கோவை அப்பத்தா ❤️❤️ Profile picture
மண்எண்னெய் வேப்பெண்னை வெளெக்கண்னெய் சங்கிக்கு செருப்படி கொடுங்கண்னே.. - Dravidian stock. ங்கோ நான் பாவப்பட்ட ஆண்🤣🤣
👑 Queen _barbie Profile picture 1 subscribed
Oct 22, 2023 15 tweets 2 min read
இதன் தொடச்சியாய் இந்த “தேவதையோடு” தொடர்கிறது

வேற வழியில்ல என்னை பாலோ செய்ததிற்காக இதை சகித்துகொண்டுதான் ஆகனும் 🤪🤪 #தேவதையோடு

கெடூர வெயிலில் ஓடி வந்து கார்ல உட்காந்து Acயை போட்டேன் மெதுவாய் போன் சினுங்கியது..
சொல்றீ குட்டிப் பிசாசு

இந்த கொஞ்சலுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை எருமை மாடு எங்கடா இருக்க.

Factoryல கொஞ்சம் வொர்க் அப்புறம்தான் பார்த்தேன் 10 மிஸ்கால் அதுக்குதான் அந்த எருமமாடு
Sep 10, 2023 12 tweets 2 min read
#ஏரியாபசங்க

ஏரியாபசங்க

ஏரியா நட்பு வட்டாரம் எல்லாத்துக்கும் இருந்துருக்கும் அதை அட்டி, மந்தை, gulli இப்படி ஏதாவது ஒரு பெயரும் இருக்கும் அப்படி ஓர் பெயர்தான் இந்த “சங்கம்” இங்க வயது வித்தியாசம் இல்லாத நட்பு இருக்கும் பள்ளி,காலேஜ்ல ஒரே வயதுடைய பசங்கதான் நண்பர்கள் ஆனால் இங்கமட்டும் எல்லா வயசுலேயும் இருப்பாங்க பெருசு பொடுசுன்னு எல்லாம் இருக்கும் அப்படியான ஒரு இடம்தான் இந்த சங்கம்ங்கற அட்டி.. கையில நையா பைசா இல்லாத காலம், நேரம் நிறைய இருக்க காலம், எப்ப போனாலும் எவனாவது இருப்பான் போயி குத்த வெச்சு உட்காந்து பேச ஆரம்பிச்ச முடிக்கறப்ப
Sep 6, 2023 7 tweets 2 min read
(மறுபதிவு)

*சவூதியில் காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case),இதர கஃபீல்(Sponsor) பிரச்சினை, சம்பளம் பாக்கி, EOSB பாக்கி, Harassment.etc., போன்ற ஏதாவது பிரச்சினையில் தமிழர்கள் சிக்கி தவிக்கின்றார்களா?*
_தாயகம் செல்ல வேண்டுமா?_ கீழுள்ள MADAD/இந்திய எம்பாஸி / தமிழக அரசு தொடர்பு ஈமெயிலில் உங்கள் கோரிக்கையை ஆங்கிலத்தில் கடித வடிவில் தெரிவிக்கவும்... உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கின்றனர்...

கோரிக்கைகள்/புகார்களைப் பதிவு செய்ய தேவையான முக்கியமான தகவல்கள் / ஆவணங்கள்: *பாஸ்போர்ட் / இகாமா நகல்,
Aug 9, 2023 12 tweets 2 min read
ரேசன் கடை

கோடை விடுமுறையில் ஓய்யாரமாய் 9மணிக்கு எழுந்து கயிறு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் பார்த்திபன்.. ஒரு கையில் அலைபேசி ஒரு கையில் கடுங்காப்பி டம்ளரோட ஒரு சிப் காபி பல்தெரியாத புன்னகையோட மற்றொரு கை விரல்கள் மொபைலில் அதகளம் செய்து கொண்டு இருந்தது.. மாட்டை புடிச்சு கட்டிட்டு கறந்தபாலை சொசைட்டியில ஊத்திட்டு வந்தால் சாந்தா.. பார்த்தி.. கொஞ்சம் ரேசன் கடைக்கு போயிட்டு வாயேன் அம்மாக்கு கால் நோவுதுடா..

ம்மோ அதெல்லாம் முடியாது நீ போ
வூட்டுல சும்மா உட்காந்து போனை தானே நோண்டுற அதுக்கு அங்காச்சும் போயி வாங்கிட்டு வரலாம் இல்லை
Jul 9, 2023 21 tweets 3 min read
நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு காதல் கதை.. இல்லை இல்லை ஒரு கான்வர்சேசன் நல்ல இருந்த என்ஜய் இல்லைனா 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

“தேவதையோடு” ஹலோ !!
ஹலோ!!!
எங்க இருக்க?
வீட்டுல ஆமா நீங்க?
ஹேய் பிசாசு நான்தான்
எப்பட வந்தே நல்ல இருக்கையா?
ஹீம் பைன் .. லாஸ்ட்வீக் வந்தேன்..
என்ன சார் திடீர்ன்னு போன்னெல்லாம் செய்றீங்க ? எங்க ஞாபகமெல்லாம் இருக்கா..

சின்ன புன்னகையோடு சும்மதான் உன் ஏரியலதான் சின்ன வேலை வந்தேன் அதான்..
May 23, 2023 13 tweets 4 min read
#நெகிழ்வுகள்

பள்ளிக்கூடம் போறதே ஒரு விதமான உணர்வு அதுல கொஞ்சம் பயம் கொஞ்சம் காதல் கொஞ்சம் பொறுப்பு கொஞ்சம் பரவசம் இப்படி எல்லாம் கலந்த ஓர் உணர்வு இந்த உணர்வு எப்பவுமே மாறிட்டே இருக்கும் டெஸ்ட்டுனா ஒரு மதரி அவள பார்க்க போகிறோம்னா ஒரு மதிரி கேம்ஸ்னா வேற மதிரி இருக்கும் Image இப்படி மாறுபட்ட உணர்வோடு வீட்டுல இருந்து பள்ளிகூடம் போற வரைக்கும் இருக்க பயணம் ரெம்பவும் அழகானது என் பயணத்தை பகிர முற்படுகிறேன்..

காலையில 6மணி அம்மா வந்து அப்பா எழுந்துருடான்னு முதல் குரல் அடுத்த சில நிமிடத்தில் அந்த குரல் டேய் எழுந்துரு அடுத்த சில நிமிடத்தில் ..
Apr 24, 2023 13 tweets 4 min read
#செல்ப்_த்ரெட்

நேற்று எதர்ச்சையாக ஒரு தம்பிட்ட கார்ல போகும் போது பழைய நினைவுகளை பேசிட்டு போனோம் பேச்சுவாக்கில அப்பவெல்லாம் engineerன்னு கதையை ஆரம்பித்து நான் படிக்க வந்த சூழலை பற்றி பேச ஆரம்பித்தோம் உண்மையாவே ஒரு நெகிழ்வை தந்தது அதை பகீர்ந்து கொள்கிறேன்.. என் ஊர்ல பல தர சாதி மதம்ன்னு கலந்த ஊர் எல்லோரும் அங்க அங்க குழுவாகவே இருப்பாங்க ஆனால் ஒற்றுமையா இருந்தாங்ங அந்த ஊர்க்கு இருக்கறது ஒரே அரசு பள்ளி 5ம் வகுப்பு வரை நூறு வருடத்தை தாண்டி இன்றும் இருக்கிறது அங்க இருந்துதான் ஆரம்பமாச்சு 100வருசமா பள்ளியிருந்தும் எல்லோரும் படிச்சடலை
Dec 3, 2022 10 tweets 10 min read
#செல்ப்_திரெட் #அறிவோம்_அறிவியல்

Reinforcement rebars பார் இப்ப மார்டன் construction ல அதிகமாக பயன்படுத்த கூடியது.. இந்த rebars எதவாது specialலாக தயாரி்க்க கூடியதான அப்படி ஒன்னும் இல்லை ஆனால் இதை இணைக்கும் முறைதான் வித்தியசமானது. நம்ம சாதரன வீடு கட்டும் போது ஒரு கம்பி மீது இன்னொரு கம்பியை வெச்சு கட்டு கம்பியால கட்டி ஓவர் லேப் செய்வோம் இதனால 1மீட்டர் கம்பி வரை வேஸ்ட் ஆகும் சின்னவீடு பிரச்சனை இல்லை இதே புரூஜ் கலீபா மாதிரி பெருசா இருந்தா? எவ்வளவு மீட்டர் வேஸ்ட் ஆவது ?
Oct 1, 2022 14 tweets 8 min read
#செல்ப்_திரெட் முதல் நாள் பள்ளி முதல் நாள் வகுப்பு எப்படியிருக்கும் செமையா இருக்குமில்லே

அவ்வளவு நாள் விடுமுறை அம்முச்சி ஊரு அப்பத்தா ஊருன்னு நல்லா ஊர் மேஞ்சுட்டு திரும்பும் போது இருக்க வேதனையே இருக்கே 😭 நம்ம X தான் புள்ளையிடம் மாமான்னு நம்மளை அறிமுக படுத்துற வேதனையைவிட கொடூரம் தாத்தாட்ட கெஞ்சி கூத்தாடி ஒரு school bag வாங்குறதுக்குள்ள நம்ம படுற பாடு இருக்கே எப்பப்பா.. நம்மகூட வேற யாராவது கூட்டா வந்து கெஞ்சிட்டா bag தோள் பையா மாறிடும்.. சில நேரத்துல அக்கவோட bag 🤦🏼‍♂️ எதுவாயிருந்தாலும் நமக்கு புதுசுதானே என்று தயார் நிலையில் பழ பழன்னு வெச்சுருப்போம்
Aug 28, 2022 14 tweets 7 min read
நண்பன் குடும்பத்தோடு வெளியே போனோம் அப்ப அவருக்கு நடந்த ஒரு சம்பவம் அந்த இரவில் அந்த கொடூரம் யாருக்கும் நடக்க கூடாது.. சுவரஸ்யத்திற்காய் அவனே இங்கு கதை சொல்வான்..

எல்லா நாட்களைப் போலவும் சாப்பிட்டு குழந்தைகளையும் சாப்பிட்டு தூங்க போகலாம்ன்னு போனேன்.. அப்பதான் வூட்டம்மா குப்பையை போய் கொட்டிட்டு வான்னு சொல்ல நானும் கையில குப்பை கவரோட கிளம்ப முற்பட்டேன் உடனே சின்னவன் நானு நானு ன்னு துள்ளி குதிக்க ஒரு கையில கவரு இன்னொரு கையில அவனை தூக்கிட்டு நகர்ந்தேன் அழுகற சத்தம் கேட்க திரும்பினேன் ..
Jan 29, 2022 18 tweets 10 min read
ஓர் அழகான காதல் கதை எழுத ஆசை அப்படி நான் சுவரஸ்யமான எந்த காதலையும் கடக்கததினாலே அப்படியான நிகழ்வுகள் இல்லை அதனலே எங்கோ படித்தது எங்கோ கேட்டது என ஓர் புனைவை முயற்சிக்கிறேன் இதில் நாயகனாக நானே பயணிக்கிறேன்..

பள்ளியில படிக்கும் போது தன்னோட வகுப்புல நமக்குனு ஒருத்தி இருப்ப அவளை எப்படி கண்டுபிடிக்கிறது அதற்குதானே நமது நண்பர்கள் இருக்காங்க.. அவனுகளா ஒரு பெண்னோடு கோர்த்து விடுவானுக அப்படி ஒருவளை என்னோடு கோர்த்து விட்டார்கள் காலையில் பேருந்தில் ஆரம்பிக்கும் அந்த கிசு கிசுப்பு, நான் பேருந்தின் முதல் நிலையத்தில் ஏறிவிடுவேன்
Jan 9, 2022 11 tweets 3 min read
ரோட் revenge part #2

பெட்ரோல் கிடைத்த மகிழ்விலும் தமிழ் கேட்ட மகிழ்விலும் நேராக வண்டிய பக்கத்து பக்காலா(கடை) யில நிறுத்தி தண்ணி தீணின்னு வாங்கி போட்டேன் நேரம் 7யை நெருங்கியிருந்தது ஏசி போடாம ஓட்டிட்டு வந்ததால டி சர்ட் புல்லா வேர்த்து நினைந்து இருந்தது, இப்ப ஏசியை போட சில்லென காற்று என் மீது படற நினைந்த உடலில் சில்லென்ற காற்று பட கூட இசைஞானி தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு என பாட கார் மெதுவாக மிதந்தது .. கொஞ்சம் நகர்ந்ததும் இருபுறமும்
Dec 31, 2021 14 tweets 5 min read
பயண_சோகங்கள் 🤦🏼‍♂️

இரண்டு வாரம் பயணம் முடிந்து ஜித்தாவில் இருந்து ரியாத் வர ஆயுத்தமானேன் வூட்டுகாரம்மவும் இல்லை நான் மட்டும் தனியாகதான் வந்தாக வேண்டும் ஜித்தாவிற்கு முதல் பயணம் அது long time so வண்டியில போனேன்.. ஜித்தாவில் இருந்து ரியாத் மொத்தாம 1000km 9மணி நேரப்பயணம், ஆனால் கடைசிநாளில் inventory plan செய்து இருந்தேன் office போகும் போது பெட்ரோல் அடிக்கவில்லை இல்லை மறந்துட்டேன், ஆபிஸ்ல இருந்து inventory முடிக்கும் போது 6மணி நல்ல rush time இருப்பினும் hotel vacate செய்தாச்சு ஷோ இப்படியே கிளம்பலாம் என முடிவு
Dec 29, 2021 13 tweets 8 min read
#symposium_சமச்சாரம்

2007 காலேஜ் 3year 5th Sem முதல் symposium பாண்டிச்சேரியில ஒரு காலேஜ்கு போனோம் அதுல எங்க dep ல 6பேர் போனோம் நான் 6வது ஆள் ECEdeptல ஒருத்தன் paper presentations க்கு வந்தான் மொத்தம் 7 பேர் சர்கீயூட் டிசைனீங் & mini project நாங்க focus செய்தோம் Paper presentation and circuit designing ஒரே டைம்ல நடந்தது நாங்க second prize paper presentation செய்தவன் win பண்ணலை evening Pondy குதுகலமாக இருந்துட்டு அடுத்த நாள் mini project காலையில 8மணிக்கு ரெடி ஆகினோம் 10மணிக்கு stall போகனும் ஆனால் அப்பதான் ஓர் பேர் அதிர்ச்சி காத்திருந்தது
Dec 26, 2021 7 tweets 3 min read
PLC THREAD கெஞ்சம் வேளை பளு என்பதால் எழுதாம இருந்தேன் மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்..

லாஜிக் எப்படி போடுறதுன ரெம்ப சிம்பளா சொல்லனும்னா only இரண்டு input மட்டும்தான் NO (normally open ) NC (normally closed) அதென்னனு கேற்பவர்கள் படத்தை பார்த்துக்கொள்ளவும் 🤣🤣 இதைதான் ஏன் வாத்தியாரும் சொன்னாரு இதையவே நீயும் சொல்ற அதனே ?

நம்ம வீட்டு பல்பு சுவீட்ச் NO press செய்தால் NC ஆகிடும் இதுவும் புரியலைனா உடைந்த பாலம் யாரும் போக முடியது அது NO , புதிய நல்ல பாலம் NC யாரு வேணும்னாலும் ஏறி போகலாம்

(எடப்பாடியார் கட்டின பாலம் இல்லை)
Dec 18, 2021 15 tweets 6 min read
#DigitalIndia

நேற்று லீவு மெதுவா எந்திருத்து குளிச்சு சாப்பிட போகலாம்ன்னு நினைக்கறப்பவே டைம் 1 மணி, காலையிலும் சாப்பிடல, நைட்டு வாங்கன சவர்மால பாதியை சாப்பிடாம தூங்கிட்டேன் செம பசி அதற்குள்ள வூட்டுகாரம்மாட்ட கல் செய்யது பேசி முடிக்கறப்ப 1.40 friend வந்ததும் கிளம்பினேன் எங்கட்ட சுத்தமா கையில காசு இல்லை நேற்று நைட்டு வரும்போது ATM ல இருந்து cash எடுக்க மறந்திட்டேன், friend இருந்த காசுலதான் night கரும்பு ஜீஸ் குடித்தோம் அவர்ட்டையும் காசு இல்லை, சரின்னு கிளம்பி போயாச்சு எங்க பேவரேட் ரொஸ்டுரேன்ட் ஊருக்கு வெளியே இருக்கு 20 நிமிட பயணம்
Nov 29, 2021 8 tweets 3 min read
#அக்காக்கள்

பெரும் பெண் பட்டாளங்களுக்கு இடையில் பிறந்த ஒற்றை ஆண்பிள்ளை, அதனால என்னவோ எனக்கு எப்பவும் ஏதவாது ஒரு கூட பிறக்காத உறவில்லாத அக்காகள் கூடவே இருக்காங்க.. அந்த அக்காகளும் சீக்கரமாக தம்பி ஆக்கிடுறாங்க பள்ளிபருவத்தில் தோழினாலும் என்னைவிட மூத்தவள் பக்கத்துவீடு ஒரு வகுப்பு முன்னால், அவளோட ஆதிக்கம் என் மீது இருந்தது பள்ளியில தப்பு செய்தால் வரிஞ்சு கட்டி ஆசிரியரிடம் பேசுவது, அதை படி இதை படின்னு பத்தம்வகுப்பு தேற காரணமான தோழியான அக்கா, டிப்பளமோல அக்காதேவதைகளுக்கு விடுப்புதான் போல, வேலைக்கு போகும் போது பஸ்ல பல அக்காக்கள்
Nov 28, 2021 6 tweets 5 min read
!!! கல்வியின் அவலம்!!!

கரு கதவை முட்ட,
கல்விக்கூடம் தேட முனைந்தாரே..
மழலை மடியில் தவழ,
பள்ளி சென்று சேர்த்தாரே !!

உன் முத்தம்கூட மறந்து போச்சு,
கன்னம்மெல்லாம் மறத்து போச்சு!!!
காசக்கொடுத்து பொழுதுபோக்க சொன்னாயே,
போக,போக உன் முகத்தக்கூட மறந்துட்டேனே!!!

1/n
பாசம் காட்ட யாரும்மில்லை,
புரிந்து கொள்ள பருவம்மில்லை!!!
செல்லும் வார்த்தை புரியவில்லை,
திருப்பிக் கேட்க்க நாவு இல்லை!!!

நாக்கு கூட செத்துப்போச்சு,
பரிவு அற்ற சோறுஉண்டு!!!
சுமையை தூக்க சத்து இல்ல,
ஏடு தூக்கி இடுப்பு போச்சு!!!
2/n
Nov 21, 2021 15 tweets 8 min read
PLC & HMI பற்றி சிலர் தொடர சொன்னதால் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன் இங்கு automation துறையில் லெஜன்ட்ஸ் யாரவது இருந்தால் தங்கள் அனுபவத்தை பகிரலாம் எல்லோரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்..

PLC எப்படி choose செய்வது என்பதை பகிர முற்படுகிறேன் PLC ல நிறைய brands இருக்கு ஆனால் அடிப்படையில் தேர்வு செய்யும் போது I/O’s வெச்சுதான் தேர்வு செய்றோம்
I/O னா🤔
input /output
அப்படினா🤔
அப்படினா விட்டுல இருக்க சுவிட்ச் input,லைட்டு output
புரியுது ஆனால் புரியலை 😜
சாட்டையை சூழற்றுபவன் input ஐய்யோ அம்மான்னு வலில கத்தறவன் output
Nov 20, 2021 17 tweets 9 min read
ஒரு அழகான காதல் கதை எழுதனும்னு ஆசை ஆனால் என்ன யோசிச்சாலும் கற்பனையா எதுவும் தோனவே இல்லை. அப்புறம் உண்மையா ஒருவளின் காதல் என்னை உலுக்கியது அதை சுவரஸ்யத்தோடு பகிர முற்படுகிறேன்.

அவள் என் தோழியின் சித்தியின் பெண்,தோழி பாடிய என்புரணத்தால் பேச முற்பட்டால் ஒருநாள். ஆம் மெஜேஞ், வாட்சப் இல்லை FBயின் ஆரம்ப நிலை, வீடியோகால் இல்லாத கற்காலம் அது msg வழியாக ஊடுருவினால், அவள் புதிதாக MSCக்கு சேர்ந்து இருந்தால் நான் கோவையில் கல்லூரி முடித்து பணிபுரிந்தேன், மெதுவாய் அறிமுகமானால், தோழியின் அனுமதியோடு அவளோடு பேச ஆரம்பித்தேன்.
Nov 18, 2021 10 tweets 3 min read
நான் மறந்துடக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன்,அதை உருப்படியாக எழுதுவோம் என எழுதமுற்படுகின்றேன்..

ஒரு இயந்திரத்தை ஆட்டோமெஷின் இயந்திரமாக மாற்றுவது அ வடிவமைப்பது எப்படி அதற்கான ஆரம்ப வழிமுறைகள் எழுதுகிறேன் நேரம் கிடைக்கும் போது இதை தொடர்ச்சியாக எழுதுகிறேன் ஓர் இயந்திரத்தை automation முறையில் வடிவமைக்க உள்ள வழிகள்.
HMI - PLC ( பல brand இருக்கு ஆனால் கன்செப்ட் ஒன்று தான் இதுதான் மூலதனம் இது உபோயகப்படுத்தவில்லையெனில் control components அதிகமாகும் பின்பு பட்ஜெட் எகிறிநிற்கும் அதனால் இதை கற்று சரியான brand and model தேர்வு செய்யவும்