நம்பி Nambi - Vote for INDIA Profile picture
திராவிடன் | Dravidian | நாளும் ஒரு திருக்குறள் | Fitness | IT Infrastructure | Heritage | தமிழ் | உணவு | Food | ஊர் சுற்றல் | Travel

Feb 7, 2022, 18 tweets

#அண்ணா_சாலைத்_திரையரங்குகள்

சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரையில் இருந்த/இருக்கும் திரையரங்குகளைப் பற்றி இவ்விழையில் பார்ப்போம்.

மேம்பாலத்திலிருந்து தியாகராயநகரை நோக்கிச் செல்லும் சாலைக்கும் காமராஜர் அரங்கை ஒட்டிய சாலைக்கும் நடுவே அமைந்த தீவில் இருந்ததுதான் +

T.SUNdarrao Naidu உருவாக்கிய SUN/சன் திரையரங்கம். பாகவதரின் பவழக்கொடி இங்குதான் திரையிடப்பட்டது.

1989-இல் இடிக்கப்பட்ட பிறகு இப்போது இங்கிருப்பது படத்திலிருக்கும் இக்கட்டிடம் மட்டுமே. +

மேம்பாலத்தை ஒட்டி அதன் மேற்கு ஓரமாக வடக்கு நோக்கி நடந்து மேம்பாலத்தின் நடுசதுக்கத்தில் இச்சிலையைக் காண்கிறோம்.

எத்தனையோ ஏழைகளை உருவாக்கிய கிண்டி குதிரைப்பந்தயத்தைத் தடை செய்ததன் நினைவாக உருவானதிது. +

மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து நாம் காணும் திறந்தவெளியில் இருந்ததுதான் Safire, Emerald, Blue Diamond இவற்றை உள்ளடக்கிய சென்னையின் முதல் Multiplex. ஈராலால் வீகம்சீ என்ற நகைவணிகர் தன் கடையில் பணிபுரிந்தோர் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் கேளிக்கைத் தேவைகளுக்காக இதனை உருவாக்கினார் +

Safire-தான் இந்தியாவின் முதல் (1964) 70 mm திரையரங்கம்; Emerald திரையரங்கின் வித்தியாசமான காட்சி நேரங்கள் - 1,4,7,10; Blue Diamond திரையங்கில் காலை 9 மணி தொடங்கி நள்ளிரவு வரை தொடர்காட்சிகள் நடந்துகொண்டேயிருக்கும்; எப்போது வேண்டுமானாலும் உள்நுழைந்து எந்த நேரத்திலும் வெளியே வரலாம்+

நவரத்னா என்ற குஜராத்தி/ராஜஸ்தானி உணவரங்கும் 9 Gems என்ற Disco அரங்கும் இதே வளாகத்திலிருந்தன.

இக்குழுமமே Silver Sands என்ற கடற்கரை விடுதியையும் நடத்தியது.

நாட்டின் முதல் Bubble elevator இங்குதான் இருந்தது.

1994-இல் மூச்சை நிறுத்திப் பின் தரைமட்டமானதிந்த வளாகம். +

இங்கிருந்து மேலும் வடக்கில் நகர்ந்து கிரீம்சு சாலையைக் கடந்து, இதோ ஆனந்த் திரையரங்கம் இருந்த இடத்திற்கு வந்துவிட்டோம்.

1963-இல் உமாபதி (அக்னி நட்சத்திரம் வில்லன்) என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட திரையரங்கு இது. உள் அலங்காரங்களைப் பார்த்துப் பலமுறை வியந்திருக்கிறேன். +

"இராஜராஜ சோழன்" படத்திற்காக தஞ்சைப் பெரியகோயிலின் செட்டைத் திரையரங்கின் வெளியே அமைத்திருந்தாராம்.

பிற்காலத்தில் Little Anand என்ற சிறிய அரங்கையும் சேர்த்தார்.

இத்திரையரங்கு இருந்தவிடம் இப்போது ஒரு தங்கும் விடுதியாக (Ibis Chennai cities centre) உள்ளது +

சாலையைக் கடந்து வடக்கில் நடந்து LIC-ஐத் தாண்டியவுடன் நம் நினைவுக்கு வருவது Globe என்று அழைக்கப்பட்டுப் பின் அலங்கார் எனப் பெயர் மாற்றம் பெற்ற திரையரங்கம். பல ஜாக்கி சான் படங்களை இங்கு கண்டுகளித்திருக்கிறோம். குஷால்தாசு குடும்பத்தால் ஆரம்பிக்கப்பட்டு 88-இல் மூச்சை நிறுத்தியது +

Automobile வணிகச்சாலையான General Patters (G P) Road-இன் வடக்கு மூலையில் 1917-இல் ஆரம்பிக்கப்பட்ட பார்சிகளுக்குச் சொந்தமான வெலிங்டன் திரையரங்கம் இருந்தது. "அவ்வையார்" படம் இங்குதான் வாசன் அவர்களால் வெளியிடப்பட்டது.

இதுவும் இப்போது வணிக வளாகமாக மாறிவிட்டது. +

இதே G P சாலையின் உள்ளே Midland, Leo திரையரங்குகள் முறையே James Bond, Hindi மொழித் திரைப்படங்களைப் பெரும்பான்மையாகத் திரையிடும். ஜெயப்ரதா எனப் பெயர் மாற்றமடைந்து பின் இத்திரையரங்குகளும் மறைந்தே போயின

பழைய பிளாசா திரையரங்கு இருந்த இடத்தில்தான் இப்போது சுகுண விலாச சபா இயங்குகிறது +

அடுத்து நாம் காண்பது இந்தியாவிலேயே முதன்முதலாக 4 அரங்கங்களைக் கொண்ட தேவி வளாகம். Architect கொண்டு 70களில் வடிவமைக்கப்பட்ட இத்திரையரங்கம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.+

ஆனந்த் திரையரங்கத்தை உருவாக்கிய உமாபதி அவர்கள் கட்டி பிற்காலத்தில் சிவாஜி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு "சாந்தி" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அரங்கமே அடுத்து உள்ளது

சிவாஜி அவர்கள் நடித்த மொத்தப்படங்களையும் பக்கச்சுவற்றில் பொறித்திருந்தனர்.

இதுவும் இன்று வணிகவளாகமே... +

"களியாட்டங்களுக்குப்" பெயர்போன Pals அரங்கைத் தாண்டி அண்ணா திரையரங்கம். நம் வீட்டின் கூடத்தை விடச் சற்றே பெரிதோ என எண்ணக்கூடிய அளவு சிறிய அரங்கம். இன்றும் இயங்குகிறது. +

சாலையைக் கடந்து நாம் காண்பது Casino. முகப்பை இப்போது மாற்றியிருந்தாலும் எனக்கு மிகப்பிடித்தது இது.

Escape from Alcatraz, Jaws போன்ற படங்கள் திரையிடப்பட்டு இன்னும் இயங்கும் (தெலுங்குப் படங்கள்) அரங்கு இது. +

பக்கத்திலேயே இருந்ததுதான் Gaiety. 1915-இலேயே துவங்கப்பட்டு நாம் இருவர் போன்ற திரைப்படங்களை வெளியிட்டு விடுதலை வரலாற்றில் இடம் பெற்ற அரங்கு இது. இதனைக் கட்டிய இரகுபதி அவர்கள் தங்கசாலையில் Crown, புரசையில் Globe (Roxy) அரங்குகளையும் அமைத்தார்

வணிக வளாகமாக மாறி வெகு நாளாயிற்று. +

மீண்டும் அண்ணா சாலையில் வந்து அஞ்சலகம் பக்கத்தில் உள்ள Philatelic Bureau அடைகிறோம். இங்குதான் முதன்முதல் Electric theatre 1913-இல் Warwick Major & Reginald Eyre போன்றோரால் உருவாக்கப்பட்டது. இக்கட்டிடத்தை இன்றும் அஞ்சல் துறையினர் பாதுகாத்து வைத்துள்ளது பாராட்டுக்குரியது +

நேரம் செலவழித்து என்னுடன் அண்ணா சாலைத் திரையரங்க வரலாற்று உலா வந்த நண்பர்களுக்கு நன்றி...

தொடர்ந்து இணைந்து பயணிப்போம்...🙏💚😊

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling