சிங்கம்🦁 Profile picture
சிங்கம் சிங்கிளாதா வரும் || வாழு வாழவிடு || #PUSH_YOURSELF || சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு || Belongs to #ஒன்றியஉயிரினங்கள்

Dec 9, 2021, 9 tweets

#கல்வி - 17

தனித்துவம் வாய்ந்த படிப்புகள்

தொல்லியல் படிப்புகள் - Archaeology

படிப்பு:
பெரும்பாலும் டிப்ளமோ, இளங்கலை, முதுகலைப் படிப்பாக தொல்லியல் துறைபடிப்புகள் வழங்கப்படுகிறது.

இதில் சேர, 12 ஆம் வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால்

#ஒன்றியஉயிரினங்கள்

போதுமானது. சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமாக சேர்க்கை நடைபெறுகிறது.

இளநிலை படிப்புகள்:
டிப்ளமோ இன் இந்தியன் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
பேஜ்லர் ஆப் ஆர்ட்ஸ் இன் ஆர்கியாலஜி அண்ட் மியூசியாலஜி.

முதுநிலைப் படிப்புகள்:
எம்.ஏ. இன் ஆர்கியாலஜி.
எம்.ஏ. ஏன்சியன்ட் ஹிஸ்டரி அண்ட் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் இன் ஆர்கியாலஜி.
மாஸ்டர் ஆஃப் பிலாஷபி இன் ஏன்சியன்ட் ஹிஸ்டரி இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி.
போஸ்ட் கிராஜிவேட் டிப்ளமோ இன் ஆர்கியாலஜி.

டாக்டர் ஆஃப் பிலாஷபி இன் ஏன்சியன்ட் இந்தியன் ஹிஸ்டரி கல்ட்சர் அண்ட் ஆர்கியாலஜி

படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை.
சென்னை கிறிஸ்டியன் கல்லூரி, சென்னை.
சென்னை பல்கலைக்கழகம்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் - வாரணாசி.

ஆஜ்மீர் பல்கலைக்கழகம் - ராஜஸ்தான்.
பாட்னா பல்கலைக்கழகம் - பாட்னா.
பஞ்சாப் பல்கலைக்கழகம் - சண்டிகர்.
அலகாபாத் பல்கலைக்கழகம்.
தில்லி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெரிடேஜ் ரிசர்ச் & மேனேஜ்மெண்ட், புது தில்லி
பர்காதுல்லா விஷ்வவித்யாலயா, போபால்
குருசேத்ரா பல்கலைக்கழகம், குருசேத்ரா (ஹரியானா)

இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்கியாலஜி, ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, புது தில்லி.

வேலை வாய்ப்புகள்:

இந்த துறையில் படிப்பை முடிக்கும்பட்சத்தில் உலகமே அழிந்தாலும் அதில் நீங்கள் பிழைத்தால் உங்களுக்கு வேலை உண்டு. இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் தொல்பொருள் ஆய்வு மையத்தில் இருந்து,

மத்திய அரசுப் பணி, ஆவணக் காப்பகங்கள், மியூசியங்கள், ஆர்ட் கேலரிகள், கல்லூரிகளில் பேராசிரியர், ஆராய்சி என பல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

வேலை என்ன?
தொல்பொருள் தளங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தல்.
கல், உலோகம், எலும்புகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட

கலைப்பொருட்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல்.
முத்திரைகள், கல்வெட்டுகள், நினைவு சின்னங்கள் மற்றும் கட்டிடங்களை ஆய்வு செய்வது.

வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள்:
ஆர்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா (ASI)
நேஷனல் கெரிடேஜ் ஏஜென்ஸிஸ்
இந்தியன் கவுன்சில் ஆஃப் ஹிஸ்டரிக்கல் ரிசர்ச் (ICHR)

அரசு மற்றும் தனியார் மியூசியம் மற்றும் கல்சுரல் கேலரி
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்.

சம்பளம்:

இந்த வகையான படிப்பை முடிக்கும் பட்சத்தில் ரூ.2.5 லட்சத்தில் இருந்து 3.5 லட்சம் வரை பெறலாம். அனுபவத்தின் அடிப்படையில் ரூ.5 லட்சத்தில் இருந்து 8 லட்சம் வரை பெற முடியும்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling