Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Dec 8, 2021, 12 tweets

#Farmers
சீனாவை சேர்ந்த ஒரு விவசாயி தன்னோட நிலத்தில் கெமிக்கல் கழிவுகளை கொட்டி அவரோட நிலத்தை பால்படுத்தியதற்காக 16 வருஷம் சொந்தமா சட்டம் படித்து அந்த கெமிக்கல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து அந்த வழக்கில் வெற்றியும் பெற்றியிருக்கார் அந்த விவசாயி அவரை பற்றித்தான்

தெரிந்தகொள்ள போகிறோம்,

அந்த விவசாயியோட பேரு Wang சீனாவில் உள்ள Yushutun village அப்படிங்கிற இடத்தில வாழ்ந்துட்டு வராரு,இந்த சட்ட போராட்டம் எப்படி தொடங்குது அப்டினு பார்த்தோம்னா 2001 ஆம் ஆண்டு ஒரு மாலை நேரத்தில wang அவரோட நண்பர்களோட Cards விளையாடிட்டு இருக்காரு அப்பதான் அவரோட

கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள Qihua தொழிற்சாலையில இருந்து கழிவு நீரை வெளியேற்றி இருக்காங்க அது அவரோட நிலத்தையும் அவரோட வீட்டையும் சூழ்ந்து இருக்கு,இந்த நிகழ்வை போலவே தொடரந்து நடந்துட்டு இருந்து இருக்கு,இது குறித்து Wang அங்குள்ள அரசு தெரிவிச்சு இருக்காரு,அவங்க இவர் சொல்றது போல

நடத்துக்கு ஆதாரம் கேட்டு இருக்காங்க.

இவரும் தொடர்ந்து பல்வேறு முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கல,அவங்க கேக்குற ஆதாரத்தை இவருக்கு எப்படி கொடுக்கிறது அப்டினு தெரியல அதன் பிறகுதான் முடிவுக்கு வராரு நாமளே நீதிமன்றத்திலே அந்த நிறுவனத்துக்கு எதிரே வழக்கு தொடுத்தால் என்ன

அப்டினு அவர் வழக்கு தொடுக்க போற நிறுவனம் ஒன்னும் சாதாரண நிறுவனம் கிடையாது அது ஒரு மிக பெரிய கார்பொரேட் நிறுவனம்,அதுவும் இல்லாம இவர் கிட்ட இவ்வளோ பெரிய நிறுவனத்தை எதிர்த்து வாதிடனும் அப்டினா அதற்கு வழக்கறிஞர்கள்க்கே நிச்சயம் நிறைய செலவு ஆகும் என்று உணர்ந்து Wang தானே சட்டம்

படித்து அந்த நிறுவனத்திற்கு எதிரே வாதிட தாயாரனாரு,

ஆனால் Wang வெறும் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் இருந்தாலும்விடாமல் சட்டத்தை பற்றி படிக்கச் ஆரம்பித்தார்,சட்டம் படிக்க புத்தகம் தேவைப்படும் அல்லவா புத்தகம் வாங்க நிச்சயம் அவரிடம் பணம் கிடையாது அதற்காக உள்ளூரில் உள்ள ஒரு

புத்தக நிலையத்தில் சட்டம் சார்ந்த புத்தங்களை படித்தும் அதனை குறிப்பெடுத்தம் படிக்க தொடங்கியுள்ளார் Wang அதற்கு ஈடாக சோளத்தை கொடுத்துள்ளார்.அதன் பிறகு தனது அண்டை நிலத்துக்காரர்களோட ஆதாரங்களை திரட்ட துவங்கியுள்ளார் Wang அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு ஒரு Law firm இவங்களுக்கு உதவ

முன்வந்தது அவங்களோட உதவியோடு Wang Angangxi மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்திற்கு எதிரே வழக்கு தொடுக்குகிறார் அந்த வழக்கும் பல்வேறு வருடங்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் Hearingக்கு வருது பல்வேறு வருடங்களா Wang மற்றும் அவரது அண்டை நிலத்துக்காரர்கள் சேமித்த

ஆதரங்களை அந்த நிறுவனத்திற்கு எதிரா நீதிமன்றத்தில் சமர்பிக்கிறாங்க அதை பார்த்த நீதிமன்றம் முதல் Hearingலேயே அந்த நிறுவனத்தை Wang மற்றும் அவரது குழுவினருக்கு அவங்களோட நிலத்தை சேதப்படுத்தியற்காக 8200000 yuan அபராதம் விதிக்கிறாங்க.

இதை எதிர்த்து அந்நிறுவனம் மேல்முறையுடு செஞ்சு

இருக்காங்க,இதுகுறித்து Wang அவர்களிடம் கேட்கும்போது அவர் சொன்னது இதுதான் ‘We will certainly win. Even if we lose, we will continue to battle.’

Blogilல் படிக்க link.medium.com/tFUgnEFrOlb

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling