அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jan 4, 2022, 8 tweets

#மாமரம் வாழை மரத்தைப் போல மா மரத்தின் இலை, மலர்கள், காய், கனி, வேர்ப் பட்டை மற்றும் பிசின் உள்ளிட்ட அத்தனை பாகங்களும், மனிதர்களின் உடல் நலனுக்கு அரிய தீர்வாகிறது. கோவில்களில் தல விருட்சமாக, பூஜைகளில் கலசங்களின் காப்பாக, தமிழர் பண்டிகைகளில் தோரணங்களாக மாவிலைகள் ஆன்மீகத்திலும்,

சித்த மருத்துவத்திலும் சிறப்பு வாய்ந்தது. மாவிலைகள் சிறந்த கிருமி நாசினி, வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகும். அதனால் தான் இந்து சமய திருவிழாக்கள், திருமணம், பிறந்த நாள் போன்ற மக்கள் கூடும் சிறப்பு நாட்களில் வீட்டு முகப்பில் மாவிலை தோரணம் கட்டப்படுகிறது. கோவில்கள், கோவிலைச்

சுற்றியுள்ள வீதிகளில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டியே இருப்பது அந்தக் கால வழக்கம். கோமியம் எனும் பசுமாட்டின் சிறுநீர் கலந்த கலவையை மாவிலையைக் கொண்டு வீடுகளில் தெளிக்கும் போது, கிருமிகள் அகற்றப் படுகின்றன. மாவிலையின் மருத்துவ குணம், பயன்பாடு பற்றி தனி பதிவே போடலாம், ஏராளமானவை!

காரைக்கால் அம்மையாருக்கு, சிவபெருமான் அளித்தது, இந்த மாங்கனியே! ஞானப்பழம் என்று எல்லோராலும் அழைக்கப்படுவது முக்கனிகளின் ஒன்றான மாங்கனியைத் தான். மாவிலை சிவபெருமானின் திருச்சடையாக கருதப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஈஸ்வரர் கோயிலில் ஒரு மாமரத்தில் மூன்று வகை சுவையுள்ள மாங்கனிகளை

தரும் ஆச்சர்யம் நடக்கிறது. காஞ்சிபுரத்தின் தல விருக்‌ஷமே மாமரம் தான். மாவிலை மங்களத்தையும், ஐஸ்வர்யத்தையும் தரும். கலச குடங்களுக்கு மாந்தலையையே வைப்பர். அதைக் கொண்டு தான் நம் மீது இருக்கும் துஷ்ட சக்திகளை ஐயர் விரட்ட தீர்த்தத்தை தெளிப்பர். வீட்டில் மாமரம் இருந்தால் பார்வதி தேவி,

சிவன், லட்சுமி போன்ற தெய்வங்கள் இருக்கும் என்று ஐதீகம். மாந்தலையை தானமாக கொடுத்தால் புத்திர பாக்யம் கிடைக்கும். மாங்கனியை தானமாக கொடுத்தால் சகல செல்வங்களும் கிடைக்கும். நம் வீட்டில் சிறிது இடம் இருந்தாலும் ஒரு மாங்கன்று வாங்கி நடுவோம். மாவிலை தோரணங்களால் வாயிலை அலங்கரிப்போம்.

தமிழர்/இந்து பாரம்பரியத்தை காப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling