அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jan 13, 2022, 7 tweets

#சொர்க்கவாசல் #வைகுண்ட_ஏகாதசி
விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் மஹாவிஷ்ணுவின்

சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள். பகவானே தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால்

எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும் என்று பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று எண்ணி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர். எம்பெருமானே,

தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சா வதாரத்தில் தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்

என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது. எம்பெருமானுக்கு விரதம் இருந்து சொர்க வாசலை கடந்து செல்வோருக்கு சொர்க்கலோக வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்

அனைத்து விஷ்ணுவின் ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சிறப்பாக நடைபெறும். வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் தரும். வைகுண்ட ஏகாதசி நன்னாளில், “ஓம் நமோ நாராயணாய” என்ற அஷ்டாக்ஷர

மந்திரம் உச்சரித்து, ஸ்ரீமத் பாகவத புராணம் ஸ்ரீமத் ராமாயணம் பாராயணம் செய்தால் பாவங்கள் நீங்கி, முக்தி அடைய முடியும் என்கின்றனர் நம் ஆசார்யர்கள்.
ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம்🙏🏾

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling