🌴PANDA 🌴 Profile picture
Movies & Series -Reviewer 🎬 PS5 Gamer 🚀 Cinema Lover 📽 @Sai_Pallavi92 ♥️

Jan 29, 2022, 15 tweets

சூப்பரான பக்கா ஆக்ஷன் சீரிஸ் பத்தி ஒரு சின்ன த்ரேட். TAMIL🚫
LINK -DM
1.THE PUNISHER 2017 NETFLIX
2 Seasons / 8.5 Imdb
இது ஒரு பழி வாங்குற கதை.ரொம்ப ரொம்ப மிரட்டலா இருக்கும். ஆக்ஷன் சீன்ஸ்,ஷார்ப்பான திரைக்கதை, த்ரில்லிங்கான விஷயம்னு சீரீஸ் வேற லெவல்ல இருக்கும் must watch 👌

PERSON OF INETERST 2011
PRIME / 5 Seasons / 8.4 Imdb

Christopher Nolan தம்பி இயக்கத்துல வந்த மிரட்டலான பக்கா த்ரில்லிங் ஆங்ஷன் சீரிஸ் இது. தப்பு நடக்காம முன்னடியே தடுக்கிற இரண்டு பேர் இதான் ஒன்லைன். ஆனா உள்ள எக்கச்சக்கமான விஷயம் இருக்கு.
வேற லெவல் சீரீஸ் இது பாருங்க.

BANSHEE 2013 / HOTSTAR
4 Seasons / 8.4 Imdb

ஜெயில்ல இருந்து, பல வருஷம் கழிச்சி வெளிய வரும் நம்ம ஹீரோ, தன்னோட காதலிய தேடி போற இடத்துல, போலிஸ்காரனா வேஷம் போடுறாரு. அதுக்ப்புறம் நடக்குறதை செம த்ரில்லிங்கா, ஆக்ஷன் க்கு பஞ்சமே இல்லாம சூப்பரா சொல்லி இருப்பாங்க.
Must watch 👌

HANNA 2019 / PRIME
3 Seasons / 7.6 Imdb

ஒரு மனித ஆராய்ச்சி கூடத்தில இருந்து , தன்னொட குழந்தையை காப்பாத்தி,ஒரு காட்ல வளர்த்து அந்த குழந்தைக்கு எல்லா வித்தையும் கத்து கொடுத்து வில்லன்களை வேட்டையாட வைக்கிற கதை. விறுவிறுப்பா த்ரில்லிங்கா ஆகஷன் சீன்ஸ் மிரட்டும். கண்டிப்பா பாருங்க

THE BOYS 2019 / PRIME
2 Seasons / 8.7 Imdb 🔞
வித்தியாசமான கான்செப்ட்.
சூப்பர் ஹீரோஸ் கெட்டவங்க, அவங்களை பழிவாங்க துடிக்கிற நார்மல் காமேன் பாய்ஸ். செம ஜாலியா, விறுவிறுப்பா, த்ரில்லிங்கா, ஆக்ஷன் சீன்ஸ் நிறைஞ்ச ஒரு பக்கா ஆக்ஷன் சீரீஸ் இது. கண்டிப்பா பாருங்க.

ARROW 2012 / NETFLIX
8 Seasons / 7.5 Imdb
இது ஒரு சூப்பர் ஹீரோ கதை.
இரண்டு கால கட்டத்துல நடக்கிற மாதிரி திரைக்கதை ரொம்பவே த்ரில்லிங்கா, சூப்பரா இருக்கும். ஆக்ஷன் சீன்ஸ் லாம் வேற லெவல்ல இருக்கும். ஹீரோ ஒரு cascade player ,டூப் போடாம எல்லாமே ரியலா பண்ணி இருக்காரு. Must watch 👌

UMBRELLA ACADEMY 2019
NETFLIX/ 3 Seaons / 8.0 IMDb
ஒரு ரொம்ப வித்தியாசமான சூப்பர் ஹீரோ கதை. கதையை சொன்னா spoil ஆகும்.
கதையா, திரைக்கதையா , டீம் வொர்க்கா, சீரிஸ் வேற மாதிரி இருக்கும்.ஆரம்பிச்சா கண்டிப்பா மொத்த சீசனையும் முடிச்சிட்டு தான் போவிங்க. அப்படி இருக்கும்.
Must watch👌

ALTERED CARBON 2018 /NETFLIX
2 Seasons / 8.0 Imdb

ஒரு பணக்காரன், சிறையில இருக்கிற ஒரு ஆன்மா வுக்கு புதுசா ஒரு உடல் கொடுத்து , உயிர்ப்பிச்சி, தன்னை வருங்காலத்தில யாரோ கொல்ல வறாங்க, அது யாருனு கண்டுபிடிச்சி சொல்ல சொல்றாரு. அதுக்கப்புறம் நடக்கிற மிரட்டலான விஷயங்கள் சீரிஸ் 👌

BAND OF BROTHERS 2001
HOTSTAR / 1 Season / 9.4 Imdb

இரண்டாம் உலக போர்ல, ஒரு குறிப்பிட்ட அமெரிக்க ராணுவ குருப்பை சுத்தி நடக்கிற கதை.
ராணுவ பட ரசிகர்களுக்கு இது ஒரு டீரிட். ரொம்ப பிரமாண்டமா, எடுத்து இருப்பாங்க.
போர் காட்சிகள் ரொம்ப அருமையா இருக்கும். கண்டிப்பா பாருங்க👌

STRIKE BACK 2010
8 Seasons / 8.2 Imdb

அமெரிக்க ராணுவம், தன்னோட இரண்டு ரகசிய ஏஜென்ட்ஸை
தீவிரவாதிகளை பிடிக்க அனுப்புற மிஷன் தான் சீரிஸ்.
ரொம்பவே அருமையா இருக்கும்.
ஒவ்வொரு எபிசோட்டும் ஒரு படம் பாக்கிற மாதிரி விறுவிறுப்பா போகும். ஆக்ஷன் க்கு பஞ்சமே இருக்காது.must watch👌

@threadreaderapp kindly roll this one please

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling