நம்பி Nambi - Vote for INDIA Profile picture
திராவிடன் | Dravidian | நாளும் ஒரு திருக்குறள் | Fitness | IT Infrastructure | Heritage | தமிழ் | உணவு | Food | ஊர் சுற்றல் | Travel
Mar 11, 2022 11 tweets 6 min read
#சென்னையின்_பாலங்கள்
பஞ்ச காலத்தில் (1806-37) மக்களுக்கு வேலை கொடுத்துக் காப்பாற்றுவதற்காக மசூலிப்பட்டணத்திலிருந்து மரக்காணம் வரை தோண்டப்பட்டது பக்கிங்காம் கால்வாய். இக்கால்வாய் மற்றும் இங்கு நீண்டகாலமாக மழைக்கால ஆறாக ஓடும் கூவம் ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலங்களைப் பார்ப்போம் + இப்போது நாம் நிற்பது கன்னிமாரா விடுதியின் மேற்கு வாயிலின் பக்கம் உள்ள கூவமாற்றுப் பாலத்தின் கரையில் (maps.app.goo.gl/1Nvef4FvkKL6VH…). 1825-இல் கட்டப்பட்ட 5 கண் பாலமிது... எத்திராஜ் (Commander-in-Chief Rd)
சாலையையும் அண்ணா சாலையையும் இணைக்கிறது. இப்பாலத்தைக் கட்டியவர் #Captain_Cotton+
Feb 7, 2022 18 tweets 5 min read
#அண்ணா_சாலைத்_திரையரங்குகள்

சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரையில் இருந்த/இருக்கும் திரையரங்குகளைப் பற்றி இவ்விழையில் பார்ப்போம்.

மேம்பாலத்திலிருந்து தியாகராயநகரை நோக்கிச் செல்லும் சாலைக்கும் காமராஜர் அரங்கை ஒட்டிய சாலைக்கும் நடுவே அமைந்த தீவில் இருந்ததுதான் + T.SUNdarrao Naidu உருவாக்கிய SUN/சன் திரையரங்கம். பாகவதரின் பவழக்கொடி இங்குதான் திரையிடப்பட்டது.

1989-இல் இடிக்கப்பட்ட பிறகு இப்போது இங்கிருப்பது படத்திலிருக்கும் இக்கட்டிடம் மட்டுமே. +
Jan 20, 2022 16 tweets 4 min read
#நீதிக்கட்சி
#தியாகராயநகர்

திராவிட இயக்கத்தின் தொட்டிலான நீதிக்கட்சி உருவாக்கிய தியாகராயநகரைச் சுற்றி வருவதன் மூலம் அவ்வியக்கத்தினைப் பற்றியும் முன்னோடிகளைப் பற்றியும் அறிவோம்.

1920களில் நீண்ட ஏரியாக இருந்தப் பகுதியை ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி குடியிருப்பாக மேம்படுத்தியது + பனகல் பூங்காவின் மேற்குப்புறத்திலிருந்து நம் கற்பனைப் பயணத்தைத் துவக்குவோம். இந்த சாலை சுமந்து நிற்கும் பெயர்க்குச் சொந்தக்காரர் - டாக்டர்.உஸ்மான். தஞ்சையைச் சேர்ந்த யுனானி மருத்துவர்; அரசு செயற்கவுன்சிலின் உறுப்பினர்; ஆங்கிலேயர் மட்டுமே வகித்திருந்த "கவர்னர்"-ஆக இருந்தவர் +