Er.NithanKrish B.E., Profile picture
One of the Casteless Collective.

Nov 15, 2021, 8 tweets

கும்பாபிஷேகம் / குடமுழுக்கு நிகழ்வின்போது கழுகு பறப்பது ஏன்? #Debunk

கொஞ்சம் பெரிய த்ரெட், ஆனா முக்கியமானது....

இதை தெரிந்துகொள்வதற்குமுன், "Hot Air Baloon" எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

பொதுவாக "காற்றை சூடாக்கும்போது, காற்றின் அடர்த்தி குறைந்து காற்று மேல்நோக்கி செல்லும்" இயல்பு உடையது.

மேல் நோக்கிச் செல்லக்கூடிய காற்றின் பாதையில், அதை தடுத்து நிறுத்தும் வகையில் பலூனின் பை உள்ளதால் மேல் எழும்பும் காற்றுடன் சேர்ந்து பலூனும் பறக்கிறது.

மேல் எழும்பும் காற்று நேரான பாதையில் செல்வதில்லை வட்ட வடிவ சுழல் அமைப்பில் பயணிக்கிறது. எனவேதான் பலூன் சூழன்று கொண்டே பறக்கிறது.

இந்த பலூனைப்போலதான் கழுகுகளும், சூடான காற்று மேல் எழும்பும் இடத்தை தெரிவு செய்து, சிறகை விரித்து மட்டும் வைத்துக்கொள்கிறது.

காற்று மேலெழும் போது பலூனும் மேலே செல்வதைப் போல, வட்ட வடிவத்தில் மேல் எழும் காற்றின் காரணமாக, கழுகும் வட்ட வடிவத்தில் உயரத்திற்கு செய்கிறது.

இப்போது யாக சாலைக்கு வருவோம்,

யாகசாலைகளில் குறைந்தபட்சம் இரண்டு இரவுகள்,ஒரு பகல் மேலும் அரை பகல் அளவு காலத்திற்கு யாக நெருப்பு வளர்க்கப்படும்.

குறிப்பாக, பெரிய பரப்பளவை ஆக்கிரமிகும் வகையில் இடைவெளி விட்டு மூன்றுக்கும் மேற்பட்ட யாககுண்டங்களில் நெருப்பு தொடர்ந்து எரிக்கப்படும்.

அவற்றில் நெருப்பு வைத்து காற்றை சூடாக்கும்போது, சூடான காற்று வட்ட வடிவில் சூழல்போல மேலே எழும். இவ்வாறு தொடர்ந்து இரவும் பகலுமாக ஒரே இடத்தில் சூடான காற்று மேல் எழுவதால் கழுகுகள் காற்று மேல் எழும் இடத்தை எளிதில் கண்டுகொள்ளும்.

கும்பாபிஷேக நிகழ்வின்போது கூடும் மக்களின் திரளாண கூட்டம், மனித உடல் சூட்டின் காரணமாகவும் காற்று சூடாகி மேலே எழுகிறது.

இந்த மேல் எழும் சூடான காற்றை பயன்படுத்தி, நோகாமல் உயர பறப்பதற்காகவே கழுகு குடமுழுக்கின்போது வானில் வட்டம் அடிக்கிறது.

நவீன க்ளைடர்களும் இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.

~நவீன சங்கிகளும் இந்த சோம்பேறி கழுகை காட்டிதான் நம் காதில் செய்கிறார்கள். 😂

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling