தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறு வகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் பாஞ்சஜன்யம் எனும் சங்கும், திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். பாஞ்சஜன்யம் கிருஷ்ணருக்கு கிடைத்தது வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது.
சாந்தீபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி #பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் தங்கள் மகனைக் கடத்திக் கடற் பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குரு தட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினாள். கிருஷ்ணரும் பலராமரும் கடலரசனை அழைத்து
வழி கேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர் கிருஷ்ணரும் பலராமரும். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால் சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்து ஊதத்
தொடங்கினார். இந்த சங்கின் விஷயத்தில் பெரும் இறை தத்துவம் அடங்கியுள்ளது. தன்னை வந்தடையும் தகுதி என்னவென்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறான். அவனுடைய அந்த சொல்லுக்கு உதாரணமாக அவன் கையில் உள்ள பாஞ்சசன்யமே விளங்குகிறது. #பாஞ்சசன்யம் என்பது கடலில் கிடைக்கும்
ஒரு சங்கு தான். ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை. ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்கும். ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும்.
வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற
சங்கு கிடைக்கும். சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதினும் அரிதான பாஞ்சசன்ய சங்கு கிடைக்கும். சங்கொலி என்பதே பிரணவ ஓசையை வெளிப்படுத்தும் ஒரு இயற்கை வாத்தியம். அதிலும் சுத்தமான பிரணவ மந்திரம் ஒலிப்பது பாஞ்சசன்யம் சங்கில் மட்டும் தான். அந்த சங்கு கிருஷ்ணன்
கையில் மட்டும் தான் இருக்கும். அது ஏன்? கண்ணன் கீதையில் விளக்கம் தருகிறான்.
பல்லாயிரம் பேர்களில் ஒருவன் மட்டுமே கண்ணனின் செய்தியை கேட்கிறான். இது கீதையின் வார்த்தை. இந்த அமுத மொழிக்கு உதாரணமாக தெரிவது இடம்புரி சங்கு. பல்லாயிரம் பேர்களில் யாரோ ஒருவன் மட்டுமே கிருஷ்ணனை பற்றி
சிந்திக்கிறான். அதற்கு உதாரணம் வலம்புரி சங்கு. கண்ணனை பற்றி சிந்திப்பவர்களில் ஆயிரத்தில் ஒருவன் தான் அவனை அடைய முயற்சி செய்கிறான். இதுவும் கீதையின் தெய்விக வாக்கு. இதற்கு எடுத்தக்காட்டாக இருப்பது தான் சலஞ்சல சங்கு. பெரும் தவத்தால் மட்டுமே அடைய கூடிய மாதவனின் திருவடியை நிரந்தரமாக
அடைய முயற்சி செய்யும் ஆயிரத்தில் ஒருவன் தான் கோபாலனின் கோமள திருவடியை சென்றடைகிறான். இது கீதை அறிவிக்கும் தர்ம மொழி. இந்த தர்ம மொழியின் ஒட்டுமொத்த வடிவமே பாஞ்சஜன்யம். அப்படி பாஞ்சஜன்யமாக மாறி கண்ணனின் திருவடியில் நித்யசூரியாக சேவை செய்கிறவனே பிரணவ மந்திரத்தை வெளிப்படுத்த
வல்லவனாகவும் பிரணவ மந்திர வடிவாகவும் ஆகிவிடுகிறான். பிரணவம் என்ற ஓம்கார சமூத்திரத்தில் கரைந்த பின் துன்பம் ஏது! தோல்வி ஏது! பிறப்பு என்பதே ஏது! நாம் கண்ணனை விரும்புவோம். கண்ணனை மட்டுமே விரும்புவோம்! இன்று இல்லை எனினும் என்றாவது ஒரு நாள் அவன் கைகளில் பாஞ்சஜன்ய சங்காக கம்பீரமாக
அமர்வோம். இது சத்தியம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.