கோவை அப்பத்தா ❤️❤️ Profile picture
மண்எண்னெய் வேப்பெண்னை வெளெக்கண்னெய் சங்கிக்கு செருப்படி கொடுங்கண்னே.. - Dravidian stock. ங்கோ நான் பாவப்பட்ட ஆண்🤣🤣

Nov 21, 2021, 15 tweets

PLC & HMI பற்றி சிலர் தொடர சொன்னதால் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் இங்கு automation துறையில் லெஜன்ட்ஸ் யாரவது இருந்தால் தங்கள் அனுபவத்தை பகிரலாம் எல்லோரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்..

PLC எப்படி choose செய்வது என்பதை பகிர முற்படுகிறேன்

PLC ல நிறைய brands இருக்கு ஆனால் அடிப்படையில் தேர்வு செய்யும் போது I/O’s வெச்சுதான் தேர்வு செய்றோம்
I/O னா🤔
input /output
அப்படினா🤔
அப்படினா விட்டுல இருக்க சுவிட்ச் input,லைட்டு output
புரியுது ஆனால் புரியலை 😜
சாட்டையை சூழற்றுபவன் input ஐய்யோ அம்மான்னு வலில கத்தறவன் output

நல்ல புரியுதுமாம்ஸ்🤣

எத்தனை பேர் சாட்டையை சுழற்றாங்க எத்தனை பேர் கத்தறாங்கன்னு கணக்கு பார்த்த போதும்..

இதற்கு நீ என்னை சாட்டையிலேயே அடிச்சு கொன்னுடு..

சரி சரி.. எவ்வளவு சுவிட்ச் இருக்கு எவ்வளவு லைட் இருக்குதுன்னு கணக்கெடுத்த போதும்

இந்த ரூம்ல 4லைட்டு 10சுவிட்ச் அப்ப 10/4

கரெக்ட்

இதை வீட்டுக்கு யூஸ் செய்ய முடியாது சொன்னே

100ரூ சுவிட்ச் வாங்க 10000 ரூ PLC வாங்குவையா? Cost wise இது மெஷின்களுக்கு உகந்தது

சூப்பார்டா மாம்ஸ் சரி போலமா

இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே

😳😳😳

ஓரு கார் பார்க்கீங் எடுத்துப்போம் அதுல எவ்வளவு I/o’s இருக்குனு பார்ப்போம்

ஒரு கார் பார்க்கீங்கு entry exit இரெண்டு gate , உள்ள போகறதை கவுன் செய்ய ஒரு சென்சார் வெளிய போகும் காரை கவுன்ட் செய்ய ஒரு சென்சார், 2 input அதவாது 2சுவிட்ச்.

Car வந்ததும் திறந்து விட 2கேட்ல 2மோட்டார் அப்ப 2லைட் அதவாது 2output

இப்ப 2 input / 2output அவ்வளவுதான்.

Ok மாம்ஸ் கிளம்புலாமா

😡😡 டேய் 10கார் நிற்க முடியும் 10கார் உள்ள போயிடுச்சு 11வது கார் entry gate வந்ததும் gate open ஆகிடாது அவன் அங்க போய் சுத்திட்டு உன்னை திட்டமாட்டான்

அட ஆமா🤔

இங்க புல் அப்படிங்கிறதற்கு ஒரு சிவப்பு லைட் போட்டா?

திரும்பி போயிடுவான்

அப்ப அது ஒரு output.

ஒரு டவுட்🤔 ஒரு டைம் கேட் தொறந்ததும் 2பேர் உள்ள போயிட்டா🤔

உருப்படியான கேள்விடா.. before gate after gate 2சென்சார் வெச்சுப்போமா?

சூப்பர் மாம்ஸ் இப்ப double செக் பன்றோம் அப்ப கவுன்ட் மிஸ் ஆகாது

அப்ப இப்ப எவ்வளவு I/o’s

Entry gateல 2input 2output
Exit gate ல 1input 1output
ஆகமொத்தம் 3input 2output 🤷

Exit gateல attend time ல இரெண்டு பேர் போக மாட்டாங்களா ராசா🤔

ஆமா இல்லை🤔

ஆமாவா? இல்லலையா? இப்ப சொல்லு மொத்தம் எத்தனை I/o s.

Entry gate ல 2input 2output
Exit gate ல 2input 1output 🤷

க க க போ… சரி வா டீ சாப்பிட்டு வந்து continue செய்வோம்..

இன்னும் முடியாலையா 😭😭

சாரி உன் மாமனார்ட்ட போன் செய்து தரட்டா..

😡😡 அந்தாள் தூரோகிடா அந்த ஆள்ட்டா லிமிட்டா தான் வெச்சுக்குனும் அதுதான் நமக்கு safety மாம்ஸ்

மாமனர்ட்ட பேசவே limit safety எல்ல இருக்கப்ப இங்க லிமிட் safety யாரு போடுவா🤔

அதுவும் சரிதான் இல்லை, வா போடலாம்

எவ்வளவு தொறக்கனும் எவ்வளவு மூடனும் ன்னு up/down limit சுவிட் போடுவோம் 2gate க்கு +4 Input
Added, திடீர்ன்னு error safety limit 1+1 total 6input சேர்த்துப்போம்

Ok மாம்ஸ் அப்புறம்

கல்யாணம் ஆகியும் girl friend க்கு கால் பண்றையே ஏன்?

அது வந்து வந்து எல்லாம் ஒரு Stephany தான்டா..

அங்க வைச்ச உனக்கு auto-mode failure ஆச்சுனா manual mode வைக்கனும்னு அறிவில்ல?

ஹீம்ம்ம சொல்லும் சொல்லித் தொலையும்

Auto/manuals selector, open close ன்னு 3input , 2gate க்கு 6 input இப்ப மொத்தமா கூட்டி சொல்லு

Entry gate 2/2, exit gate 2/1,
Safety க்கு 6/0, manual க்கு 6/0
ஆக மொத்தம் 16 input 3 output, 16பேர் சாட்டை சுழற்றி 3பேர் அடிவாங்குறானுக

அவ்வளவுதான் உன் I/o s கணக்கீட்டுவிட்டாய் இப்ப கடையில போய் என்ன கேட்ப ?

16input /3out put PLC தாங்கன்னு கேட்பேன்

PLC min 12/6 , 24/8 20/10 இப்படி உனக்கு தேவையான I/o யும் market standard யும் ஒப்பிட்டு தேர்வு செய்துகொள் ..Ex. 16/3 னா 24/6 எடுத்துக்கோ

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling