டேனியப்பா Profile picture
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்

Jan 17, 2022, 6 tweets

1. புத்தம் புது காலை விடியாதா...
என்றொரு அந்தாலஜி அமேசான் ப்ரைமில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதில் "மெளனமே பார்வையாய்" எனும் மூன்றாவது எபிசோட் மதுமிதா இயக்கத்தில், நதியா - ஜோஜு ஜார்ஜ் நடிப்பில், கிட்டத்தட்ட வசனமே இல்லாமல் அசத்தி... பரவலாய் கவனத்தை பெற்றிருந்தது.

ஒரு சாதாரண

2. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிணக்கு, அதன் பிறகான வீம்பு, அது உடையும் அந்தத் தருணம், யாரும் யாரிடமும் மன்னிப்புக் கூட கோர வேண்டியிராத அவர்கள் உள்ளாடும் காதல். இதையெல்லாம் பகிர வார்த்தை கூடத் தேவையில்லை என்பதை மிக அழகாக காட்டியிருந்தனர்.

கதையே இல்லாத இந்த

3. எபிசோடின் கதை கூட எழுத்தாளர் சுஜாதாவுடையது என்று நினைக்கிறேன்.

ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவின் திருமண ஃபோட்டோவைக் காட்டி அவர் மனைவியிடம் காட்டிக் கேட்டபோது, அவர் சொன்னார்.

“1963 ஜனவரி 28 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சத்திரத்தில் எங்க கல்யாணம் நடந்தது. கல்யாணக் கோலத்தில் நாங்க

4. இரண்டு பேரும்.... எனக்குப் பிடிச்ச படம் இது..!” என்று கூறிய அவர் சுஜாதா பகிர்ந்த அடுத்த விஷயம் அப்போது மிகப் பிரபலம்.

“ஐம்பது வருடம் அவரோடு குடும்பம் நடத்தியிருக்கிறேன்.. எங்களுக்குள்ளே அடிக்கடி சண்டை வரும்.. நான் கோபமா கத்தினாலும் அவர் அதிர்ந்து பேசமாட்டார்.. ஏதாவது புத்தகம்

5. படிக்க ஆரம்பித்து விடுவார். கொஞ்ச நேரம் கழித்து ‘ஒரு கப் காபி கொடு’ என்பார். அவ்வளவுதான்.. சண்டை முடிந்துவிடும்.!"

"ஒரு கப் காபி கொடு.!"

சண்டையை முடிவுக்கு கொண்டு வர , எவ்வளவு சிம்பிளான கிளைமாக்ஸ்...!

இதுதான் இயக்குனர் மதுமிதாவையும் இன்ஸ்பயர் செய்திருக்க வேண்டும்.

6. எங்கேயாவது கிரெடிட் கொடுத்திருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.
🙏🏼

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling