#கல்வி - 21
தனித்துவம் வாய்ந்த படிப்புகள்
துணை மருத்துவ படிப்புகள்- 2
(Paramedical Courses)
#ஒன்றியஉயிரினங்கள்
1. மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி
இது மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் மூலம் நோய்களை கண்டறிதல், நோயினை பகுத்து ஆராய்தல், மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆய்வுக்கூடத்தில் தேவையான பரிசோதனைகளை செய்து கொடுப்பதை பற்றிய படிப்பாகும்.
உடலில் உள்ள நீர் அளவு, ரத்தத்தின் அளவு, உப்பின் அளவு, சர்க்கரை அளவு, சதை, கெமிக்கல் அனாலிஸ், உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை கண்டறியும் முறைகள், நோய் கிருமிகள் கண்டறிதல் போன்றவற்றை பற்றி இந்த படிப்பில் மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படுகிறது.
லேப் டெக்னிசியன் எனப்படும் இவர்கள் மருத்துவமனைகளில் ஹெமாட்டாலஜி, இம்யூனாலாஜி, கிளினிக்கல் பேதாலஜி, பிளட் பேங்க் டெக்னாலஜி, மாலிகுலார் பேதாலஜி, பயோ கெமிஸ்டரி, மைக்ரோபயாலஜி மற்றும் சிரோலஜி உள்ளிட்ட பிரிவுகளிலும் மற்றும் மருத்துவ பரிசோதனை மையங்களிலும் பணியாற்ற முடியும்.
இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு ஒன்றும், இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு ஒன்றும் உள்ளன.
1. B.Sc : Medical Laboratory Technology
3. DMLT : Diploma in Medical Laboratory Technology
2. பெர்பியூஷன் டெக்னாலஜி
இது இதய செயல்பாடு மற்றும் அதன் இயக்கம் பற்றிய படிப்பாகும். இதய அறுவை சிகிச்சையின் போது உடலின் ரத்த ஓட்டம் நின்றுவிடாமல் இருக்கவும், சீராக செயல்படுகின்றதா என்பதை கண்காணிக்கவும் ‘பெர்பியூஷனிஸ்ட்’ உதவுகின்றனர்.
அதனால், பெர்பியூஷனிஸ்ட் இல்லாமல் இருதய அறுவை சிகிச்சை நடைபெறுவதில்லை.
இவர்களின் தேவை இதய மருத்துவர்களுக்கு இணையானது என்பதால் மருத்துவ துறையில் இவர்களுக்கான தேவைகள் அதிகம். இதய சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் இவர்களுக்கான வேலை வாய்ப்பு அதிகம்.
இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு ஒன்று உள்ளது.
1. B.Sc : Cardiac-Pulmonary Perfusion Technology
3.டயாலிசிஸ் டெக்னாலஜி
மனித உடலின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமையும் செயலான இரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை செய்யும் சிறுநீரகங்கள் சேதமடைந்தாலோ அல்லது
பிற நோய் தொற்றுகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிறுநீரகங்கள் செயல் இழந்தாலோ மேற்கொள்ளப்படும் சிகிச்சையான டயாலிசஸ் பற்றிய படிப்பாகும். இப்படிப்பில் டயாலிசஸ் இயந்திரத்தை பொருத்துதல், ஸ்டெர்லிலைசேஷன் கலவை தயாரித்தல், நோயாளியை கண்காணித்தல், டயாலிசஸ் இயந்திரத்தை இயக்குதல்,
மேற்பார்வை செய்தல், இரத்த ஓட்டத்தை கணக்கிடுதல், இயந்திரத்தை சுத்தம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
டயலாசிஸ் சிகிச்சைக்கு டயாலிசஸ் டெக்னிஷியன்களின் பணி அவசியம் என்பதால் மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.
இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு ஒன்றும், ஓராண்டு சான்றிதழ் படிப்பு ஒன்றும் உள்ளன.
1. B.Sc : Dialysis Technology
2. Dialysis Technology
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.