KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Oct 25, 2021, 6 tweets

அழகென்ற சொல்லுக்கு!

*எழில்
*கவின்
*ஆர்
*அணி

*ஏர்
*அணங்கு
*ஏந்து
*நவ்வி

*சீர்
*செவ்வி
*தகை
*தளிமம்

*நயன்
*தொய்யில்
*மாணி
*மவ்வம்

*ஐஞ்ஞை
*வண்ணம்
*குழகு
*வடிவு

*வனப்பு
*ஒயில்
*முருகு
*அழகு

அழகுத் தமிழில்..
’அழகு’ என்ற சொல்லுக்கான பெயர்கள்!
அத்தனையும்..
காரணப் பெயர்கள்!

மலையாள மக்கள்
அறிந்த அழகுணர்ச்சி..
சிலவே சில தமிழர்கள்
அறியாத அழகுணர்ச்சி:)
---
மையோ மரகதமோ
மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவள் வடிவென்பது
ஓர் அழியா அழகுடையாள்!

பிழை மலிந்த வாக்கியம்...
*கருத்துப் பிழை மட்டுமன்று
*இலக்கணப் பிழையும் கூட!

/ஒரு அழகியாக/
ஓர் அழகியாக என்பதே தமிழ்!

*அழகி ஒருவர்
*அழகி ஒருத்தி
*ஓர் அழகி
*ஒரே அழகி!

அழகு என்பது காலம் கருதிய கிளவி!:)

காலம் மாற மாற, அழகு மாறும்!
இளமையின் அழகு, முதுமையில் தேயும்!

ஆனால்..
சில அழகுச் சொற்கள், காலம் மீறுபவை!

துவக்கத்தில் இருந்த அழகு..
அகவை கூடிய பின்னும் தேய்வதில்லை!

அதனால் தான்..
நிலவு, இவள்(ர்) அழகுக்கு உவமையில்லை!

பூ நிலாய ஐந்துமாய்
புனல் கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய்ச்
சிறந்த கால் இரண்டுமாய்

மீ நிலாயது ஒன்றுமாகி
வேறுவேறு தன்மையாய்
நீ நிலாய வண்ண நின்னை
யார் நினைக்க வல்லரே?

யார் நினைக்க வல்லரே
யார் நினைக்க வல்லரே?
யார் நினைக்க வல்லரே
யார் நினைக்க வல்லரே?

பின் குறிப்பு:

இவ்விழையில் இட்ட அழகின் படங்கள் பல
இது வரை நீங்கள் @ArunPandiyanMJ
அதிகம் பொதுவெளியில் பார்த்திராதவை
என்றே நினைக்கிறேன்:) போராடுங்கள்!

தருமத்தின் வாழ்வு தன்னைக் கீச்சு கவ்வும்
சிலுக்கு மறுபடி வெல்லும்!:)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling