந்து நீக்கிவிட்டோம் தமிழில் ஒரு Call Centre ஒன்னு கோயம்புத்தூர்ல Open பண்ண போறோம் அப்டினு அந்த அறிக்கைல சொல்லி இருந்தாங்க.

அதன் பிறகு ஓரளவுக்கு எல்லாரும் அமைதியான பிறகு அந்த நிறுவனத்தின் CEO ஒரு

Tweet போட்டிருந்தார் ஒரு சாதாரண ஊழியர் செய்த தவறை ஏன் தேசிய பிரச்சனை ஆக்குறிங்க உங்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும் அப்டினு போற்று இருக்கார் அதற்கு அவரை Quote செய்து அவருக்கு பதில் கருத்துக்களை அவருக்கு புரியும் வகையில் கொடுத்துட்டு இருக்காங்க.

இதெல்லாம் ஆரம்பிச்சது ஒரு பதில்

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழிதான் அப்டினு சொன்னதால,இதை தான் நமக்கும் ஸ்கூல்ல சொல்லிக்கொடுத்ததுவராங்க நம்மள நிறைய பேர் அதை தான் நினைச்சிட்டு இருக்கோம்.கண்டிப்பா நமது நாட்டுக்கு தேசிய மொழி அப்டினு ஒன்னு கிடையவே கிடையாது.ஏனென்றால், அரசமைப்புச் சட்ட விவாதம் துவங்கியபோதிலிருந்தே

தேசிய மொழி என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே இதில் சமரசம்தான் செய்யப்பட்டது. எந்தவொரு மொழியும் இறுதி செய்யப்படவில்லை. ஆட்சி மொழியும் கிடையாது அலுவல் மொழி மட்டும்தான். அரசியலமைப்புச் சட்டத்தில் ஆட்சி மொழி என்று சொன்னால் ruling language என்று இருந்திருக்க வேண்டும்

அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் அப்படி இல்லை. official purposes, official langauge என்றுதான் குறிப்பிடப்படுகிறது. சில பேருக்கு கேள்வி எழலாம் ஹிந்தி படிக்க வைக்க கூடாதா என்று தாராளமாக யார் வேணாலும் அவர்களுடைய தேவைக்கேற்ப எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம் இந்தக் எதிர்ப்பு

இவர்களெல்லாம் எழுந்தது கற்றுக் கொள்வதற்கு எதிராக அல்ல திணிப்பிற்கு எதிராக மட்டுமே.

@CineversalS @Karthicktamil86 @karthick_45 @Dpanism @MOVIES__LOVER @1thugone @laxmanudt @smithpraveen55 @SmileyVasu @iam_vikram1686 @peru_vaikkala @fahadviews @Sureshtwitz @KalaiyarasanS16

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling