Er.NithanKrish B.E., Profile picture
One of the Casteless Collective.
Sivacth Profile picture 1 subscribed
Mar 20, 2023 20 tweets 3 min read
இந்த நேரத்தில் இது தேவையான பதிவு என்றே கருதுகிறேன்... #Sting_Operation

மதன் பின்னணியில் பாஜக உள்ளதா? திமுக உள்ளதா? CTR உள்ளாரா? தமிழ்நாடு அரசு & காவல்துறை க்கு வேலை செய்கிறாரா? என பல கேள்விகள்...

பதில்: நாக்பூர் தலைமை (காமாலயம் அல்ல நாக்பூர்)

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?? காமாலயம் ஒன்னும் அவ்வளவு அறிவார்ந்தவர்களைக் கொண்ட இடம் இல்ல! கோமாளிகள் நிறைந்த, சர்கஸ் கூடாரம்... அவ்ளோதான்!

அதும் இல்லாம இப்போ, தமிழ்நாட்டின் தலைசிறந்த க்ளவுனோட கையில இருக்குறத யாரும் மறுப்பதற்கு இல்லை.

ஆனா நாக்பூர் அப்டி இல்ல! வர்ணாசிரமத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லும்..
Feb 1, 2023 10 tweets 3 min read
"ஆண்டு வருமானம் 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை" #பட்ஜெட்2023

கேக்குறதுக்கு இனிப்பா இருக்குல்ல?

இதுக்கு பின்னால ஏகப்பட்ட LIC ஏஜென்ட்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிருக்கு. அதேநேரம் Upper Middle Class மக்கள், Lower Middle Class க்கு வர்ற நிலையும் உருவாகிருக்கு (1/n) Image என்னடா எதயோ எங்கயோ போயி முடிச்சு போடுற?-னு கேக்குறீங்களா??

இங்க பலர் LIC ல பணம் போடக் காரணமே, LIC ல முதலீடு பண்ற பணத்துக்கு வரி கிடையாது, LIC கட்டுனது போக மீத பணத்துக்கு மட்டும்தான் வரி. அந்த மீத பணமும், குறைந்தபட்ச வருமானத்துக்கு கீழ வந்துச்சுன்னா No Tax என்கிற காரணம்தான் (2/n) அரசாங்கத்திற்கு காது குத்து...
Nov 7, 2022 4 tweets 3 min read
போன வருஷத்த விட இப்ப 58 மில்லி மீட்டர் அதி கனமழை பேஞ்சுருக்கு!

- #HelpChennai #SaveChennai போன்ற ஹேஸ்டேக், இந்த மழைக்கு யாரும் போடல!

- ஆண்டுதோறும் நடக்கும் "சென்னைக்கு உதவுங்கள்" உண்டியல் வசூல் இன்று இல்லை.

- ரொட்டி வேணும், பால் வேணும்-னு கண்ணீர் சிந்தும் நிலை யாருக்கும் வரல. - மின் தட்டுப்பாடு, மெழுகுவர்த்தி தட்டுப்பாடு, தகவல் தொடர்பில் சிரமம்-னு எதுவுமே இல்ல.

- வானத்துல இருந்து "ஸ்டிக்கர் ஒட்டுன உணவுப் பொட்டலம்" போடுற கேவலமான நிலை இந்த வருஷம் இல்லவே இல்ல!

**குறிப்பா, சென்னைக்கு பொழைக்க வந்த யாரும் லீவு போட்டுட்டு சொந்த ஊருக்கு போகல.
Jul 30, 2022 8 tweets 3 min read
உலகம் உருண்டை-னு முதலில் சொன்னவர் கிரேக்க அறிஞர் பிதாகரஸ் (காலம் கி.மு:570)

உலகின் முதல் வராகர் சிலை, குப்த பேரரசில் ஏரான் எனும் இடத்தில் கட்டப்பட்ட வராகர் கோயிலின் சிலை (படம்)

குப்தர் காலம்: கி.பி 320-550

உலகம் உருண்டை-னு தெரிஞ்சு 1120 ஆண்டுகள் ஆகியும் வாயில பூமி இல்ல! (1/n) இரண்டாவது பழமையான சிலை, கி.பி: 700-728 பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மஹாபலிபுரம் ஆதிவராக குடவரை படிமம்.(படம்)

உலகம் உருண்டைதான் என்ற பிதாகாரஸ் கோட்பாட்டை உறுதிசெய்தவர் அரிஸ்டாட்டில்(கி.மு 384-322)

பூமி உருண்டைதான்-னு உறுதிசெஞ்சு 1050 ஆண்டுகள் பின்னரும் வாயில உருண்டை இல்ல! (2/n)
May 14, 2022 8 tweets 3 min read
ராமாயண காலம் #Thread

"ராமர் வாழ்ந்த காலம் இன்றிலிருந்து 7500 ஆண்டுகளுக்கு முன்" அப்டின்னு நெறய நூல் பதிவுகள் பார்க்க முடிஞ்சது.

**நம்ம சூத்திர சங்கிகள் வழக்கம் போல "பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்"-னு உருட்டிட்டு கெடக்கானுவ!😝

(1/n) அது இருக்கட்டும்...நமக்கு நல்லா தெரிஞ்ச புத்தர் வாழ்ந்த காலத்துக்கு வருவோம் முதல்ல!

புத்தர் இறந்த ஆண்டு : கிமு 483 அல்லது கி.மு 400 (அதாவது இன்று முதல் அதிகபட்சம் 2503 ஆண்டுகளுக்கு முன்)

அப்போ, அதுக்கப்பறம்தான் பெளத்த கோயில்களும், பெளத்த சன்னியாசிகளும் இருந்துருப்பாங்க!

(2/n)
Mar 15, 2022 16 tweets 5 min read
ரொம்பநாளா எழுதனும்-னு நெனச்சுட்டு இருந்த த்ரெட்... #காமாட்சிவிளக்கு

இந்த விளக்கை சுத்தி ஏகப்பட்ட சடங்குகள் இருக்கு.

1. சாயங்காலம் கண்டிப்பா விளக்கு ஏத்தனும்
2. விளக்கு அணையாமல் பாத்துக்கனும்
3. கல்யாணம் ஆகி புருசன் வீட்டுக்கு புதுசா வர்ற பொண்ணு இந்த விளக்க ஏத்தனும் இந்த விளக்கோடா சிறப்பு என்னன்னா, இது இந்துக்கள் வீடுகளோட மட்டும் நிக்காம கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வீடுகள்லகூட பாக்க முடியும்ங்குறதுதான்.

விளக்கின் சடங்குகள் பற்றி தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி தீப்பெட்டி பத்தி தெரிஞ்சுக்குவோம்.
Nov 15, 2021 8 tweets 3 min read
கும்பாபிஷேகம் / குடமுழுக்கு நிகழ்வின்போது கழுகு பறப்பது ஏன்? #Debunk

கொஞ்சம் பெரிய த்ரெட், ஆனா முக்கியமானது.... இதை தெரிந்துகொள்வதற்குமுன், "Hot Air Baloon" எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

பொதுவாக "காற்றை சூடாக்கும்போது, காற்றின் அடர்த்தி குறைந்து காற்று மேல்நோக்கி செல்லும்" இயல்பு உடையது.